உலகம் :
ஐ.நா. பொது சபை நாளை கூடுகிறது: மோதலுக்கு தயாராகும்இந்தியா, பாகிஸ்தான்
ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நியூயார்க்கில் நாளைதொடங்குகிறது. இதில் 195 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகஇந்தியாவும் பாகிஸ்தானும் மோத லுக்கு தயாராகி வருகின்றன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகம் உள்ளது.அங்கு ஐ.நா. பொது சபையின் 71-வது கூட்டத்தொடர் நாளைதொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கஅதிபர் பராக் ஒபாமா உட்பட 195 நாடுகளின் தலைவர்கள்பங்கேற்கின்றனர்.
சிரியா உள்நாட்டுப் போர், பருவநிலை மாற்றம், சர்வதேசதீவிரவாதம், அகதிகள் விவகாரம், கொரிய தீபகற்ப பதற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொது சபை கூட்டத்தொடரில்விவாதிக்கப்பட உள்ளது.
இந்தியா :
அதி நவீன ‘மர்மகோவா’ போர்க் கப்பல் வெள்ளோட்டம்
இந்திய கடற்படைக்காக உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ‘மர்மகோவா’ போர்க்கப்பல், மும்பையில் நேற்றுவெள்ளோட்டம் விடப்பட்டது.மும்பையில், மத்திய அரசின் மசகான்கப்பல் கட்டும் நிறுவனத்தில் (எம்டிஎல்) கட்டப் பட்ட இந்தப் போர்க்கப்பலின் வெள்ளோட்டத்தை இந்திய கடற்படை தளபதி அட்மிரல்சுனில் லன்பாவின் மனைவி ரீனா நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த போர்க் கப்பல், இந்திய கடற்படைக்குத் தேவையான சிலசோதனைகளுக்கு உட்படுத் தப்படும். இதன் பிறகு கடற் படையில்இணைக்கப்பட்டு, ‘ஐஎன்எஸ் மர்மகோவா’ என்றுஅழைக்கப்படும்.இந்தக் கப்பல் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் வகைகப்பல் ஆகும். 15பி திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இரண்டாவதுகப்பல் ஆகும்.
இத்திட்டத்தின் முதல் கப்பலின் வெள்ளோட்டம் கடந்த 2015,ஏப்ரலில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவதுகப்பலின் வெள் ளோட்டம் தற்போது தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற மேலும் 4 போர்க் கப்பல்களை2024-க்குள் எம்டிஎல் தயாரித்து கடற்படைக்கு வழங்க உள்ளது.
தமிழ்நாடு :
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு21-ம் தேதி தொடக்கம்: மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டகலந்தாய்வு வரும் 21-ம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்விஇயக்ககம் தெரிவித்துள்ளது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கானமுதல்கட்ட கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலை ஓமந் தூரார்அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர்சிறப்புமருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்தது.
கலந்தாய்வில் சேர்க்கை ஆணை பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 1-ம்தேதி வகுப்புகள் தொடங்கின. முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில்அரசு மருத்துவக் கல்லூரிகளில் 9 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார்(சுயநிதி) கல்லூரிகளில் மாநில அரசுக்கான 122 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரியில் 12 பிடிஎஸ் இடங்கள் மற்றும் 17 தனியார் (சுயநிதி) பல்மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கான 970 பிடிஎஸ் இடங்கள்மீதம் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்டகலந்தாய்வை 21-ம் தேதி தொடங்க மருத்துவக் கல்வி இயக்ககம்(டிஎம்இ) திட்டமிட்டுள்ளது.
பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு:டெல்டா விவசாயிகள்வரவேற்பு
சம்பா சாகுபடி பாசனத்திற்கு, மேட்டூர் அணை திறக்கும் அரசின்முடிவை, விவசாயிகள் வரவேற்றுள்ளனர். அதற்கு முன், 'வழித்தடஅடைப்புகளை நீக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட, 'டெல்டா' மாவட்டங்களின்பாசன ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. குறுவை பருவ நெல்சாகுபடிக்காக, ஆண்டு தோறும், ஜூன் 12ல், அணை திறக்கப்படவேண்டும். இந்த ஆண்டு, அணையில் போதிய தண்ணீர்இல்லாததால் ஜூனில் திறக்கப்படவில்லை.அதனால், சம்பாசாகுபடி ஏற்பாடுகளை துவங்க வசதியாக, ஆகஸ்ட் மாதத்திலேயேஅணை திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர்; ஆனால்,திறக்கப்படவில்லை.இந்நிலையில், சம்பா சாகுபடி பாசனத்திற்காக,வரும், 20ம் தேதி அணையை திறக்க, முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார். இது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியைஏற்படுத்தி உள்ளது.
வர்த்தகம் :
‘ஜிஎஸ்டி-யை அமல்படுத்த மத்திய அரசு கூடுதல் நேரம்செயல்படுகிறது’
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்த மத்திய அரசுகூடுதல் நேரம் செயல் படுகிறது என்று மத்திய அமைச் சரவைச்செயலர் பி.கே.சின்ஹா தெரிவித்தார். இப்புதிய வரி விதிப்பு முறைஅடுத்த நிதி ஆண்டு தொடக்கத்தில் (ஏப்ரல் 1) அமல்படுத்தப்படஉள்ளது.வரி விதிப்பு முறையில் மிகப் பெரிய மாற்றத்தைஏற்படுத்தக் கூடியதாக ஜிஎஸ்டி இருக்கும். நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம்இதுவாகும்.
இது ஏப்ரல் 1, 2017 முதல் அமல்படுத்துவதற்காக அரசு அதிகாரிகள்கூடுதல் நேரம் செயலாற்றி வருகின்றனர் என்றார். பஞ்சாப்,ஹரியாணா, டெல்லி, சண்டீகர் தொழில் வர்த்தக சபை(பிஹெச்டிசிசிஐ) ஏற்பாடு செய்திருந்த மாநில தலைமைச்செயலாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் பேசிய அவர் மேலும்கூறியது: புதிய வரி விதிப்பு முறை அமலாக்கத்தில் எவ்விதபிரச்சினையும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு மிகுந்த கவனமுடன்உள்ளது. அடுத்த நிதி ஆண்டின் இடையில் இதில் எவ்விதமாறுதலும் செய்ய வேண்டிய சூழல் உருவாகக் கூடாதுஎன்பதற்காக அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
அந்நிய மறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி: ஐஆர்டிஏதலைவர் விஜயன் தகவல்
சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள மறு காப்பீட்டு நிறுவனங்கள்விரைவில் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளைத் தொடங்கஉள்ளன என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின்(ஐஆர்டிஏ) தலைவர் விஜயன் கூறினார்.தற்போது இந்தியாவில்பொதுத்துறை நிறுவனமான ஜிஐசி நிறுவனம் மட்டுமே மறுகாப்பீட்டு பணிகளை மேற்கொள்கிறது.சர்வதேச அளவில் மூனிச்ஆர்இ, ஸ்விஸ் ஆர்இ, ஸ்கோர், ஹனோவர் ஆர் உள்ளிட்டநிறுவனங்கள் மறு காப்பீட்டில் ஈடுபட்டுள்ள பிரபலமானநிறுவனங்களாகும். பொதுவாக அந்நிய காப்பீட்டு நிறுவனங்கள்இங்கு செயல்பாடுகளைத் தொடங்க ஆர்1 லைசென்ஸ் பெறவேண்டும். அடுத்த கட்டமாக ஆர்2 மற்றும் ஆர்3லைசென்ஸ்களைப் பெற வேண்டும்.
விளையாட்டு :
ஜப்பான் ஓபன்: கிறிஸ்டினா சாம்பியன்
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின்கிறிஸ்டினா மிக்கேல் (படம்) சாம்பியன் பட்டம் வென்றார்.இதன்மூலம் அவர் தனது முதல் டபிள்யூடிஏ பட்டத்தைக்கைப்பற்றினார்.
டோக்கியோவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில்கிறிஸ்டினா 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின்கேத்ரினா சினிக்கோவாவைத் தோற்கடித்தார்.வெற்றி குறித்துப் பேசிய கிறிஸ்டினா, "முதல்முறையாக வென்றஇந்த கோப்பையை கீழே வைக்க விரும்பவில்லை. எப்போதும்கையிலேயே வைத்திருக்க விரும்புகிறேன். கடந்த சிலஆண்டுகளாகவே இந்தப் போட்டியில் விளையாடி வருகிறேன்.இங்கு வந்து விளையாடுவதை நான் விரும்புகிறேன்' என்றார்.
No comments:
Post a Comment