Wednesday 21 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 22nd September

உலகம் :

நேற்று பனாமா இன்று பஹாமாஸ்: மீண்டும் மோசடி பட்டியல் அம்பலம்
பனாமா பேப்பர்ஸ் மோசடி விவகாரம் போன்று , பஹாமாஸ் மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் முதலீடு செய்துள்ளதாக 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பனாமா பேப்பர்ஸ் லீக்ஸ் என்ற பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இந்தியாவை அதிரவைத்தது. பனாமாவை சேர்ந்த, 'மொஸாக் பொன்ஸீகா' என்ற நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள, 'பண முதலைகள்' போலி பெயர்களில் நிறுவனங்கள் துவங்கி, அவற்றில் சட்டவிரோதமாக முதலீடு செய்வதற்கான சேவைகளை வழங்கி வந்தது.
இந்தியா :
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற கர்நாடக அமைச்சரவையில் முடிவு
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற அம்மாநில அமைச்சரவை ரகசியமாக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக, கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று அமைச் சரவைக் கூட்டத்தை கூட்டினார். இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், பங்கேற்ற பெரும்பாலான அமைச்சர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கக் கூடாது. ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடக்கூடாது என உறுதியாக தெரிவித்ததாக தெரிகிறது.
மேலும், அனைத்துக் கட்சி தலைவர்கள், எம்.பி.க்களை அழைத்துச்சென்று குடியரசுத் தலைவரிடம் முறையிடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
தமிழ்நாடு : 
கடலோர மாவட்டங்களில் கடல்பாசி பயிரிட மீனவ மகளிர் குழுவினருக்கு ரூ.4.50 லட்சம்: புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் கடல்பாசி பயிரிடும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து நிதியுதவி வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தின் கடற்பகுதி களில் கடற்பாசிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த கடற் பாசிகளில் இருந்து ‘கராகீனன்’ என்ற மாவுப்பொருள் தயாரிக் கப்படுகிறது. உணவு, ரசா யனம், மருந்து மற்றும் அழகு சாதனத் தயாரிப்பு பொருட்களிலும் ஐஸ்கிரீம், பற்பசை தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
விவசாய பயிர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் கடற்பாசியில் இருப் பதால் இதை விவசாயிகள் இயற்கை உரமாகவும் பயன் படுத்துகின்றனர். இதன் உற் பத்தி இந்தியாவில் குறைவாக இருப்பதால் ஆண்டுக்கு 1,500 டன் கராகீனன், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு இதுவரையில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: வெங்கய்ய நாயுடு தகவல்
சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு இதுவரையில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்து உள்ளார்.
சின்னமலை - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று பகல் 11.59 மணியளவில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க 500-வது டெஸ்ட்: கான்பூரில் வியாழனன்று தொடக்கம்
 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் வியாழன் காலை தொடங்குகிறது.

கான்பூர் போட்டி இந்தியாவின் 500வது டெஸ்ட் ஆகும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் மட்டுமே 500க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளன. 500-வது டெஸ்ட் மைல்கல்லை எட்டும் 4-வது அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
விளையாட்டு :
இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவராக எம்.எஸ்.கே.பிரசாத் நியமனம்
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான இவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர். இந்திய அணியில் 1998 முதல் 2000 வரை விக்கெட் கீப்பராக 6 டெஸ்டுகள், 17 ஒருநாள் போட்டி களில் விளையாடியுள்ளார்.
தேர்வுக்குழுவில் தேவங் காந்தி, ககன் கோடா, சரண்தீப் சிங், ஜதின்பரன்ஜிப் ஆகியோ ரும் இடம் பெற்றுள்ளார்கள்.
இதற்கிடையே புதிய தேர்வுக் குழு நியமித்ததில் லோதா குழுவின் பரிந்துரைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. லோதாகுழு பரிந்துரையில் தேர்வுக்குழுவானது வலுவான 3 பேரை கொண்டு இயங்க வேண்டும், அவர்கள் அனை வருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம் :
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்க  ரிசர்வ் வங்கி திட்டம்
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. மக்களிடையே பணபரிவர்தனையை மாற்றி கார்டு பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு நீண்டகாலமாக திட்டமிட்டு வருகிறது. 

இதன் மூலம் கருப்பு பண புழக்கம் குறையும் என்பதால் வர்த்தக நிறுவனங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பொருள் வாங்க பாயின்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) இயந்திரங்களை நிறுவ ரிசர்வ் வங்கி உதவ முன்வந்துள்ளது. இதுகுறித்து விசா கார்டு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது;-
 

நாடு முழுவதும் 68 கோடிக்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை, பிரதமர் மக்கள் நிதி திட்ட (ஜன்தன் 
 யோஜனா) கணக்குகளால் கடந்த 2 ஆண்டுகளில்தான் அதிகரித்துள்ளது. ஆனால் பிஓஎஸ் இயந்திரங்கள் 12 லட்சத்தில் இருந்து 14 லட்சமாக மட்டுமே அதிகரித்துள்ளது.

No comments: