Wednesday 28 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 29th September

உலகம் :

உலக வங்கி தலைவராக ஜிம் யோங் கிம் மீண்டும் நியமனம்
உலக வங்கியின் தலைவர் பதவிக்காக யாரும் போட்டியிட முன்வராததால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜிம் யோங் கிம் தலைவராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது, உலக வங்கியின் தலைவராக இருக்கிறார் ஜிம் யோங் கிம். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
இந்நிலையில், காலியாகவுள்ள அப்பதவிக்காக யாரும் போட்டியிட முன்வரவில்லை. இதனையடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜிம் யோங் கிம் தலைவராக நீடிப்பார் என்று உலக வங்கி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''அமெரிக்க குடிமகனான ஜிம், வங்கியின் நிர்வாக இயக்குநர்களால் உலக வங்கியின் அடுத்த தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் ஜூலை 1, 2017-ல் தொடங்குகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.
உலக வங்கி, அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
சீனாவில் திகில் ஏற்படுத்தும் நீளமான கண்ணாடி பாலம் நாளை மீண்டும் திறப்பு
உலகிலேயே மிக நீளமான, உயரமான கண்ணாடி நடைபாதை பாலம் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜீ மலைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 20-ல் திறக்கப்பட்டது. இரு மலை உச்சிகளுக்கு இடையே கட்டப்பட்ட இந்த பாலத்தின் தரைப்பகுதி முழுவதும் கண்ணாடியால் வடி வமைக்கப்பட்டுள்ளது.
தரைமட்டத்தில் இருந்து 300 மீட்டர் உயரத்திலும், இரு மலைக்கு இடையே 430 மீட்டர் நீளத்திலும் இந்த பாலம் கட்டப் பட்டிருப்பதால், அதில் நடந்து செல்லும்போது பார்வையாளர் களுக்கு திகிலான அனுபவத்தை தரும். நடைபாதையில் கண்ணாடி பதிக்கப்பட்டிருப்பதால் எங்கே உடைந்து விடுமோ என்ற அச்சத் தையும் ஏற்படுத்தும். அதே சமயம் பள்ளத்தாக்கில் நிரம்பி இருக்கும் இயற்கை காட்சிகளையும் வெகு வாக ரசிக்க முடியும்.
வடிவமைப்பு, கட்டமைப்பு என 10 உலகச் சாதனைகளை படைத்த இந்த நடைபாதை பாலம் திறக்கப்பட்ட சில நாட்களுக் குள்ளாகவே மூடப்பட்டது. நாளொன்றுக்கு 8 ஆயிரம் பேர் பாலத்தை பார்வையிட வருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்டுங்கடங்காத கூட்டம் முண்டியடித்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக பாலம் மூடப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது.
இந்நிலையில் பாலத்தில் மேற் கொள்ளப்பட்ட சிறிய அளவிலான பராமரிப்பு பணிகள் முடிவடைந்திருப்பதால் நாளை முதல் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிந்தபடி பாலத்தில் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ் மரணம்
இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 93.
ஷிமோன் பெரஸுக்கு இருவாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், ஹிமோன் பெரஸ் புதன்கிழமை காலை மரணம் அடைந்ததாக அவரது மகன் செமி அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
இந்தியா :
தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்க கர்நாடகா மறுப்பு: இரு மாநில பிரதிநிதிகள் டெல்லியில் இன்று பேச்சு
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக, கர்நாடக மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகே தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் 30-ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் விநாடிக்கு 6,000 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாட காவுக்கு உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக அரசியல் கட்சி களும், கன்னட அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடு பட்டுள்ளதால் வரும் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக் கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மீது 'பொருளாதார போர்': வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை மறு ஆய்வு செய்ய இந்தியா முடிவு
பாகிஸ்தான் மீது பொருளாதார போர் தொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அந்த நாட்டுக்கு வழங் கப்பட்டுள்ள `மிகவும் வேண்டப் பட்டநாடு அந்தஸ்து’ மறுஆய்வு செய்யப்பட உள்ளது.
காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப் படுத்த இந்தியா வியூகம் அமைத்து செயல்படுகிறது.
இதேபோல அந்த நாட்டின் மீது பொருளாதார ரீதியாக போர் தொடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நதிநீர் பங்கீடு, வர்த்தகம் ஆகியவற்றில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்த திட்டமிடப் பட்டுள்ளது.
சார்க் மாநாட்டை புறக்கணிக்கிறது இந்தியா
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்பதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நமது பிராந்தியத்தில் எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பது, சார்க் உறுப்பு நாடுகளின் உள் விவகாரங்களில் ஒரு நாட்டின் தலையீடு அதிகரித் திருப்பது போன்றவை, 19-வது சார்க் மாநாட்டை வெற்றிகர மாக நடத்துவதற்கு சாதகமாக இல்லை. இந்தச் சூழலில் இஸ்லா மாபாத்தில் வரும் நவம்பரில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் இந்தியாவால் பங்கேற்க இயலாது. இத்தக வலை சார்க் அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் நேபாள நாட்டிடம் தெரிவித்துள் ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு : 
உள்ளாட்சி தேர்தல்: 3–வது நாளில் 31,726 மனுக்கள் தாக்கல்
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று 3–வது நாளாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 3–வது நாளான நேற்று மொத்தம் 31 ஆயிரத்து 726 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் விவரம் வருமாறு:–
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் – 82
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் – 334
கிராம ஊராட்சி தலைவர் – 3930
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – 26,641
மாநகராட்சி வார்டு உறுப்பினர் – 112
நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் – 136
பேரூராட்சி வார்டு உறுப்பினர் – 491
மொத்த மனுக்கள்   – 31,726
இதுவரை மொத்தம் 42,907 வேட்பு மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டு உள்ளன.
5 இணை இயக்குனர்கள் மாற்றம்
பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சேதுராம வர்மா பணியாளர் தொகுப்புக்கு மாற்றப்பட்டு உள்ளார். இணை இயக்குனர் லதா மேல்நிலைக்கல்விக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
இணை இயக்குனர் சசிகலா தொடக்க கல்வித்துறை நிர்வாகத்துக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். இணை இயக்குனர் சுகன்யா தொடக்கக்கல்வி துறை உதவி பெறும் பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். இணை இயக்குனர் செல்வகுமார் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வித்துறைக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.
முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி பதவி உயர்வு பெற்று, அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனராக ஆகிறார்.
முதன்மை கல்வி அதிகாரி குமார் பதவி உயர்வு பெற்று கள்ளர் சீரமைப்பு துறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த உத்தரவை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவிட்டு உள்ளார்.
ஆசிய கடற்கரை போட்டி: கபடியில் இந்திய மகளிர் அணிக்கு தங்கம்
ஆசிய கடற்கரை போட்டி வியட்நாமில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான கபடி போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 5-வது முறையாக தங்கம் வென்றது.
இறுதிப்போட்டியில் இந்தியா 41-31 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. ஆசிய கடற்கரை போட்டி தொடங்கப்பட்ட 2008-ம் ஆண்டு முதல் மகளிர் கபடியில் இந்திய அணியை தொடர்ச்சியாக தங்கப் பதக்கம் வென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 5 முறையும் இந்திய அணி, தாய்லாந்தையை தோற்கடித்து பதக்கம் வென்றுள்ளது. ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி 28-30 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. இந்த தொடரில் 4 முறை வெள்ளிப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் தற்போது தான் முதன்முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
விளையாட்டு :
ஆசிய கோப்பை ஆக்கி: அரை இறுதியில் இந்தியா–பாகிஸ்தான் இன்று மோதல்
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் முதலாவது அரை இறுதிப்போட்டியில் வங்காளதேசம்–சீன தைபே அணிகள் மோதுகின்றன.
மற்றொரு அரை இறுதிப்போட்டியில் (பிற்பகல் 3 மணி) இந்தியா–பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் சீன தைபே, சீனா, ஹாங்காங் ஆகிய அணிகளை தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணி 4–5 என்ற கோல் கணக்கில் தொடக்க லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் வங்காளதேசத்திடம் வீழ்ந்தது. அடுத்த லீக் ஆட்டத்தில் 11–0 என்ற கோல் கணக்கில் ஓமனை விரட்டி அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
வர்த்தகம் :
தமிழ்நாட்டில் அமேசான் டாட் இன் புதிய சேமிப்பு மையங்கள் திறப்பு
தமிழ்நாட்டில் சென்னை, கோவை என இரண்டு இடங்களில் பொருட்களை இருப்புவைக்கும் மையங்களை (நுகர்வோரை திருப்திபடுத்தும் மையங்கள்) துவக்குவதாக அமேசான் டான் இன் நிறுவனம் அறிவித்துள்ளது.
2 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையங்களில், சுமார் 9 லட்சம் கன அடி அளவுக்கு பொருட்களை இருப்பு வைக்கலாம். இந்த மையங்கள் ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வணிக வாய்ப்புகளை டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு உயர்த்துவதோடு அவர்களின் தயாரிப்புகள் வாடிக்கையாளரை விரைந்து சென்றடைய  உதவும்.

No comments: