Tuesday 27 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 28th September

உலகம் :

சார்க் மாநாட்டை புறக்கணிக்கிறது இந்தியா
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்பதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நமது பிராந்தியத்தில் எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பது, சார்க் உறுப்பு நாடுகளின் உள் விவகாரங்களில் ஒரு நாட்டின் தலையீடு அதிகரித் திருப்பது போன்றவை, 19-வது சார்க் மாநாட்டை வெற்றிகர மாக நடத்துவதற்கு சாதகமாக இல்லை. இந்தச் சூழலில் இஸ்லா மாபாத்தில் வரும் நவம்பரில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் இந்தியாவால் பங்கேற்க இயலாது. இத்தக வலை சார்க் அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் நேபாள நாட்டிடம் தெரிவித்துள் ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ஆப்கானிஸ் தான், பூடான், வங்கதேசம் ஆகிய மேலும் 3 நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா :
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச வைபை
உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் இணையதளமான கூகுள் நேற்று தனது 18-வது பிறந்தநாளை கொண்டாடியது. இதனையொட்டி 'கூகுள் ஸ்டேஷன்' என்ற கட்டமைப்பு மூலம் இந்தியா முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச வைபை வசதியை அந்நிறுவனம் செய்துள்ளது.

இந்திய மக்கள் நேற்று முதல் பொது இடங்களில் இந்த இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வணிக வளாகங்கள், பல்கலைக்கழகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவற்றில் இந்த வசதியைப் பெற முடியும். கூகுள் நிறுவனம் மத்திய ரயில்வேயின் 'ரயில்டெல்' நிறுவனத்துடன் இணைந்து ஏற்கனவே நாடுமுழுவதும் 53 ரயில் நிலையங்களில், இலவச 'வைபை' வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மூத்த சகோதரர் காலமானார்
இயற்கை வேளாண் விஞ்ஞானி யும், நம்மாழ்வாரின் மூத்த சகோ தரருமான ஜி.பாலகிருஷ்ணன்(90) தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் நேற்று முன்தினம் காலமானார்.இயற்கை வேளாண்மையில் ஆர்வத்துடன் செயல்பட்ட இவர் நுண்ணுயிர் மூலம் விவசாயத்தில் பல புரட்சிகளைச் செய்தவர். இயற்கை விவசாயத்தில் இவர் பின்பற்றிய வழிமுறைகளைத் தான் பிற்காலத்தில் நம்மாழ்வார் கடைபிடித்தார்.சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலிருந்த இவர் நேற்று முன்தினம் கால மானார். இவருடைய உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
தமிழ்நாடு : 
மின் நிலையங்களில் உற்பத்தி குறைப்பு

காற்றாலை, சூரிய சக்தி வழியாக, அதிக மின்சாரம் கிடைப்பதால், அனல் மின் நிலையங்களில், 2,000 மெகாவாட் உற்பத்தி குறைக்கப்பட்டது. தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 4,660 மெகா வாட் திறன் உடைய, ஆறு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், கோடை யில் முழு அளவும், மற்ற நேரங்களில், 3,500 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் சார்பில், 7,600 மெகா வாட், காற்றாலைகள்; 1,142 மெகாவாட் திறன் உடைய, சூரிய சக்தி மின் நிலையங்களும் உள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. தற்போது, காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் நிலையங்களில் இருந்து, தினமும், 3,000 மெகாவாட்டுக்கு மேல், மின்சாரம் கிடைக்கிறது. அதனால், அனல் மின் நிலையங்களின் உற்பத்தி, பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் நாளை காவிரி தொடர்பான கூட்டம்: முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை - அமைச்சர், தலைமைச் செயலாளர் பங்கேற்க உத்தரவு
தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்தபடியே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நாளை நடக்கவுள்ள காவிரி நதிநீர் தொடர்பான கூட்டத்தில் அமைச்சர், தலைமைச் செயலாளர் பங்கேற்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். மத்திய அரசு மற்றும் இரு மாநிலங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்துக்கு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்த 2 தினங்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்’ என உத்தரவிட்டது.
விளையாட்டு :
தென் கொரிய பாட்மிண்டன்: பிரதான சுற்றில் காஷ்யப்
தென் கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.காஷ்யப் பிரதான சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார்.
இந்த பாட்மிண்டன் போட்டியில் 2 தகுதிச்சுற்றில் வெற்றி கண்டு பிரதான சுற்றுக்கு முன்னேறியுள்ளார் காஷ்யப். இதில் முதல் தகுதிச்சுற்றில் தென் கொரியாவின் கோ கியூங் போவை அவர் எதிர்கொண்டார்.
இருவருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 15-21, 23-21, 21-19 என்ற செட் கணக்கில் காஷ்யப் வெற்றி கண்டார். இரண்டாவது தகுதிச்சுற்றில் தாய்லாந்தின் பன்னாவிட் தொங்னுவமை 15-21, 21-16, 21-15 என்ற செட் கணக்கில் 55 நிமிடங்களில் காஷ்யப் வீழ்த்தினார்.
வர்த்தகம் :
வர்த்­தக வழக்­கு­களை விசா­ரிக்க சர்­வ­தேச மத்­தி­யஸ்த மையம்
இந்­தி­யாவில், முதன்­மு­றை­யாக, உலக அள­வி­லான வர்த்­தக வழக்­கு­களை விசா­ரிக்க, மும்­பையில், சர்­வ­தேச மத்­தி­யஸ்த மையம் அமைய உள்­ளது.

தற்­போது, சிங்­கப்பூர், ஹாங்காங் மற்றும் லண்டன் நக­ரங்­களில், இது போன்ற சர்­வ­தேச மத்­தி­யஸ்த மையங்கள் செயல்­பட்டு வரு­கின்­றன. இவற்றில் ஏதா­வது ஒரு மையம் மூலம், இந்­திய நிறு­வ­னங்கள், அவற்றின் அயல்­நாட்டு வர்த்­தகப் பிரச்­னை­களை முறை­யிட்டு, தீர்வு கண்டு வரு­கின்­றன. இனி, இந்த மையங்­க­ளுக்கு மாற்­றாக, ‘எம்.சி.ஐ.ஏ.,’ என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், மும்பை சர்­வ­தேச மத்­தி­யஸ்த மையம் செயல்­படும்.

No comments: