1) கர்நாடக அரசு
போக்குவரத்து கழகம் சார்பாக பெங்களூரு வில் இருந்து சென்னைக்கு பயோ டீசலில்
இயங்கும் பேருந்து சேவை நேற்று தொடங்கப்பட்டது.
2) கணினி கல்வியறிவு
பெற்ற மாநிலங்களில் நாட்டில் கேரளா முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழக அரசு
பள்ளிகளில் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தரப்படாததால், 39 ஆயிரம் பிஎட் கணினி
பட்டதாரிகள் வேலையில்லாமல் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.
3) குமரி மாவட்டம்
காப்பிக்காட்டில் தொல்காப்பியரின் வெண்கல சிலை திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி
வழங்கியுள்ளது.
4) பொதுத்துறை வங்கிகள்
மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள வசதியாக அரசு முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு தொகை முதலீடு செய்வது என்பதை நிதி அமைச்சகம் இறுதி
செய்து விட்டது. அடுத்த சில வாரங்களில் இந்த முதலீட்டு நடவடிக்கைகள் இருக்கும்
என்று தெரிகிறது.
5) ஃபுகுஷிமா அணு உலை
விபத்து காரணமாக பசிபிப் பெருங்கடலில் ஏற்பட்ட அணுக்கதிர் வீச்சு குறைந்து,
தற்போது இயல்பு நிலைக்குத் திரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment