Tuesday 6 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 6th September

உலகம் :

இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு
இத்தாலி சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்அந்தநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரான பாவ்லோ ஜெண்டிலோனியைஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.


கத்தோலிக்க கிறிஸ்துவ கன்னியாஸ்திரி அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்வழங்கும் நிகழ்ச்சியை நேரில் காண்பதற்காகசுஷ்மா ஸ்வராஜ்தலைமையிலான 12 பேர் கொண்ட குழு இத்தாலி சென்றதுஇந்த நிலையில்,இத்தாலிய வெளியுறவுத் துறை அமைச்சரை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தினார்.
மலேரியா இல்லாத நாடு இலங்கை!
மலேரியா காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடு இலங்கை என்று உலகசுகாதார அமைப்பு (டபிள்யூ.ஹெச்..) அறிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மாலத்தீவுகளுக்குப் பிறகு இத்தகைய சிறப்பைஇலங்கை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதுகொசுக்களின் மூலம் பரவும்மலேரியா காய்ச்சல்உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் நோயாக உள்ளது.கடந்த 1970, 80-ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பல பகுதிகளில் மலேரியாவின்தாக்கம் தீவிரமாக இருந்ததுஅதன் பிறகு அந்நாட்டு அரசு மேற்கொண்ட பல்வேறுசுகாதார நடவடிக்கைகளின் காரணமாக மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின்உற்பத்தி படிப்படியாகக் குறைந்ததுஇந்த நிலையில்மலேரியா காய்ச்சல்முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா ஏவுகணை சோதனை
வட கொரியா 3 ஏவுகணைகளைச் செலுத்தி சோதனை நடத்தியதாக தென்கொரியா திங்கள்கிழமை தெரிவித்தது.
வட கொரியாவின் ஹுவாங்ஜு மாகாணத்தையொட்டிய கடற்கரையிலிருந்துஜப்பான் கடல் பகுதியில் மூன்று ஏவுகணைகளை வட கொரியா செலுத்திசோதனை நடத்தியதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
அந்த ஏவுகணைகள் எந்த ரகத்தைச் சேர்ந்தவை என்பது உடனடியாகத்தெரியவில்லை என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரி கூறினார்தென் கொரியபாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள் அது குறித்த ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர் என்றார் அவர்.
இந்தியா :
மத்திய அரசில் 623 பணிஸ்டாப் செலக்சன் கமிஷன் அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி 623பணியிடங்களுக்கான அறிவிப்பை ‘ஸ்டாப் செலக்சன் கமிஷன்’ எனப்படும் மத்தியஅரசு அலுவலர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளதுதமிழகத்தை உள்ளடக்கியதெற்கு மண்டலத்தில் 8 துறைகளில் சீனியர் ரிசர்ச் அசிஸ்டன்ட்சீனியர்டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 20 பேரும்வடகிழக்குமண்டலத்தில் பல்வேறு பணிகளுக்கு 102 பேரும்வடமேற்கு மண்டலத்தில் 171பேரும்கே.கே.ஆர் எனப்படும் கர்நாடககேரள மண்டலத்தில் 51 பேரும்கிழக்குமண்டலத்தில் 279 பேர் என மொத்தம் 623 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் டிசம்பரில் மின் உற்பத்தி தொடக்கம்
கூடங்குளம் அணு மின்நிலையத்தின் 2-ஆவது அணு உலையில் டிசம்பர் முதல்வர்த்தகப் பயன்பாட்டுக்காக மின் உற்பத்தி தொடங்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு ரஷிய தயாரிப்பான விவிஐஆர்-1000 அணு உலை நிறுவப்பட்டுள்ளதுஇந்தஅணு உலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமைக்கப்பட்டதுகடந்த மே மாதம்இங்கு எரிபொருள் நிரப்பப்பட்டதுபாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு கடந்தஜூலை 10-ம் தேதி அணு உலை இயக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றதுஇங்குஉற்பத்தியாகும் மின்சாரத்தை தென்பிராந்திய மின்தொகுப்புடன் சேர்ப்பதற்கானபணி ஆகஸ்ட் 29-ஆம் தேதி முடிவடைந்தது.
தமிழ்நாடு :
ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கஅழைப்பு!
சென்னையில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத ஆராயச்சி மையத்தில் காலியாகஉள்ள 4 எம்டிஎஸ்மொழிப்பெயர்ப்பாளர்உதவியாளர் போன்றபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுஇதற்கு தகுதியும்விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Hindi Translator/Assistant - 01
பணி: Multi Tasking Staff (Office Attendant) - 01
பணி: Multi Tasking Staff (Laboratort Attendant) - 01
பணி: House Keeping (Safaiwala) - 01
மேலும்விண்ணப்பிக்கும் முறைசம்பளம்தகுதி போன்ற முழுமையானவிவரங்கள் அறிய www.ccras.nic.in என்ற இணையதளத்தை பார்த்துதெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2016
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி
டி.என்.பி.எஸ்.சிகுரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை(செப். 8) கடைசி நாளாகும்.இளநிலை உதவியாளர்வரித் தண்டலர்நில அளவர்வரைவாளர்தட்டச்சர்உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கானஅறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)ஆகஸ்ட் 9-இல் வெளியிட்டது.
மாயமான விமானத்தை தேடும் பணியில் ஆழ்கடல் வாகனம்
சென்னை அருகே மாயமான விமானம் விழுந்ததாக கருதப்படும் இடத்தில்கடலுக்கு அடியில் தேடுவதற்குசெப். 12 முதல் ஆழ்கடலில் இயங்கும்தானியங்கி வாகனத்தை பயன்படுத்த மீட்புக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து ஜூலை 22-இல் போர்ட் பிளேயருக்குபுறப்பட்டுச் சென்ற .என்.32 வகை விமானமானது 16-ஆவது நிமிஷத்தில்வங்காள விரிகுடா கடல் பகுதியில் 150 நாட்டிகல் மைல் பகுதியில் 23 ஆயிரம் அடிஉயரத்தில் செல்லும் காணாமல் போனதுஇங்கு விமானப் படைகடற்படை,இந்தியக் கடலோர காவல்படை ஆகியன கூட்டாக இணைந்து தேடி வருகின்றன.
விளையாட்டு :
அமெரிக்க ஓபன்காலிறுதியில் விளையாடும் வீராங்கனைகள்!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் காலிறுதியில்விளையாடும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆண்டின் இறுதி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ்போட்டி நியூயார்க் நகரில் கடந்த 29-ம் தேதி தொடங்கியதுநேற்று நடைபெற்றமகளிர் ஒற்றையர் 4-ஆவது சுற்றின் முடிவில் காலிறுதியில் விளையாடும்வீராங்கனைகளின் பட்டியல் கிடைத்துள்ளது.
மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ்சிமோனா ஹலேப்கொஞ்ஜூ,பிளிஸ்கோவாவோஸ்னியாகிசெவாஸ்டோவாராபர்ட்டா வின்ஸிஏஞ்ஜெலிக்கெர்பர் ஆகியோர் காலிறுதிக்குத் தேர்வாகியுள்ளார்.
காலிறுதி போட்டி
செரீனா வில்லியம்ஸ் - சிமோனா ஹலேப்
கொஞ்ஜூ - பிளிஸ்கோவா
வோஸ்னியாகி  - செவாஸ்டோவா
ராபர்ட்டா வின்ஸி - ஏஞ்ஜெலிக் கெர்பர்
ஆசிய சாம்பியன்ஷிப்இந்திய ஊஷு அணிக்கு 9 பதக்கங்கள்
தைவான் நாட்டின் தாவோயுவான் நகரில் நடைபெற்ற 6-ஆவது ஆசியசாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஊஷு அணியினர் 4 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்கள் என 9 பதக்கங்களை வென்றனர்.
பார்ஸ் கோப்பை போட்டியில் சாம்பியனான புத்தசந்த்ரா சிங், 56 கிலோஎடைப்பிரிவில் வியத்நாமின் வான் பாவிடம் தங்கப் பதக்கத்தை இழந்தார். 48கிலோ பிரிவில் பிரவீண் குமார்மின் ட்க் வூவிடம் தோல்வியடைந்தார்.கே.அருண்பாமா தேவி (90 கிலோ பிரிவு), ராஜேந்தர் சிங் (60) ஆகியோர் வெள்ளிவென்ற மற்ற இந்தியர்கள் ஆவர்.
சாந்தோய் தேவி (52), பூஜா காடியன் (65), விஷாகா மாலிக் (70), ரஜனி தியோரி (75)உள்ளிட்டோர் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத்தந்தனர்.
வர்த்தகம் :
பங்குகளில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.2,717 கோடி முதலீடு
பரஸ்பர நிதி நிறுவனங்கள் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் பங்குச் சந்தைகளில்ரூ.2,717 கோடியை முதலீடு செய்துள்ளன.
இதுகுறித்து செபி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்ற ஏப்ரலில் ரூ.575 கோடியை திரும்பப் பெற்ற நிலையில்கடந்த மேமாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.7,149 கோடியை பங்குகளில் முதலீடுசெய்தன.
இதையடுத்துஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ரூ.120 கோடி திரும்பபெறப்பட்டதுஇந்த நிலையில் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் பரஸ்பர நிதிநிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் நிகர அளவில் ரூ.2,717 கோடியை முதலீடுசெய்துள்ளன.
அக்டோபர் மாத இறுதியில் எஸ்.பி..- துணை வங்கிகள் இணைப்பு
பாரத ஸ்டேட் வங்கியுடன் (எஸ்.பி..) அதன் துணை வங்கிகளை இணைக்கும்பணிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எஸ்.பி..யின் தலைவர்அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதியமஹிளா வங்கியை இணைக்க எஸ்.பி..யின் மத்திய நிர்வாகக் குழு சென்றஆகஸ்ட் மாதத்தில் அனுமதி வழங்கியது.
அதன் தொடர்ச்சியாககுறை தீர்ப்புக் குழுவின் அறிக்கை இம்மாத இறுதிக்குள்எஸ்.பி..யிடம் சமர்ப்பிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதுஅதன் பிறகுஅந்தஅறிக்கை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்படும்இதனையடுத்தேமத்திய அரசு தனதுஇறுதி ஒப்புதலை வழங்கும்.
இந்தப் பணிகள் நிறைவு பெற ஒரு மாத காலம் ஆகும்வரும் அக்டோபர் மாதஇறுதியில் எஸ்.பி.உடன் அதன் துணை வங்கிகளை இணைக்கும் பணிகள்தொடங்கும்அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த இணைப்பு பணிகள்நிறைவடையும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

No comments: