Sunday 25 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 26th September

உலகம் :

வேற்றுகிரகவாசிகள் தேடலுக்கான உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி சீனாவில் செயல்படத் தொடங்கியது
வேற்றுகிரகவாசிகள் பற்றிய தேடுதலை முடுக்கிவிடவும், பிரபஞ்சத்தின் தோற்றத்தை புரிந்து கொள்ளவும் 30 கால்பந்தாட்ட மைதான அளவில் உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா உருவாக்கியுள்ளது. இந்த தொலைநோக்கி நேற்று முதல் செயல்படத் தொடங்கியது.


விண்வெளியில் இருந்து மர்மமான முறையில் பல ஒலிகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதை வேற்றுகிரகவாசிகள் அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து ஆய்வுகள் நடக்கின்றன. அந்த ஒலிகளை மொழி மாற்றம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தியா :
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் முயற்சி தோல்வி: ஐ.நா.வுக்கான இந்தியப் பிரதிநிதி தகவல்
காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி சையது அக்பரூதீன் நியூயார்க் நகரில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
ஐ.நா. பொது சபையின் 71-வது ஆண்டு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் பொது விவாதத்தில் இதுவரை பாகிஸ்தான் உட்பட 131 நாடுகளின் பிரதிநிதிகள் பேசி உள்ளனர். ஆனால், பாகிஸ்தான் எழுப்பிய பிரச்சினை (காஷ்மீர்) குறித்து மற்ற 130 நாடுகள் எதுவும் குறிப்பிடவில்லை.
மேலும் விவாதத்தில் பங் கேற்று பேசிய 90 சதவீத நாடு களின் பிரதிநிதிகள், தீவிரவாதம் தங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அதை எதிர்த்துப் போரிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.
ஹமீது அன்சாரி நைஜீரியா பயணம்
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி இன்றுமேற்கொள்கிறார்.
நைஜீரிய துணை அதிபர் யேமி ஓசின்பஜோவின் அழைப்பின் பேரில், அன்சாரி முதலில் அங்கு செல்கிறார். வரும் 29-ம் தேதி மாலி செல்கிறார்.
இந்தியாவிலிருந்து மாலிக்கு துணை குடியரசுத் தலைவர் போன்ற உயர் பிரதிநிதிகள் செல்வது இதுவே முதல் முறை. மாலி பிரதமர் மோடிபோ கெய்டாவின் அழைப்பின்பேரில் அங்கு செல்கிறார் அன்சாரி. அன்சாரியுடன் அவரது மனைவி சல்மா, நிதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உயரதிகாரிகள் செல்கின்றனர். இத்தகவலை வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
பிரதமரின் பாதுகாப்பு செயலாளராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி நியமனம்
பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடு களை மேற்பார்வையிடும் செயலாளர் (பாதுகாப்பு) பதவிக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ண கினி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு செயலாளர் (பாதுகாப்பு) வசம் தான் உள்ளது. இவர் தான் சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) நிர்வாக தலைவராகவும் பணியாற்றுவார். தவிர ஜாம்மர் கருவிகள் கொள்முதல் செய்வது உள்ளிட்ட கொள்கை ரீதியிலான முக்கிய முடிவுகளையும் எடுப்பார். சிறப்பு பாதுகாப்புப் படையின் அனைத்து நடவடிக்கையும், இவரது ஒப்புதல் பெற்ற பிறகே செயல்படுத்தப்படும்.
பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு அக்.2-ல் ஒப்புதல்: பிரதமர் நரேந்திர மோடி தகவல்
பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு காந்தி பிறந்த நாளான வரும் 2-ம் தேதி இந்தியா ஒப்புதல் வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் பாஜகவின் தேசியக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு இறுதியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடந்த உச்சி மாநாட்டில், சராசரி வெப்பநிலையைக் குறைக்க வகை செய்யும் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாடு : 
விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட்: ஸ்காட்சாட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி35 ராக்கெட் திங்கள்கிழமை காலை 9.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி35 ராக்கெட் ஏவப்பட்டது.
விளையாட்டு :
பசிபிக் ஓபன் டென்னிஸ்: வோஸ்னியாக்கி பட்டம் வென்றார்
பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்.
பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டிகள் டோக்கியோ நகரில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி, ஜப்பானின் நவோமி ஒஸாகாவுடன் மோதினார். இப்போட்டியில் வோஸ்னியாக்கி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்த வோஸ்னியாக்கி 2015-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு வெல்லும் முதல் சாம்பியன் பட்டமாகும் இது. டென்னிஸ் போட்டிகளில் அவர் பெறும் 24-வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம் :
நடப்பு நிதி ஆண்டுக்குள் பிஎஸ்இ ஐபிஓ
நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் பிஎஸ்இ பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) வெளியிடப்படும் என்றும், ஐபிஓ வெளியிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஓ வெளியிடுவதற்காக செபியிடம் விண்ணப்பித்திருக்கிறோம். இதுவரை எந்த தகவலும் இல்லை. இதில் எந்த பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இன்னும் 60-70 நாட்களில் அனுமதி கிடைத்து விடும். பட்டியலிடுவதற்காக செபி யின் விதிமுறைகளை நாங்கள் பூர்த்தி செய்திருக்கிறோம் என்று இந்த நடைமுறையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜிஎஸ்டி கவுன்சில்: கூடுதல் செயலர் நியமனம்
ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கூடுதல் செயலரை மத்திய அரசு நியமித் துள்ளது. அருண் கோயல் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு பணியாளர் நிய மன அமைச்சரவைக் குழு கோயல் நியமனத்தை அறிவித்துள்ளது. மத் திய அரசு பணியாளர் திட்டத்தின்கீழ் இவரது நியமனம் இருக்கும்.
1985-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர் அருண் கோயல், மத்திய அமைச்சரவை செயலகத்தில் திட்ட கண்காணிப்புக்குழுவின் கூடுதல் செயலராக உள்ளார். தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments: