Thursday 29 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 30th September

உலகம் :

பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்
இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப் பதற்காக இரு நாடுகளுடனும் தொடர்புகொண்டு பேசி வருவதாக சீனா தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் ஷுவாங் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீரின் உரி பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி யதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் பக்கத்து நட்பு நாடுகள் என்ற அடிப்படையில், இரு நாடுகளுடனும் பல்வேறு நிலைகளில் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். குறிப்பாக, பிரச்சினைக்கு சுமூகமான முறையில் பேசி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
பால்பாயின்ட் பேனாவைக் கண்டுபிடித்த ஜோஸ் பிரோவின் பிறந்தநாளை டூடுள் போட்டுக் கொண்டாடிய கூகுள்
பால்பாயின்ட் பேனாவைக் கண்டுபிடித்த லடிஸ்லோ ஜோஸ் பிரோவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கூகுள் தனது முகப்புப் பக்கத் தில் டூடுள் போட்டுக் கொண் டாடியது.
ஹங்கேரியில் உள்ள புதா பெஸ்ட்டில் 1899 செப்டம்பர் 29-ம் தேதி பிறந்தவர் லடிஸ்லோ ஜோஸ் பிரோ. யூதக் குடும்பத்தில் பிறந் தவரான ஜோஸ் பிரோ, செய்தி யாளராக பணியாற்றினார். அப் போது அச்சகத்தில் பயன்படுத்தப் படும் மை, எளிதில் உலர்ந்து விடு வதுடன் காகிதத்தில் தேவையற்று பரவுவதில்லை என்பதையும் கண் டார். ஆகவே, மை ஊற்றி எழுதும் அப்போதைய பேனாக்களுக்கு மாற்றாக, இந்த மையை ஊற்றி எழுதும் பேனாவைக் கண்டறிய முனைந்தார்.
இந்தியா :
ராணுவ துல்லிய தாக்குதல்: அட்டாரி-வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி ரத்து
பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் தினமும் நடைபெறும் கொடி இறக்கும் நிகழ்ச்சியை இந்தியா எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) நேற்று ரத்து செய்தது.
அமிர்தசரஸ் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அட்டாரி-வாகா என்ற இடத்தில் இந்திய, பாகிஸ்தான் கூட்டு சோதனைச்சாவடி அமைந் துள்ளது. இங்கு முகாமிட்டுள்ள இரு நாடுகளின் எல்லை பாதுகாப்புப் படையினர் சார்பில் தினமும் மாலையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
சுமார் 30 நிமிடங்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக இருநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டினரும் அங்கு செல்வது வழக்கம். இந்நிலையில், எல்லையை ஒட்டி உள்ள பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது.
அதிரடி தாக்குதல்: 25 நாடுகளுக்கு மத்திய அரசு தகவல்
மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, “பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்து டெல்லியில் உள்ள அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 25 நாடுகளின் தூதர்களிடம் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெயசங்கர் தகவல் தெரிவித்தார்.
காஷ்மீர் மற்றும் இதர இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதால் அந்த முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் எடுத்துரைத்தார்.
இதுபோன்று மேற்கொண்டு தாக்குதல் நடத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும், அதேநேரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை பாதுகாப்புப் படையினர் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர்களிடம் கூறி னார்” என்றார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி யுள்ளார்.
காவிரி நதி நீர் பிரச்சினை தொடர் பாக தமிழகம், கர்நாடக மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்திய நீர்ப்பாசனத் அமைச்சர் உமாபாரதி தலைமை யில் இரு மாநில முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந் தது. உடல்நலக்குறைவு காரண மாக முதல்வர் ஜெயலலிதா இதில் பங்கேற்கவில்லை. அவரது சார் பில் பொதுப்பணித்துறை அமைச் சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.
தமிழ்நாடு : 
தமிழகத்தில் நாளை முதல் ஆதார் பதிவு பணிகளை அரசே மேற்கொள்ள உள்ளது: ஆணையம் தகவல்
தமிழகத்தில் ஆதார் பதிவு பணிகளை நாளை (அக்டோபர் 1) முதல் தமிழக அரசே மேற் கொள்வதாக ஆதார் அட்டை ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசு நலத்திட்டங்கள் உரியவர் களை மட்டுமே சென்று சேர்வதை உறுதிசெய்யும் நோக்கில், நாடு முழுவதும் அனைவருக்கும் பொது அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2010 முதல் பிரத்யேக ஆதார் எண்ணுடன் கூடிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக அமைக்கப்பட்ட யுஐடிஏஐ (யுனிக் ஐடென்டிஃபி கேஷன் அதாரிட்டி) ஆணையம், நாடு முழுவதும் நேரடியாக ஆதார் பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் அடிப்படையில், மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவல கம் சார்பில் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, யுஐடிஏஐ மூலமாக ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில், அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் பதிவு பணிகளை தமிழக அரசே மேற்கொள்ள உள்ளது.
விளையாட்டு :
கொல்கத்தாவில் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: முதலிடம் முனைப்பில் இந்திய அணி
இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கு கிறது. இந்த போட்டியை லார்ட்ஸ் மைதான பாரம்பரியம் போல் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மணியடித்து தொடங்கி வைக்கிறார்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன் னிலை வகிக்கிறது. கொல்கத்தா டெஸ்ட்டிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 111 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ் தான் அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கும்.
கொல்கத்தா போட்டி சொந்த மண்ணில் இந்திய அணி எதிர்கொள்ளும் 250-வது ஆட்டமாகும்.
ஈடன் கார்டன் மைதானம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கக்கூடும். அஸ்வின், ஜடேஜா ஆகியோர் கான்பூர் போட்டி யில் 16 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர். இந்த இருவர் கூட்டணியுடன் அமித் மிஸ்ரா இணையக்கூடும்.
2-வது ஒருநாள்: வங்கதேசத்துக்கு அதிர்ச்சியளித்த ஆப்கானிஸ்தான் வெற்றி
 மிர்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்துள்ளது.

டாஸ் வென்ற ஆப்கன் கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்ஸய் முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தார், அந்த அணி 49.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கான் அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 

இதனையடுத்து வங்கதேச ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்ஸாய் (57), மொகமது நபி (49) ஆகியோர் 5-வது விக்கெட்டுக்காக 107 ரன்களைச் சேர்த்ததே வங்கதேச தோல்விக்குக் காரணம். இருவரும் ஆட்டமிழந்த போது 174/6 என்று ஆப்கான் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது, அப்போது 40.3 ஓவர்களே ஆகியிருந்தது. ஆனால் நஜிபுல்லா சத்ரான் பின்கள வீரர்களைக் கொண்டு இலக்கை எட்ட உதவினார். கடைசி 35 வெற்றி ரன்களை எடுக்க ஆப்கான் அணி 9 ஓவர்கள் போராட வேண்டியிருந்தது.

லோதா குழு பரிந்துரைகள் விவகாரம்: பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு மும்பையில் இன்று கூடுகிறது
லோதா குழு பரிந்துரைகள் விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்க பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு மும்பையில் இன்று கூடுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு தங்களது பரிந்துரைகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த பரிந்துரைகளை அமல் படுத்துவதில் பிசிசிஐ தயக்கம் காட்டி வந்தது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் லோதா குழு பரிந்துரைகளுக்கு எதிராக செயற்குழு, நிலைக்குழு, தேர்வுக் குழு மற்றும் செயலாளர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வர்த்தகம் :
சர்வதேச போட்டித்திறன் குறியீடு: இந்தியாவுக்கு 39-வது இடம்
2016-17ம் ஆண்டு சர்வதேச போட் டித்திறன் குறியீடு பட்டியலை உலக பொருளாதார மையம் வெளி யிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 39-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 122-வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளிலேயே பாகிஸ்தான் கடைசி இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உலக பொருளாதார மையம் ஆண்டுதோறும் சர்வதேச போட் டித்திறன் குறியீடு அறிக்கையை 2005-ம் ஆண்டிலிருந்து வெளி யிட்டு வருகிறது. மேலும் இதனடிப்படையில் நாடுகளையும் பட்டியலிடுகிறது. தற்போது 2016-17-ம் ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை 71-வது இடத்திலும், பூட்டான் 97-வது இடத்திலும், நேபாளம் 98-வது இடத்திலும், வங்கதேசம் 106-வது இடத்திலும் உள்ளன.
பங்குச்சந்தையில் 10% பிஎப் தொகை முதலீடு: பண்டாரு தத்தாத்ரேயா தகவல்
பங்குச்சந்தை திட்டங்களில் (இடிஎப்) முதலீடு செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) வரம்பை 10 சத வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் இபிஎப் நிதி ரூ.13,000 கோடி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச்சந்தை களில் இடிஎப் திட்டங்கள் மூலமாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இபிஎப் நிதியிலிருந்து 5 சதவீதம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ) பரிசீலித்து வந்தது. தற்போது 2016-17-ம் நிதியாண்டில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வரம்பை 10 சதவீதமாக இபிஎப்ஓ உயர்த்தி யுள்ளது.

No comments: