Monday 19 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 20th September

உலகம் :

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட நவாஸ் வலியுறுத்தல்
காஷ்மீர் விவகாரத்தில்அமெரிக்கா முக்கிய பங்கோற்ற வேண்டும் என பாக்.பிரதமர் நவாஸ் கூறியுள்ளார்.


.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்அமெரிக்கா சென்றுள்ளார்நியூயார்க் நகரில்அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்ஜான் கெர்ரியை சந்தித்து பேசினார்அப்போது அவர்காஷ்மீர் விவகாரத்தில்அமெரிக்கா முக்கிய பங்காற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
ரஷ்ய தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள்புதின் கட்சிக்கு வாய்ப்பு
ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சிமுன்னிலை பெறும் என வாக்குக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவில் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதுதலைநகர்மாஸ்கோ உட்பட பல இடங்களில் வாக்குப்பதிவுகள் மந்தமான நிலையிலேயேநடைபெற்றது.
ரஷ்ய நாடாளுமன்றத்தின் 450 இடங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில் 238இடங்களை அதிபர் புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சி மற்றும் அதன் ஆதரவு பெற்றகட்சிகள் பிடிக்கும் என ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா :
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலானஉயர் மட்டக் கூட்டம் நடைபெற்றதுஇதில் பல முக்கிய அமைச்சர்கள்பங்கேற்றனர்.
காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள யுரி பகுதியில் ராணுவ முகாம் மீதுஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்இந்த தாக்குதலில் 17ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் கூட்டம்திங்கட்கிழமை நடைபெற்றது.
தமிழகத்துக்கு 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3,000 கன அடி நீர் திறக்கவேண்டும்காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவுகர்நாடகாவில் மீண்டும்பதற்றம்
கர்நாடக அரசு வரும் 21-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை தமிழகத்துக்குகாவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி (2.6 டிஎம்சிநீரை திறந்துவிடவேண்டும் என காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ளதுகர்நாடகாவில்பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாகஆலோசிப்பதற்காக காவிரி மேற் பார்வைக் குழுக் கூட்டம் கடந்த 12-ம் தேதிகூடியதுஅப்போது நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் தமிழகம்கர்நாடகா ஆகியமாநிலங்களில் பெய்த மழை அளவுஅணைகளில் உள்ள நீர் இருப்புகடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி யில் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு உள்ளிட்டதகவல்களை இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
தமிழ்நாடு : 
சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை நாளைதொடக்கம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைக்கிறார்
சின்னமலை - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையைமுதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கிவைக்கிறார்விமான நிலையத்தில்இருந்து கோயம்பேட்டுக்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோரயில் பணிகள் நடைபெற்று வருகின்றனஇதில்இரண்டாவது வழித்தடத்தில்ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றனஇந்நிலையில் சின்னமலை - விமான நிலையம் இடையேமெட்ரோ ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் கடந்தஆகஸ்ட் 4-ம் தேதி ஒப்புதல் அளித் தார்இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோரயில்சேவை வரும் 21-ம் தேதி (நாளைதொடங்கவுள்ளதுஇதற்கான பணிகள்கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரு கின்றன.
அரசின் தொலைநோக்கு திட்டத்தில் தமிழக சுற்றுலாத் துறையில் ரூ.10,300கோடிக்கு முதலீடு செய்யப்படும்அமைச்சர் .நடராஜன் தகவல்
தமிழக அரசின் தொலைநோக்கு திட்டத்தில் சுற்றுலாத் துறையில் ரூ.10,300கோடிக்கு முதலீடு செய்யப்படவுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறைசுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்திய பயணஏற்பாட்டாளர்கள் குழுமம் இணைந்து நடத்தும் 32-வது ஆண்டு கூட்டம் கிண்டியில்நேற்று நடந்ததுஇந்திய பயண ஏற்பாட்டாளர்கள் குழும முதுநிலை துணைத்தலைவர் ராஜிவ் கோகில் வரவேற்புரை ஆற்றினார்இந்திய சுற்றுலாத்துறைசெயலர் வினோத் ஜூட்ஷிஇந்திய பயண ஏற்பாட்டாளர்கள் குழும தலைவர்பிரனாப் சர்கார்தொழில் முனைவோர் குழும தலைவர் நகுல் ஆனந்த் ஆகியோர்பேசினர்.
விளையாட்டு :
பாராலிம்பிக் நிறைவு விழாதேசிய கொடி ஏந்திச் சென்றார் மாரியப்பன்
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம்தேதி கோலாகலமாக தொடங்கியதுமொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளை யாட்டுக்களில் 528 பிரிவுகளில்போட்டிகள் நடத்தப்பட்டது. 11 நாட்கள் நடந்த இந்த விளை யாட்டு திருவிழாவின்நிறைவு விழா நிகழ்ச்சிகள்வரலாற்று சிறப்பு மிக்க மரக்கானா ஸ்டேடியத்தில்,வண்ணமயமான வாண வேடிக் கைகளுடன் இந்திய நேரப்படி நேற்று அதிகாலைநடை பெற்றது.
பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகசைக்கிள்பந்தயத்தின்போது உயிரிழந்த ஈரான் வீரர் பஹ்மன் கோல்பர் நிஷாத்துக்குஅஞ்சலி செலுத்தப்பட்டதுஇரு கைகளும் இல்லாதவரான பிரேசிலை சேர்ந்தஜோனதன் பாஸ்டோஸ்கால்களால் கிதார் இசைத்து அசத்தினார்தொடர்ந்துகேபி அமர்டான்ஸ்பெர்ணாண்டஸ்வன்சியா டி மட்டா உள்ளிட்டோரின்பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தனஉயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம்வென்றவரான சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுகொடிஅணிவகுப்பின் போதுஇந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார்.
வர்த்தகம் :
ஜிஎஸ்டி அமலாக்கத்துக்காக 80 எல்லையோர சோதனை சாவடிகள்நவீனமயம்
மத்திய அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த உள்ள சரக்கு மற்றும்சேவை வரி விதிப்பு முறைக்காக மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ள 80சோதனைச் சாவடிகள் நவீன மயமாக்கப்பட உள்ளனஇதற்கு ரூ. 4 ஆயிரம் கோடிசெலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளதுஇத்தகவலை மத்திய தரைவழி மற்றும்நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்த சோதனைச் சாவடிகள் அனைத்தும் ஒரு செயலி (ஆப்மூலம்ஒருங்கிணைக்கப்படும்.
நேரடி மானிய உதவி திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு
பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றம் செய்யும் டிபிடி திட்டத்தைமேலும் 147 திட்டங்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதுஇத்தகவலை மத்திய நிதித்துறைச் செய லர் அசோக் லவாசா தெரிவித்தார்.
17 அரசுத் துறைகள் மூலம் தற்போது 74 திட்டங்களுக்கான மானியம்பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறதுஇது மிகச்சிறப்பாக செயல்படுவதைத் தொடர்ந்து இதை 147 திட்டங்களுக்கு விரிவுபடுத்தத்திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments: