Thursday 22 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 23rd September

உலகம் :

உலகின் சிறந்த பல்கலை பட்டியலில் 31 இந்திய கல்வி நிறுவனங்கள்
தி டைம்ஸ் ஹையர் எஜுகேசன் அமைப்பு சார்பில் 2016-17-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 980 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து 31 பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்துள்ளன.



இப்பட்டியில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது. 5 முறை முதலிடம் பிடித்த கலிபோர்னியா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் 2-வது இடத்திலும், ஸ்டான்போர்டு பல்க லைக்கழகம் 3-வது இடத்திலும் உள்ளன.
இப்பட்டியலில் முதல் 400 இடங்களுக்குள் 2 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) 215 முதல் 300 இடங்களுக்கான பட்டியலிலும், பாம்பே ஐஐடி 351- 400 இடங்களுக்கான பட்டியலிலும் இடம்பிடித்துள்ளன. முதல் 200 இடங்களில் இந்திய பல்கலைக்க ழகங்கள் இடம்பெறவில்லை.
இந்தியா :
கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்
காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவை அவசர‌க் கூட்டம் இன்று கூடுகிறது.
கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்ட அமைச்சர் ஜெயசந்திரா உள்ளிட் டோருடன் முதல்வர் சித்தராமையா கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை நேற்று சந்தித்தார். அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதற்காக சிறப்பு சட்டப் பேரவை மற்றும் சட்டமேலவை கூட்டத்தைக் கூட்ட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து சிறப்பு சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவை அவசர‌க் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. இதில் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி
இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய ஏவுகணைகளை பாதுகாப்பு மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (டிஆர்டிஒ) உருவாக்கி வருகிறது. அந்த வகையில் இஸ் ரேல் கூட்டுறவுடன் அணு ஆயுதங் களைச் சுமந்தபடி எதிரிகளின் வான்வழித் தாக்குதலை இடை மறித்து தாக்கும் திறன் படைத்த ‘பராக் 8’ ஏவுகணை சோதனை நேற்று முன்தினம் ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தரையில் இருந்து வானில் உள்ள இலக்கு களை துல்லியமாக தாக்கும் திறன் படைத்த மற்றொரு நீண்ட தூர அதிநவீன ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட் டது. இந்த ஏவுகணையும் இஸ்ரேல் கூட்டுறவுடன் உருவாக்கப்பட்டுள் ளது. இந்த ஏவுகணை நேற்று இரு முறை சோதிக்கப்பட்டது.
பிரதமர் வசிக்கும் ரேஸ் கோர்ஸ் சாலை பெயர் மாற்றம்
டெல்லியில் பிரதமரின் அதிகாரப் பூர்வ இல்லம் அமைந்திருக்கும், ரேஸ் கோர்ஸ் சாலையின் பெயர், லோக் கல்யாண் மார்க் என மாற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் கள் சந்திப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளி யிடப்பட்டது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், புதுடெல்லி மாநகராட்சி தலைவர் நரேஷ்குமார், பாஜக எம்பி மீனாட்சி லேகி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
“பிரதமர் மோடி உட்பட பலரும் மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டே அரசியலுக்கு வந்தோம். மக்கள் நலனை விட பெரியது வேறில்லை. எனவே, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வசிக் கும் இச்சாலைக்கு, லோக் கல்யாண் (மக்கள் நலன்) எனப் பெயரிடுவது பொருத்தமானது” என பாஜக எம்பி லேகி குறிப்பிட்டார்.
தமிழ்நாடு : 
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் 15.91 லட்சம் பேர் விண்ணப்பம்: ஒரு காலிப் பணியிடத்துக்கு 291 பேர் போட்டி
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 15 லட்சத்து 91 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள் ளனர். மொத்தம் 5,451 காலி யிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்ப தால், ஒரு காலியிடத்துக்கு 291 பேர் போட்டியிடுகிறார்கள்.
தமிழக அரசின் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச் சர் (கிரேடு-3) மற்றும் வரித் தண்டலர், நிலஅளவர், வரை வாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்பும் வகை யில் குரூப்-4 தேர்வுக்கான அறி விப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி வெளியிட்டது. அறிவிப்பு வெளியான தினத்தில் இருந்தே ஆன்லைன் பதிவும் தொடங்கியது. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுகலை பட்ட தாரிகளும் போட்டிப்போட்டு விண் ணப்பித்தனர்.
விளையாட்டு :
விஜய், புஜாரா அரைசதங்களுக்குப் பிறகு அசத்திய நியூஸிலாந்து; இந்தியா 291/9
500-வது டெஸ்ட் என்று கடும் விளம்பரப்படுத்தப்பட்ட நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்ட முடிவில் ஜடேஜா 16 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கான்பூர் பிட்ச் பற்றிய வர்ணனையிலேயெ 280-300 ரன்கள் என்ற முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் நல்ல ஸ்கோர் என்று தெரிவிக்கப்பட்டது ஆச்சரியமளித்தது, காரணம் முதலில் இந்தியா பேட்டிங், 400 ரன்கள்... அஸ்வின், ஜடேஜா, ரிவர்ஸ் ஸ்விங்... வெற்றி என்ற ‘மேட்ரிக்ஸ்’ ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் நடந்தது என்ன? 154/1 என்ற நிலையிலிருந்து இந்திய அணி அடுத்த 137 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததே நடந்தது.
வர்த்தகம் :
10 கோடி வாடிக்கையாளர்களை எட்டி பிளிப்கார்ட் சாதனை
இடெய்ல் நிறுவனமான பிளிப்கார்ட் 10 கோடி வாடிக்கையாளர்கள் என்கிற எண்ணிக்கையை எட்டியுள்ளது. இந்திய ஆன்லைன் சந்தையில் பதிவு செய்யப்பட்ட 10 கோடி வாடிக்கையாளர்கள் என்கிற எண்ணிக்கையை முதன் முதலில் பிளிப்கார்ட் எட்டியுள்ளது.
இது குறித்து பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு வெளியே ஒரே நாட்டில் 10 கோடி வாடிக்கையாளர்கள் என்கிற இலக்கை நிறுவனம் எட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
2007ல் முதன் முதலில் எங்களது முதல் வாடிக்கையாளருக்கு முதல் புத்தகத்தை விற்பனை செய்ததி லிருந்து தற்போது வரை எங்க ளது பயணத்தில் எப்போதும் உயர் தரமான பொருள் வாங்கும் அனுப வத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளோம்.

No comments: