Friday 16 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 16th September

இந்தியா :

ரயில்வே பட்ஜெட்டை இணைக்க தீவிரம்: இனி ஜனவரி 31-ல் பொது பட்ஜெட்: மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் பரிசீலனை
பொது பட்ஜெட்டை இனி ஜனவரி 31-ல் தாக்கல் செய்வது குறித்தும், பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பது குறித்தும் மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் பரிசீலிக்கும் என்று தெரிகிறது.


இப்போது பிப்ரவரி மாதத்தில் ரயில்வே, பொது பட்ஜெட் தனித்தனியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த நடைமுறையில் சில திருத்தங்களை செய்ய மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யும் நடைமுறைக்கு முடிவுக்கட்டப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 3 அல்லது 4-வது வாரம் பட்ஜெட் கூட்டத் தொடர் கூடுவது வழக்கம். இந்த மாதத்தின் இறுதி நாளில் (28 அல்லது 29) பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்க மே மாதம் வரை ஆவதால், பட்ஜெட் அம்சங்களை நிதியாண்டு தொடக்கம் (ஏப்ரல் 1) முதல் அமல்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்தக் கூடாது: புதிய விதிகள் அரசாணையாக வெளியீடு
ஆதார் அட்டை தகவல்கள் எதற்காக பயன்படுத்தப்படு கின்றன என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், அந்தத் தகவல் களை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஆதார் சட்டத் தில் புதிய விதிகள் சேர்க்கப்பட் டுள்ளன. அவை நேற்றுமுன் தினம் அரசாணையாக வெளி யிடப்பட்டன.
கடந்த மார்ச் 16-ம் தேதி ஆதார் மசோதா நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப் பட்டு சட்டமானது. இதைத் தொடர்ந்து மார்ச் 26-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.
ஆதார் சட்ட விதிகளை மீறுவோருக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் விதிகள் உள்ளன.
எனினும் ஆதார் அட்டை திட்டத்தில் குளறுபடிகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். ஆதார் அட்டைக்காக பெறப்பட்ட தகவல்கள் வேறு அமைப்பு களுக்கு கைமாறும் வாய்ப் புள்ளது. தனிநபர்களின் அந்தரங்கம் வெளிச்சத்துக்கு வரும் ஆபத்துள்ளது என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்தக் குறைகளைப் போக்கும் ஆதார் சட்டத்தில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டு நேற்றுமுன்தினம் அரசாணை வெளியிடப்பட்டது.
உலகம் :
இந்திய வம்சாவளி அமெரிக்கருக்கு விருது
இந்திய வம்சாவளி மருத்துவர்-எழுத்தாளர் ஆப்ரஹாம் வர்கீஸுக்கு 2015-ம் ஆண்டுக்கான தேசிய மனிதநேய பதக்கத்தை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வரும் 21-ம் தேதி நடைபெறும் விருது வழங்கும் விழாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வர்கீஸ் மற்றும் 11 பேருக்கு இவ்விருதை வழங்குவார்.
மருத்துவத்துறையில் அவர் ஆற்றிய பணிக்காக வர்கீஸுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரஹாம்வர்கீஸ் (61), தற்போது ஸ்டான்ட் போர்டு மருத் துவக் கல்லூரியில் பேராசிரியராக வும் மருந்துகள் துறையின் துணைத் தலைவராகவும் உள்ளார். இவர் தனது மருத்துவக் கல்வியை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்றார்.
“நோயாளிகள்தான் மருத்துவ உலகின் மையம் என்பதை வர்கீஸ் நமக்கு நினைவுபடுத்தியுள்ளார்” என வெள்ளைமாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய மனிதநேய பதக்கம் வரலாறு, இலக்கியம், மொழி, தத்துவம், இதர மனிதநேய பணிகளில் ஈடுபடும் தனிமனிதர்கள், குழுக்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு :
உள்ளாட்சித் தேர்தலுக்காக ரூ.182 கோடி அனுமதி: மாநில ஆணையர் தகவல்
உள்ளாட்சித் தேர்தல் முன் னேற் பாடு பணிகள் குறித்து திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களில் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் பேசியதாவது:
ஊராட்சி பகுதியில் தேர்தலை நடத்த ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர், நகராட்சிப் பகுதியில் தேர்தல் நடத்திட நகராட்சிகள் இயக்குநர், பேரூராட்சிப் பகுதி யில் தேர்தல் நடத்திட பேரூராட்சி களின் இயக்குநர் ஆகியோர் மாநில தேர்தல் அலுவலர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்ட ஆட்சியர் களும், மாவட்ட தேர்தல் அலு வலர்களாக நியமிக்கப்பட்டுள் ளனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவ லர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு பேரூராட்சிகளின் செயல் அலு வலர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலு வலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
பிரணாப் முகர்ஜியுடன் அன்புமணி சந்திப்பு
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப் படுவது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக பாமக தலைமை நிலையம் நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, டெல்லியில் உள்ள அவரது மாளிகையில் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, காவிரி பிரச்சினை குறித்தும், அதை மையப்படுத்தி கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்தும் அன்புமணி ராமதாஸ் விளக்கினார். கர்நாடகத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தும் வகையில் அங்கு ராணுவத்தையும், துணை ராணுவப் படைகளையும் அனுப்ப வேண்டும். நிலைமையை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கர்நாடகத்துக்கு அனுப்பும் படி பிரதமருக்கு ஆணையிட வேண் டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
விளையாட்டு :
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா - ஸ்பெயின் இன்று மோதல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா - ஸ்பெயின் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது.
டேவிஸ் கோப்பை டென்னிஸில் எலைட் உலகக் குழு பிரிவில் டெல்லியில் இன்று நடக்கும் போட்டியில் பலம்வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்த்து இந்திய அணி மோதுகிறது. டேவிஸ் கோப்பை தரவரிசைப்படி இந்திய அணி 20-வது இடத்திலும், ஸ்பெயின் அணி 14-வது இடத்திலும் உள்ளது. மேலும் ஸ்பெயின் அணியில் உலகின் 4-ம் நிலை வீரரான ரபேல் நடால், டேவிட் பெரர் போன்ற வலுவான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் லியாண்டர் பயஸ் மட்டுமே அனுபவமிக்க வீரராக உள்ளார். அதனால் 5 போட்டிகளைக் கொண்ட இந்த டேவிஸ் கோப்பை தொடரில் வெற்றிபெற இந்திய அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளராக கிரீம் ஹிக் நியமனம்
ஆஸ்திரேலிய அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கிரீம் ஹிக் நியமிக்கப்பட்டுள்ளார். நிருபர்களிடம் இத்தகவலைக் கூறிய ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லேமேன், “மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் கிரீம் ஹிக் எங்களுடன் பணியாற்றினார்.
அந்த தொடரில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது. இதைத்தொடர்ந்து அவரை ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க முடிவெடுத்துள்ளோம். ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட், ஆஷஸ் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகியவை இங்கிலாந்தில் நடைபெற உள்ளன. இந்த தொடர்களில் அவரது அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

வர்த்தகம் :
எல் அண்ட் டி டெக் ஐபிஓ விண்ணப்பங்கள் குவிந்தன
எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீட்டுக்கு 2.48 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. கடந்த திங்கள் முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேற்று ஐபிஓவுக்கான விண்ணப்ப காலம் முடிவடைந்தது.சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கில் 1.65 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்தன. நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப் பட்ட பங்குகளுக்கு 5.01 மடங்கும், நிறுவன அல்லாத முதலீட்டாளர்க ளுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 1.03 மடங்குக்கும் விண்ணப்பங்கள் வந்தன.
ஒரு பங்கின் விலையாக ரூ.850-860 என நிர்ணயம் செய்யப்பட் டது. குறைந்தபட்சம் 16 பங்குகள் அல்லது அதன் மடங்குகளாக முத லீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். ஐபிஓவுக்கு பிறகு இந்த நிறுவ னத்தில் எல் அண்ட்டியின் பங்கு 89.8%-மாக குறையும்.
கடந்த 8 வருடங்களில் இந்தியாவில் சம்பள உயர்வு 0.2 சதவீதம்: ஹே குரூப் ஆய்வில் தகவல்
எட்டு வருடங்களுக்கு முன்பாக சர்வதேச பெரு மந்த நிலை ஏற்பட்டது. அதன் பிறகு இந்தியாவில் சம்பள உயர்வு 0.2 சதவீதம் (பணவீக்கத் துக்குப் பிறகு) என்ற நிலையிலே இருப்பதாக ஹே குரூப் நிறுவனத் தின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.ஆனால் இதே காலத்தில் சீனா, இந்தோனேசியா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் சம்பள வளர்ச்சி விகிதம் முறையே 10.6 சதவீதம், 9.3 சதவீதம் மற்றும் 8.9 சதவீதமாக இருக்கிறது.
மாறாக சில நாடுகளில் எதிர்மறை வளர்ச்சியும் இருக்கிறது. துருக்கி(-34.4%), அர்ஜெண்டீனா (-18.6%), ரஷ்யா (-17.1%) மற்றும் பிரேசில் (-15.3%) ஆகிய நாடுகளில் எதிர்மறை வளர்ச்சியும் இருக்கிறது.ஜி 20 நாடுகளில் சம்பள வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது, சில நாடுகளில் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மத்திய நிலையில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் ஊதிய வளர்ச்சியில் சமமற்ற நிலை இருக்கிறது. சில ருக்கு அதிக ஊதியமும், சிலருக்கு குறைவான ஊதியமும் கடந்த எட்டு வருடங்களில் கிடைத்திருக்கிறது.

No comments: