உலகம் :
சீனவில் ஜி. 20 நாடுகளின் உச்சி மாநாடு: முதலீட்டு கொள்கை உட்பட 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்
சீனாவில் முதன் முறையாக ஜி. 20 நாடுகளின் உச்சி மாநாடு நடக்க உள்ளது. சீனாவின் இயற்கை எழில் நிறைந்த நகருமான ஹாங்சோவில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் தெரசாமே சீன பிரதமர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
உலகத் தலைவர்களின் வருகையை முன்னிட்டு ஹாங்சோ நகரம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. பூமியில் சொர்க்கம் இருப்பது போல பல மில்லியன் பவுண்டுகள் செலவழித்து புதுப் பொலிவு பெறச் செய்துள்ளனர்.
இந்தியா :
வியட்நாமில் மோடி: ஐடி உள்ளிட்ட துறைகளில் 12 ஒப்பந்தங்கள்
வியட்நாமுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுடன் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
இருநாட்டு மற்றும் பலதரப்பு ராஜ்ஜிய உறவுகளைப் பலப்படுத்த, கிழக்கு நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. முதலில் வியட்நாமுக்குச் சென்றார். சனிக்கிழமை வியட்நாம் சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு :
அடுத்த மாதம் மெட்ரோ ரயில் சேவை: ஓ. பன்னீர்செல்வம் தகவல்
சின்னமலை - விமான நிலையம் மற்றும் ஆலந்தூர் - தோமையார் மலை ரயில் நிலையங்களுக்கு இடையே அடுத்த மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கப்படும் என்று தமிழக அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி கேள்விக்கு அமைச்சர் ஓ. பன்னிர்செல்வம் பதில் அளித்தார்.
விளையாட்டு :
அமெரிக்க ஓபன்: 3-ஆவது சுற்றில் முர்ரே, வாவ்ரிங்கா, செரீனா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஆன்டி முர்ரே 6-4,
6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ûஸ தோற்கடித்தார்.
வர்த்தகம் :
நாட்டின் முன்னணி மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி கார் விற்பனை 12% அதிகரிப்பு
நாட்டின் முன்னணி மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத கார் விற்பனை 12.2 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம்
1,32,211 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான
1,17,864 கார்களுடன் ஒப்பிடும்போது இது 12.2 சதவீத வளர்ச்சியாகும்.
No comments:
Post a Comment