உலகம் :
சீனாவில் 20,000 கி.மீ. புல்லட் ரயில் பாதை: உலகிலேயே மிகவும்
நீளமானது
உலகிலேயே நீளமான அதிவேக ரயில் (புல்லட்) பாதைகளைக் கொண்ட நாடாக
சீனா உருவெடுத் துள்ளது. அந்நாட்டில் உள்ள புல்லட் ரயில் பாதையின் நீளம் 20 ஆயிரம்
கிலோ மீட்டரைத் தாண்டியது.
நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தின் ஜெங்சூ
நகரையும் கிழக்கு பகுதி யில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் சுசூ நகரையும் இணைக்கும்
வகையில் புதிய பாதை அமைக்கப்பட்டது. இது நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.
360 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை, மிக முக்கியமான வடக்கு-தெற்கு
பாதைகளை இணைக் கிறது. இதன்மூலம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கிடையிலான பயண
நேரம் கணிசமாகக் குறைகிறது.
குறிப்பாக, ஜியான் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையிலான பயண
நேரம் 11 மணியிலிருந்து 6 மணியாகக் குறையும். மொத்தம் 9 ரயில் நிலையங்களைக் கொண்ட இந்த
வழித்தடத்தில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரயில் செல்லும்.
வடகொரியா மீது புதிய தடைகள்: ஐ.நா. எச்சரிக்கை
வடகொரியா மீது புதிய பொருளா தார தடைகள் விதிக்கப்படும் என்று ஐ.நா.
பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்தடுத்து அணுகுண்டு சோதனைகளை நடத்தி வரும் வட கொரியா 5-வது
முறையாக நேற்று முன்தினம் மீண்டும் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இது ஜப்பானின்
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைவிட சக்தி வாய்ந்ததாகும்.
இந்த விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம்
நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ஐ.நா. பொதுச்செயலர் பான் கி-மூன், வடகொரியாவுக்கு
கடும் கண்டனம் தெரிவித்தார். உலக அமைதிக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும்
வடகொரியாவின் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. அந்த நாட்டின் மீது மேலும்
கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்தியா :
வரும் 18-ம் தேதி முதல் ரஷ்யா, அமெரிக்காவில் அமைச்சர் ராஜ்நாத்
சிங் சுற்றுப்பயணம்
மத்திய உள்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்த வாரம்
சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 18-ம் தேதி ரஷ்யா செல்லும் ராஜ்நாத் சிங், 5 நாட்கள் அங்கு
தங்க திட்டமிட்டுள்ளார். ரஷ்ய உள்துறை அமைச்சர் விளாடிமிர் கொலோகோல்ட்சேவை
சந்தித்து பேசுவார்.
தீவிரவாத தடுப்பு முயற்சியில் இந்தியா-ரஷ்யா இணைந்து மேற்கொள்ளும்
கூட்டு நடவடிக்கைகள் தொடர்பாகவும், காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற எல்லை
தாண்டிய தீவிரவாதம் குறித்தும், அதிகரிக்கும் ஐஎஸ் தீவிரவாதம் குறித்தும்
ரஷ்யாவுடன் ராஜ்நாத் சிங் விரிவாக பேச உள்ளார்.
இதைத்தொடர்ந்து, 26-ம் தேதி, 7 நாள் பயணமாக வாஷிங்டன் செல்லும்
ராஜ்நாத் சிங், அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜே சார்லஸ் ஜான்சன் உடன்
பேச்சுவார்த்தை நடத்துவார்.
தமிழ்நாடு :
கர்நாடக மனு நிராகரிப்பு: தமிழகத்துக்கு செப்.20 வரை காவிரி நீரை
திறந்துவிட உச்ச நீதிமன்றம் புது உத்தரவு
நதிநீர் பிரச்சினையில் கர்நாடக அரசின் மனுவை நிராகரித்த உச்ச
நீதிமன்றம், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் 20-ம் தேதி தண்ணீர்
திறந்துவிட வேண்டும் என புது உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி, செப்டம்பர்
17-ம் தேதி வரை 15,000 கன அடி நீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட வேண்டும்.
கடந்த 7-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வரும் 17-ம் தேதியுடன் நீர்
திறப்புக் காலம் நிறைவடையும் நிலையில், உச்ச நீதிமன்றம் இந்தப் புது உத்தரவை
பிறப்பித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 3
நாட்களுக்கு நாள் தோறும் 12 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் திறந்து விட வேண்டும்
என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஎப் வட்டி நடப்பு நிதியாண்டில் 8.6 சதவீதமாக குறையும்
நடப்பு 2016-17 நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு (இபிஎப்)
தொகைக்கான வட்டி விகிதம் 8.6 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இபிஎப் அமைப்பின் முடிவெடுக் கும் அதிகாரம் கொண்ட அமைப் பான
அறக்கட்டளைகள் மத்திய வாரியம் (சிபிடி), நாடு முழுவதும் உள்ள சுமார் 5 கோடி
சந்தாதாரர் களின் பிஎப் தொகைக்கான வட்டியை ஆண்டுதோறும் நிர்ண யிக்கிறது. இதற்கு
அதன் ஆலோசனை அமைப்பான நிதி, தணிக்கை மற்றும் முதலீட்டுக் குழு மற்றும் மத்திய
நிதியமைச்சகம் ஆகியவை ஒப்புதல் அளித்த பிறகு, வட்டி தொகை சந்தாதாரர்களின் கணக்கில்
வரவு வைக்கப்படுகிறது.
அதேநேரம், இபிஎப் அமைப் புக்கு கிடைக்கும் வருமானத்துக்கு அதிகமாக
சந்தாதாரர்களுக்கு வட்டி வழங்கப்படவில்லை என உறுதி செய்தால் மட்டுமே நிதியமைச்சகம்
ஒப்புதல் வழங்கும்.
பொது விநியோக திட்டத்தில் ஆதார் இணைப்புக்கு புதிய செயலி:
வீட்டில் இருந்தபடியே ஆண்ட்ராய்டு கைபேசி மூலம் பதிவேற்றம் செய்யலாம்
பொது விநியோக திட்டத்தில் ‘மின்னணு குடும்ப அட்டை’ வழங் கும்
பணிக்காக புதிய கைபேசி செயலியை தமிழக உணவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு செல்லாமலேயே ஆண்ட்ராய்டு
கைபேசியில் ஆதார் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
வேளாங்கண்ணியில் அன்னை தெரசாவுக்கு சிலை
நாகை மாவட்டம் வேளாங்கண் ணியில் அன்னை தெரசாவுக்கு சிலை
அமைக்கப்பட்டுள்ளது.
அன்னை தெரசாவின் சேவை யைப் பாராட்டி, வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம்
1980-ம் ஆண்டு அன்னை தெரசா பெயரில் கட்டிடம் கட்டி, அதனை பக்தர்கள் இலவசமாக
தங்குவதற்காக அர்ப்பணித்துள்ளது. இந்நிலையில், அன்னை தெரசாவுக்கு வாடிகனில் போப்
ஆண்டவரால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவரை மேலும் பெருமைப்
படுத்தும் விதமாக, வேளாங்கண்ணி யில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில் அவரது உருவச்
சிலையை பேராலய நிர்வாகம் நேற்று நிறுவியது.
விளையாட்டு :
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜெர்மனியின் கெர்பர் பட்டம் வென்றார்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீராங்கனையான ஏஞ்சலிக்
கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார். நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அவர் செஸ்
வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவை வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெற்று
வருகிறது. இதில் பெண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில்
தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஏஞ்சலிக் கெர்பரும், 10-வது இடத்தில் உள்ள
கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர். இதில் முதல் செட்டை கெர்பரும் 2-வது செட்டை
பிளிஸ்கோவாவும் கைப்பற்ற 3-வது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஏஞ்சலிக் கெர்பர்
கடுமையாக போராடி 6-4 என்ற புள்ளிக்கணக்கில் இந்த செட்டைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் 6 3, 4 6, 6 4 என்ற செட்கணக்கில் கெர்பர் வெற்றி பெற்று சாம்பியன்
பட்டத்தைக் கைப்பற்றினார்.
வரலாற்றுச் சாதனை: பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம்
வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில்
தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று
வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
31-வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மாற்றுத்
திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. இந்த
நிலையில் சனிக்கிழமை காலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச்
சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை
படைத்திருக்கிறார்.
இந்த பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய போட்டியாளர் வருண் சிங்
பாட்டி வெண்கலம் வென்றுள்ளார்.
வர்த்தகம் :
மின் திட்டங்களில் முதலீடு செய்ய ஐசிஐசிஐ மற்றும் டாடா நிறுவனங்கள்
இணைகின்றன: 85 கோடி டாலர் திரட்ட திட்டம்
டாடா பவர் மற்றும் ஐசிஐசிஐ வென்ச்சர் ஆகிய நிறுவனங்கள் இணைகின்றன.
இந்த நிறுவனம் 85 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இந்த நிதியை ஏற்கெனவே
செயல்பட்டு வரும் மின் நிலையங்கள் மற்றும் செயல்பாட்டுக்கு தயாராக இருக்கும் மின்
நிலையங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
அடுத்த மூன்று வருடங்களில் இந்த முதலீடு செய்யப்படும் என்று
பிஎஸ்இ-க்கு அறிக்கை மூலம் டாடா பவர் தெரிவித்திருக்கிறது. தவிர குவைத்
இன்வெஸ்ட்மென்ட் அதாரிட்டி, ஸ்டேட் ஜெனரல் ரிசர்வ் பண்ட் ஆப் ஒமன் மற்றும் கனடாவை
சேர்ந்த முதலீட்டு நிறுவனமும் இந்த நிறுவனத்தில் இணைகிறது.
செப்டம்பரில் 3 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு ரூ.7,000 கோடி திரட்ட
திட்டம்
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ், எல் அண்ட் டி டெக்னாலஜி
சர்வீசஸ், மற்றும் ஜிஎன்ஏ ஆக்ஸெல்ஸ் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களின் ஐபிஓ இந்த
மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்த மூன்று நிறுவனங் களும் ரூ.7,000 கோடி திரட்ட
திட்டமிட்டுள்ளன.
இதில் எல் அண்ட் டி டெக் னாலஜீஸ் நிறுவனத்தின் ஐபிஓ இன்று
தொடங்குகிறது. இன்று தொடங்கும் ஐபிஓ வரும் புதன் கிழமை (செப் 14) முடிவடைகிறது.
ஒரு பங்கின் விலை ரூ.850 முதல் ரூ.860 என நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது. ஐபிஓ
மூலம் ரூ.894 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment