Monday 5 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 5th September

விளையாட்டு :

அமெரிக்க ஓபன்காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செரீனா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்இதேபோல்ஆடவர் பிரிவில் வாவ்ரிங்காஆன்டி முர்ரே ஆகியோரும் 4-ஆவது சுற்றை எட்டியுள்ளனர்.


ஆண்டின் இறுதி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. 6-ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்சுவீடனின் ஜோகன்னா லார்சன்னை எதிர்கொண்டார்.
சானியாபோபண்ணா ஜோடிகள் முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - பார்போரா ஸ்டைரிகோவா (செக் குடியரசுஜோடி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியதுஇதேபோல்கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - கேப்ரிலா டாப்ரோஸ்கி (கனடாஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
உலகம் :
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைநடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்புபேச்சுவார்த்தை நடத்தினார்.
உலகின் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் உலகபொருளாதாரம் மற்றும் புவி சார்ந்த அரசியல் மற்றும் தீவிரவாதம்தொடர்பாக ஆலோசினை நடைபெறவுள்ளதுஅதைத் தொடர்ந்துபருவநிலை மாற்றம் தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும்என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி-20 மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக சீன அதிபரை சந்தித்துப்பேசிய பிரதமர் மோடிகிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கெக்கில்அமைந்துள்ள சீனத் தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் மடத்தியதற்கொலைப்படை தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்தெரிவித்தார்
அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!
மறைந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரியும்அமைதிக்கான நோபல் பரிசுபெற்றவருமான அன்னை தெரஸாவுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதர்பட்டம் வழங்கப்பட்டது.
வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றபிரம்மாண்ட விழாவில்தெரஸாவுக்கு போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம்வழங்கி கெüரவித்தார்தெரஸாவின் 19-ஆவது நினைவு தினம்திங்கள்கிழமை (செப். 5) அனுசரிக்கப்படவுள்ள நிலையில்அவரதுசேவையைப் போற்றும் விதமாக அவருக்குப் புனிதர் பட்டம்வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா :
ரயில்வே துறைக்கு தமிழகத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு:சுரேஷ் பிரபு
மத்திய அரசு சார்பில் ரயில்வே துறைக்கு தமிழகத்துக்கு அதிக அளவில்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது என மத்திய ரயில்வே துறைஅமைச்சர் அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
கோவை ரயில் நிலையத்தில் குளிர்ச் சாதன வசதிகள் கொண்ட 2 உயர்வகுப்பு காத்திருப்பு அறைகள்குளிர் சாதன வசதி கொண்ட பல அடுக்குஅறைகள்குளிர்ச் சாதன வசதி கொண்ட கூடுதல் ஓய்வறைகள் மற்றும்காத்திருப்போர் அறைகளை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுநேற்று திறந்து வைத்தர்
காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்துக்கு காவிரி நதியில் உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர்திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.காவிரியில் தண்ணீரை திறந்து விட வலியுறுத்திதமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்றுஇந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
காவிரியில் நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்குதண்ணீர் திறக்கவும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.
புவனேசுவரத்தில் முக்கியச் சாலைக்கு அன்னை தெரஸாவின் பெயர்
ஒடிஸா மாநிலம்புவனேசுவரத்தில் உள்ள முக்கியச் சாலைக்கு அன்னைதெரஸாவின் பெயர் சூட்டப்பட்டது.
வாடிகனில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் அன்னைதெரஸாவுக்கு புனிதர் பட்டம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
அவரை பெருமைப்படுத்தும் விதமாக புவனேசுவரத்தில் உள்ள சத்யா நகர்மற்றும் கட்டாக்புரி தேசிய நெடுஞ்சாலைஇனி "புனித அன்னை தெரஸாசாலைஎன அழைக்கப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக்அறிவித்தார்.
தமிழ்நாடு :
சென்னை-மதுரை இடையே மாலை நேர விமான சேவை ஏர்கார்னிவல் நிறுவனம் அறிவிப்பு
சென்னை-மதுரை இடையே மாலை நேர விமான சேவைகளைத்தொடங்கி உள்ளதாக ஏர் கார்னிவல் நிறுவனம் தெரிவித்தது.
இதுகுறித்து ஏர் கார்னிவல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிமணிஷ்குமார் சிங் மதுரையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமைகூறியது:
கோவைமங்களூர்சென்னை மற்றும் மும்பையில் கடல்சார் கல்விகல்லூரிகளை நடத்தி வரும் சிஎம்சி குழுமம் ஏர் கார்னிவல் என்ற விமானசேவையைத் தொடங்கி உள்ளதுஜூலை 18 ஆம் தேதி தொடங்கி முதல்கட்டமாக கோவை-சென்னைசென்னை-மதுரைமதுரை-சென்னைமற்றும் சென்னை-கோவை இடையே காலை நேர விமான சேவைகளைவழங்கி வந்தோம்.
பயணிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு தற்போதுமேற்குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே மாலை நேர விமானசேவைகளையும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் துவக்கியுள்ளோம்.
வர்த்தகம் :
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் பொறுப்பேற்பு
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் இன்றுபொறுப்பேற்றுக்கொண்டார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக்காலம்செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

No comments: