உலகம் :
மெக்சிகோ நாட்டின்
துணைத்தூதரகம் சென்னையில் துவக்கம்
மெக்சிகோ நாட்டின் துணைத்தூதரகம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது.
"சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மெக்சிகோ துணைத்தூதரகம் இந்தியா மற்றும்
மெக்சிகோ நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை
அதிகரிக்கும்.
மேலும் தென்னிந்தியாவிலிருந்து சுற்றுலா மற்றும் வியாபாரம்
நிமித்தமாக மெக்சிகோ செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவும் உதவும்."என
இந்தியாவிற்கான மெக்சிகோ தூதர் மெல்பா பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் திறக்கப்பட்டுள்ள இந்த தூதகரத்தின் மூலமாக
கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச்
சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். எனினும் இந்த தூதரகத்தில் மெக்சிகோ செல்வதற்கான
விசா வழங்கப்படாது.
மெக்சிகோ செல்ல விசா பெற விரும்புவோர் தில்லியில் உள்ள மெக்சிகோ
தூதரகத்தை அணுக வேண்டும். மெக்சிகோ சார்பில் இந்தியாவில் அமைக்கப்படும் நான்காவது
தூதரகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் இன்று காலை
நிலநடுக்கம்
ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள்
அச்சமடைந்தனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
டோக்கியோவின் வடகிழக்கே உள்ள ஃபுகுஷிமா அருகே 30கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம்
உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 என பதிவானது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து டோக்கியோ நகரில் உள்ள கட்டிடங்கள்
குலுங்கியதால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். இருப்பினும், சுனாமி எச்சரிக்கை
எதுவும் விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கம் காரணமாக எவ்வித உயிர் சேதமும்
ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா :
ஃப்ஐஆர் பதிவான 48 மணி நேரத்தில் இணையத்தில் பதிய வேண்டும்: உச்ச
நீதிமன்றம் உத்தரவு
எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் அது குறித்த தகவல்கள்
இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி
உத்தரவை பிறப்பித்துள்ளது.
எஃஐஆர் பதிவு செய்யப்படுவது குறித்த வழக்கில் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அதாவது, காவல்நிலையங்களில் எந்த ஒரு சம்பவம் குறித்தும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால், அதில் இருந்து 48 மணி நேரத்தில் வழக்கு விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். மிக முக்கிய வழக்கு விவரங்களை பதிவு செய்ய 72 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும்.
வழக்கோடு தொடர்புடைய காவல்நிலைய இணையதளத்தில் எஃப்ஐஆர் பதிவுகள் உடனுக்குடன் பதிவிட வேண்டும்.
எஃஐஆர் பதிவு செய்யப்படுவது குறித்த வழக்கில் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அதாவது, காவல்நிலையங்களில் எந்த ஒரு சம்பவம் குறித்தும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால், அதில் இருந்து 48 மணி நேரத்தில் வழக்கு விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். மிக முக்கிய வழக்கு விவரங்களை பதிவு செய்ய 72 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும்.
வழக்கோடு தொடர்புடைய காவல்நிலைய இணையதளத்தில் எஃப்ஐஆர் பதிவுகள் உடனுக்குடன் பதிவிட வேண்டும்.
ரயில்வே துறையுடன் சேவை
வரியை பகிர்ந்து கொள்ள நாடாளுமன்றக் குழு பரிந்துரை
பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணங்களுக்கான சேவை வரியை வசூலித்து
வரும் மத்திய நிதியமைச்சகம், அதனை ரயில்வே துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்
என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
ரயில்வே துறையின் வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளைப்
பரிந்துரை செய்யுமாறு நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன்படி, தனது பரிந்துரை அறிக்கையை மக்களவையில் அக்குழுவின் தலைவரும், முன்னாள்
ரயில்வே அமைச்சருமான தினேஷ் திரிவேதி செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு :
உள்ளாட்சித் தேர்தல்:
5.81 கோடி பேர் வாக்களிக்க தகுதி
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க 5.81 கோடி பேர்
தகுதி பெற்றுள்ளனர். இதில், ஆண்கள் 2.88 கோடி பேரும், பெண்கள் 2.93 கோடி பேரும்,
மூன்றாம் பாலித்தனவர்கள் 4 ஆயிரத்து 598 பேரும் உள்ளனர்.
இந்த வாக்காளர் பட்டியல், மாநில தேர்தல் ஆணையத்திடம்
அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டே உள்ளாட்சித்
தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். பெயர்
சேர்ப்பு தீவிரம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் செப்டம்பர்
மாத இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பெயர் சேர்க்க, நீக்க அளிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும்
பரிசீலிக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் புதிதாக வாக்காளர் பட்டியல்
தயாரிக்கப்படும்.
இந்தப் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும். புதிதாக
தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளவர்களுக்கு வண்ண புகைப்பட
வாக்காளர் அடையாள அட்டை அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள்
தெரிவித்தனர்.
தொழில்-போக்குவரத்து
துறைக்கு புதிய செயலர்கள் நியமனம்: 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பணியிடங்கள்
ஒதுக்கீடு
தொழில், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிதாக
செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகள் உள்பட 27 பேருக்கு புதிதாக பணியிடங்களை ஒதுக்கி தலைமைச் செயலாளர் ராம
மோகன ராவ் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு :
சுஷில்குமார் உள்பட 3
பேர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரை
ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார்
, உள்பட 3 பேரின் பெயர்களை, நாட்டின் மூன்றாவது உயரிய குடிமகனுக்கான பத்ம பூஷண்
விருதுக்கு இந்திய மல்யுத்த சங்கம் (டபிள்யூ.எஃப்.ஐ) பரிந்துரை செய்துள்ளது.
மல்யுத்த வீராங்கனை அகிலா தோமர், சுஷிலின் பயிற்சியாளர் யஷ்விர்
சிங் ஆகியோர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள மற்ற இருவர் ஆவர். இந்தத்
தகவலை டபிள்யூ.எஃப்.ஐ-இன் உதவி செயலாளர் வினோத் தோமர் தெரிவித்துள்ளார்.
சுஷில்குமார், கடந்த 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப்
பதக்கமும், 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும்
வென்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஓபன்: சானியா
மிர்சா ஜோடி தோல்வி!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு
காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்ஸா - பார்போரா ஸ்டைரிகோவா (செக் குடியரசு)
ஜோடி தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில்
நடைபெற்று வருகிறது. மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் கரோலின் கார்சியா -
கிறிஸ்டினா ஜோடி, 7-6, 6-1 என்ற நேர் செட்களில் சானியா மிர்ஸா - பார்போரா
ஸ்டைரிகோவா ஜோடியைத் தோற்கடித்தது.
ஏற்கெனவே, பயஸ், போபண்ணா ஜோடிகள் தோல்வியைத் தழுவிய நிலையில்,
அமெரிக்க ஓபனில் ஒரே இந்தியராக நீடித்த சானியா மிர்ஸா தற்போது தோல்வி அடைந்து
போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
ஃபெடரரின் சாதனையை
முறியடித்தார் செரீனா
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்றிருந்த
ரோஜர் ஃபெடரரின் சாதனையை முறியடித்தார் உலகின் முதல் நிலை வீராங்கனை அமெரிக்காவின்
செரீனா வில்லியம்ஸ்.
அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில்
நடைபெற்று வருகிறது. 8-ஆவது நாளான திங்கள்கிழமை 4-ஆவது சுற்றுக்கான ஆட்டங்கள்
நடைபெற்றன. மகளிர் பிரிவில், செரீனா வில்லியம்ஸ், கஜகஸ்தானின் யாராஸ்லாவா
ஷிவிடோவாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சுமார் 126 மைல் வேகத்தில் சர்வ் செய்த
செரீனா, 11 ஏஸ் சர்வீஸ்களையும் வீசினார். இதில், தாக்குபிடிக்க முடியாத ஷிவிடோவா
2-6, 3-6 என்ற செட் கணக்கில் செரீனாவிடம் சரணடைந்தார்.
வர்த்தகம் :
சென்னையில் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது எக்விடாஸ் சிறிய வங்கி
எக்விடாஸ் சிறிய நிதி வங்கி, சென்னையில் மூன்று கிளைகளுடன் முதல்
முறையாக தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து எக்விடாஸ் சிறிய நிதி வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி.என். வாசுதேவன் கூறியதாவது:
ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்ததையடுத்து எக்விடாஸ் சிறிய நிதி வங்கி தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது. சென்னையில் முதல் முதலாக மூன்று கிளைகளுடன் வங்கி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எக்விடாஸ் சிறிய நிதி வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி.என். வாசுதேவன் கூறியதாவது:
ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்ததையடுத்து எக்விடாஸ் சிறிய நிதி வங்கி தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது. சென்னையில் முதல் முதலாக மூன்று கிளைகளுடன் வங்கி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கரூர் வைஸ்யா வங்கியின்
நூற்றாண்டு விழா
கருர் வைஸ்யா வங்கியின் நூற்றாண்டு விழா, குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி தலைமையில் சென்னையில் வரும் செப். 10-ஆம் தேதி நடைபெறும் என அந்த
வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி கே. வெங்கடராமன் தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்
அவர் கூறியதாவது: கரூர் வைஸ்யா வங்கியின் நூற்றாண்டு விழா செப்டம்பர் 10-ஆம் தேதி
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி தலைமையில் விழா நடைபெறும். தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர்
ராவ் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment