Saturday 17 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 17th September

உலகம் :

சீனாவின் 2-வது விண்வெளி ஆய்வுக் கூடம்: வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
சீனாவின் 2-வது விண்வெளி ஆய்வுக் கூடம் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டுள்ளது.


கடந்த 2011 செப்டம்பரில் தியன்கோங்-1 என்ற விண்வெளி ஆய்வுக் கூடத்தை சீனா விண்ணில் செலுத்தியது. அந்த ஆய்வு கூடத்தில் 2012 ஜூன், 2013 ஜூனில் சீன விண்வெளி வீரர்கள் 8 நாட்கள் மற்றும் 12 நாட்கள் தங்கியிருந்துவிட்டு பூமிக்கு திரும்பினர். அதன் ஆயுட்காலம் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. அது அடுத்த ஆண்டு பிற்பகுதியில் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தியன்கோங்-2 என்ற விண்வெளி ஆய்வுக் கூடத்தை சீன விண்வெளி ஆய்வு மையம் நேற்றுமுன்தினம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி யது. ஜியுகுவான் விண்வெளி மையத்தில் இருந்து ‘மார்ச் 2எப்’ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட அந்த விண்வெளி ஆய்வுக் கூடம் பூமியில் இருந்து 393 கி.மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா :
ஆந்திராவில் ஆன்லைனில் நுழைவுத் தேர்வுகள்: கல்வி அமைச்சர் தகவல்
ஆந்திர மாநிலத்தில் இனி பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான அனைத்து நுழைவுத் தேர்வு களும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என மாநில கல்வி அமைச்சர் கண்டா ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் ஹைதராபாத்தில் நேற்று கூறியதாவது:
ஆந்திராவில் உயர் கல்விக் கான நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூல மாகவே நடத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. பொறியியல், மருத்துவம், ஐஐடி, ஐஐஐடி போன்ற உயர்கல்விகளுக்கான அனைத்து நுழைவுத் தேர்வு களும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால் ஆள் மாறாட்டம், பார்த்து எழுதுவது போன்றவை முற்றிலுமாக தவிர்க்கப்படும். இந்த திட்டம் விரைவில் பரிசோதிக்கப் பட்டு, பின்னர் முழுமை யாக அமல்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து உயர்கல்வி மற்றும் கல்லூரி, பள்ளி தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்துவது பற்றி ஆலோ சிக்கப்படும். இதற்காகக் குழு அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு :
நாடு முழுவதும் டிசம்பரில் நடக்கிறது: ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டுக்கான ‘சென்டா ஒலிம்பியாட்’ போட்டி - விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம்
ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் வகையிலான ‘சென்டா ஒலிம்பியாட்’ போட்டி நாடு முழுவதும் 22 நகரங்களில் டிசம்பர் 3-ம் தேதி நடத்தப்பட உள்ளது. போட்டிகளை ‘தி இந்து’ நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் இணைந்து வழங்குகின்றன.
இதுகுறித்து சென்டர் ஃபார் டீச்சர் அக்ரெடியேஷன் (சென்டா) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரம்யா கூறியதாவது:
5,000-க்கும் மேற்பட்டோர்..
‘சென்டா டீச்சிங் புரொஃபஷ் னல்ஸ் ஒலிம்பியாட்- 2016’ என்பது ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான போட்டி. ஆசிரியர்களின் திறமையை வெளிப்படுத்தவும், மேம்படுத்த வும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 300 நகரங்களில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப் போட்டிகளில் கலந்துகொள்ள பதிவு செய்திருந்தனர்.
ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: மெயின் தேர்வுக்கு 15,445 பேர் அனுமதி
ஐஏஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட 24 விதமான மத்திய அரசின் உயர் பதவிகளை நேரடியாக நிரப்பும் பொருட்டு சிவில் சர்வீசஸ் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) ஆண்டு தோறும் தேர்வு நடத்துகிறது. 2016-ம் ஆண்டுக்கான 1,079 காலியிடங்களை நிரப்புவதற் கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆகஸ்டு 7-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொண்டனர்.இந்த நிலையில், முதல் நிலைத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று மாலை 6 மணியளவில் இணைய தளத்தில் (www.upsc.gov.in) வெளியிட்டது. அதன்படி, 15 ஆயிரத்து 445 பேர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர் வெழுத அனுமதிக்கப்படுவார் கள். மெயின் தேர்வானது டிசம்பர் மாதம் 3-ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடத்தப்படுகிறது.
விளையாட்டு :
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: லோபஸிடம் வீழ்ந்தார் ராம்குமார்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் ஸ்பெயினின் பெலிசினோ லோபஸிடம், இந்தியா வின் ராம்குமார் ராமநாதன் தோல்வியடைந்தார்.டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா - ஸ்பெயின் இடையிலான ஆட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதனை, ஸ்பெயினின் நட்சத்திர வீரர் நடால் சந்திக்க இருந்தார்.ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வயிற்று கோளாறு காரணமாக இப்போட்டியில் இருந்து விலகுவதாக நடால் அறிவித்தார். இதனால் நடாலின் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
லைகா கோவை கிங்ஸ் அணியுடன் இன்று மோதல்: இறுதிப்போட்டி முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்த ஆட்டம் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. லீக் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 ஆட்டத்தில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. அந்த அணியில் தொடக்க வீரர் கோபிநாத் 229 ரன் சேர்த்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரான தலைவன் சற்குணம் 226 ரன்னும், வசந்த் சரவணன் 186 ரன்னும் எடுத்து உள்ளனர்.மூவரும் தலா 2 அரை சதம் அடித்து உள்ளனர். கேப்டன் சதீஷ் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர். பந்துவீச்சில் அந்தோணி தாஸ் 11 விக்கெட் வீழ்த்தி உள்ளார். சாய் கிஷோர் 9 விக்கெட்களும், அலெக்சாண்டர் 8 விக்கெட்களும் கைப்பற்றி உள்ளனர்.
வர்த்தகம் :
உர்ஜித் படேல் கையெழுத்தில் புதிய 20 ரூபாய் நோட்டுகள்
புதிதாக ரிசர்வ் வங்கி கவர்னராகப் பொறுப்பேற்றுள்ள உர்ஜித் படேல் கையெழுத்தில் புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியாக உள்ளன.மகாத்மா காந்தி சீரிஸ் 2005-ல் வெளியான நோட்டுகளில் ஆர் என்ற எழுத்து நம்பர் பேனலில் இடம்பெற்றிருக்கும்.

இதன் பின்ப குதியில் 2016 என்று அச்சாகும். வழக்கமான வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக இந்த ரூபாய் நோட்டுகள் இருக்கும். சிறிய அளவிலான மாறுதல்கள் இதில் இடம்பெற்றிருக்கும்.20 எண், ஆர்பிஐ முத்திரை, மகாத்மா காந்தி உருவம், உத்திர வாத பிரிவு, கவர்னரின் கையெழுத்து என்பன வழக்கமாக நோட்டுகளில் சற்று உயர்ந்த அளவினதாக இருக்கும். ஆனால் புதிய நோட்டுகளில் இவை வழக்கமானதாக இருக்கும்.ரூபாய் நோட்டின் முக்கோண வடிவிலான அடையாள சின்னம் இந்த புதிய ரூபாய் நோட்டில் நீக்கப்பட்டிருக்கும்.இருப்பினும் நிறத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

No comments: