Friday 9 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 9th September

உலகம் :
வடகொரியா 5-வது முறையாகசக்தி வாய்ந்தஅணுகுண்டு சோதனை
வடகொரியா மீண்டும் சக்தி வாய்ந்த அணுகுண்டு சோதனை நடத்தியதாக தென்கொரிய அதிபர் பார்க் ஜியுன்-ஹை வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.


வடகொரியா நடத்தும் 5-வதுமிகப்பெரியஅணுகுண்டு சோதனை இது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் வடகொரியா கிம் ஜாங் உன் ஆட்சிக்காலத்தில் மேலும் தடைகளையும் தனிமைப்படுத்தலையும் சந்திப்பதைத் தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது. மேலும் இத்தகைய தூண்டுதல் நடவடிக்கை அதன் சுய அழிவை வேகமாக முடுக்கி விட்டுள்ளது.
ஆகவே வடகொரியா மீது அனைத்து சாத்தியமாகும் அளவுகோல்களின் மூலம் நெருக்கடியை அதிகரிப்போம், இன்னும் வலுவான தடைகளை வலியுறுத்துவோம்என்றார் அவர்.
இந்த சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனையின் தாக்கமாக வடகொரியாவின் புங்க்யே-ரி அணுகுண்டு சோதனை இடமருகே ரிக்டர் அளவு கோலில் 5.3 என்று பதிவானசெயற்கை நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்திய கடலோர கண்காணிப்புக்காக 22 அதிநவீன ஆளில்லா பாதுகாப்பு விமானங்களை விற்கிறது அமெரிக்கா
இந்தியாவின் கடலோர கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில் 22 அதிநவீன ஆளில்லா பாதுகாப்பு விமானங்களை விற்க அமெரிக்கா முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் கடலோர கண்காணிப்பை வலுப்படுத்த, 22 அதிநவீன ஆளில்லா பாதுகாப்பு விமானங்களை கொள்முதல் செய் வதற்கு விருப்பம் தெரிவித்து, இந் திய கடற்படை சார்பில் கடந்த பிப்ரவரியில் அதிகாரபூர்வமான கோரிக்கை கடிதம் அமெரிக்கா வுக்கு அனுப்பி வைக்கப்பட் டிருந்தது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்து அதிபர் ஒபாமாவிடம் பேசினார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய ராணுவ பங்குதாரராக இந்தியாவை நியமிப்பதாக ஒபாமா அறிவித்தார்.
எனினும் கடலோர பாதுகாப்புக் காக 22 அதிநவீன விமானங்களை இந்தியாவுக்கு விற்பது குறித்து அமெரிக்கா இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியாவின் வேண்டுகோளை நிறைவேற்ற சர்வதேச முகமை மூலம் அதற்கான நடவடிக்கையை அமெரிக்கா விரைவில் எடுக்கும் என நம்பப்படுகிறது.
இந்தியா :
ரயில்வேக்கு வருவாய் ரூ.500 கோடி: ப்ரீமியம் ரயில் நெகிழ் கட்டண முறையில் அறியத்தக்க அம்சங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ராஜதானி, சதாப்தி, துரந்தோ ஆகிய அதிவேக ரயில்களில் முதல் புதிய கட்டண முறை வெள்ளிக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டண முறை குறித்து சில முக்கியத் தகவல்கள்:
இந்த நடைமுறைக்கு பெயர் என்ன?
இது பிளக்ஸி ஃபேர் சிஸ்டம் (Flexi Fare system) என அழைக்கப்படுகிறது. இந்த நெகிழ் கட்டண முறைப்படி, முதல் 10 சதவீத படுக்கை வசதிக்கு வழக்கமான கட்டணமும், அதன் பிறகு ஒவ்வொரு 10 சதவீதப் படுக்கைகளுக்கும் 10 சதவீதம் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படும்.
இது எப்படி செயற்படுத்தப்படுகிறது?
பிளக்ஸி ஃபேர் சிஸ்டம் மூலம் டிக்கெட் கட்டணம் அதற்கான தேவையும், மவுசும் கூடும்போது பலமடங்கு உயரும். விமான டிக்கெட்டுகள் இந்த முறையில் விற்கப்படுகின்றன. அதே பாணியில் தற்போது ரயில் டிக்கெட்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு :
தூய்மையான மாநிலங்கள் பட்டியலில் சிக்கிம் முதலிடம்; பின்தங்கிய நிலையில் தமிழகம்
நாட்டிலேயே தூய்மை மிகுந்த மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் 39.2% மதிப்பெண்களுடன் மிகவும் பின்தங்கியுள்ளது.
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.) கணித்துள்ள தூய்மையான மாநிலங்கள் பட்டியலை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வியாழக்கிழமை வெளியிட்டார்.
இதில் நாட்டிலேயே தூய்மையான மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. மொத்தம் 26 மாநிலங்களின் தரவரிசை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சிக்கிமைத் தொடர்ந்து கேரளா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹிமாச்சல பிரதேசம், நாகலாந்து, ஹரியாணா, பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், மேகாலயா மாநிலங்கள் முறையே முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் பட்டியலில் 14-வது இடத்தில் இடம் பெற்றிருக்கிறது.
தமிழகம், புதுவையில் இன்று ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 20 மி.மீ., கூடலூர் பஜாரில் 10 மி.மீ. மட்டுமே மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். தமிழகத்தில் வெப்பநிலை பொது வாக இயல்பையொட்டியே இருக்கும்என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செல்போன் இருப்புத் தொகை மூலம் ரயில் டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகம்: மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்
மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை செல்போன் இருப்பு தொகையிலிருந்து வசூலிக்கும் புதிய முறையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுத்தவுள்ளது.
சென்னையில் ஆலந்தூர் கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக சின்னமலை விமான நிலையம் இடையே இம்மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடக்க விழாவுக்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
இதேபோல், கோயம்பேட்டி லிருந்து ஷெனாய்நகர் வரையில் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்கள் சோதனை ஓட்டமும் நடந்து கொண்டிருக்கிறது. எஞ்சியுள்ள மெட்ரோ ரயில் பணிகளையும் 2017-ம் ஆண்டு இறுதிக்குள்முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இந் நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை கொண்டு வர மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விளையாட்டு :
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின: 4,434 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
பாரா ஒலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நேற்று அதிகாலை கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. போட்டிகள் வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பாரா ஒலிம்பிக்கில் 162 நாடுகளை சேர்ந்த 4,434 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். அதிகபட்சமாக சீனாவில் இருந்து 308 பேர் கலந்து கொண்டுள்ளனர். லண்டன் பாரா ஒலிம்பிக்கில் சீனா 95 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது. இம்முறை அதைவிட அதிக பதக்கங்கள் குவித்து தொடர்ச்சியாக 3-வது முறை பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.
யு.எஸ். ஓபன் அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி
யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் 10ம் தரநிலையில் உள்ள செக்.குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவாவிடம் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறினார்.
பிளிஸ்கோவா 6-2, 7-6 என்ற நேர் செட்களில் செரீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். 2-வது முறையாக தொடர்ந்து செரீனா வில்லியம்ஸ் அரையிறுதியில் தோல்வி தழுவி வெளியேறுகிறார். இதன் மூலம் 7-வது அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வெல்லும் சாதனை வாய்ப்பு செரீனா வில்லியம்ஸுக்கு தள்ளிப்போய்க் கொண்டேயிருக்கிறது. மேலும் 3 ஆண்டுகளாக டபிள்யூ.டி. தரவரிசையில் அவர் வகித்து வந்த முதலிடமும் பறிபோனது.
வர்த்தகம் :
மியூச்சுவல் பண்ட் சொத்து மதிப்பு ரூ. 15.60 லட்சம் கோடியாக உயர்வு
கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி மியூச்சுவல் பண்ட் துறையின் மொத்த சொத்து மதிப்பு ரூ.15,60,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஈக்விட்டி துறையில் அதிக முதலீடுகள் வந்த காரணத்தினால் இந்த சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
மியூச்சுவல் பண்ட் துறையில் 42 நிறுவனங்கள் தற்போது உள்ளன. கடந்த ஜூலை மாத நிலவரப்படி இந்த நிறுவனங்கள் சராசரியாகக் கையாளும் சொத்து மதிப்பு ரூ.15.20 லட்சம் கோடியாக உள்ளது. இந்த தகவலை இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கமான ஆம்பி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடு 25,332 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதம் இந்த முதலீடு 1.03 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கிப் பணியில் ரோபாடிக்ஸ் சாஃப்ட்வேர்: ஐசிஐசிஐ-யில் அறிமுகம்
இந்தியாவில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தனது வங்கிச் செயல்பாட்டில் ரோபாடிக்ஸ் உபயோகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் இத்தகைய சாஃப்ட்வேர் ரோபாடிக்ஸ் தொழில் நுட்பத்தைப் பின்பற்றியுள்ள மிகச் சில வங்கிகளுள் ஒன்றாக ஐசிஐசிஐ வங்கி திகழ்கிறது.
10 லட்சத்திற்கும் மேலான வங்கி பரிவர்த்தனைகளை 200 ரோபாடிக்ஸ் மேற்கொள்வதாக வங்கி தெரிவித்துள்ளது. வங்கி யின் மொத்த செயல்பாடுகளில் 20 சதவீதம் ரோபாடிக்ஸ் மூலம் நிறைவேற்றப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.
இத்தகைய ரோபாடிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து வதால் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் நேரம் 60% வரை சேமிக்கப்படுவதாக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சார் தெரிவித்துள்ளார்.


No comments: