Wednesday 21 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 21st September

உலகம் :

மனித முடியை விட மெல்லியது: நுண்ணிய தேசிய கொடி உருவாக்கி கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் சாதனை
மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளனர்.


கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம் கம்யூடிங் பிரிவைச் சேர்ந்த நாதன் நெல்சன் பிட்ஸ்பேட்ரிக் மற்றும் பொறியியல் மாணவர் நடாலியே பிரிஸ்லிங்கர் பின்சின் இருவரும் இணைந்து கனடாவின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தத் தேசியக் கொடியை வடிவமைத்துள்ளனர். சிலிக்கான் உறையில் எலக்ட்ரான் பீம் லித்தோகிராபி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தேசியக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கனடாவின் 150வது ஆண்டு விழாவுக்கான அதிகாரப்பூர்வ இலச்சினையும் முத்திரை குத்தப்பட்டுள்ளது.
இளம் தலைவர்கள் பட்டியலில் 3 இந்தியர்: ஐ.நா. சபை வெளியீடு
ஐ.நா.வின் இளம் தலைவர்கள் பட்டியலில் இரு இந்தியர்கள், ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் உட்பட 17 பேர் இடம்பெற்றுள்ளனர்.
நீடித்த வளர்ச்சி இலக்கில் அவர்களின் தலைமைப் பண்பு, ஏழ்மை ஒழிப்பில் பங்களிப்பு, சமத்துவம், சமநீதிக்கான போராட் டம், வரும் 2030-ம் ஆண்டுக்குள் பருவநிலை மாறுபாட்டை எதிர் கொள்ளும் திட்டம் ஆகியவை சார்ந்து 17 இளம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் கல்வி, மறுவாழ்வு, பாலின அத்துமீறல்களுக்கு எதி ரான நடவடிக்கைக்காக ஷீசேய்ஸ் என்ற அமைப்பை நிறுவிய திரிஷா ஷெட்டி (25) இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ரஷ்ய தேர்தலில் புதின் கட்சி வெற்றி
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாதிமிர் புதினின் யுனைட்டெட் ரஷ்யா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.தேர்தல் முடிவுகளின் பெரும் பகுதி நேற்று வெளியானது. 90 சதவீத வாக்குகள் எண்ணப் பட்ட நிலையில், புதினின் கட்சி 54.3 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம் மொத்தமுள்ள 450 நாடாளு மன்ற உறுப்பினர் இடங்களில் குறைந்தது 338 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.புதினின் கட்சியைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி 13.54 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடத்தையும், அல்ட்ராநேஷனலிஸ்ட் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 13.28 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்தியா :
இந்திய- இஸ்ரேல் கூட்டு முயற்சியில் உருவான ‘பராக் - 8’ ஏவுகணை சோதனை வெற்றி
அணு ஆயுதங்களை சுமந்தபடி தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் துல்லிய மாக தாக்கும் திறன் படைத்த இந்தியாவின் ‘பராக் - 8’ ஏவு கணை சோதனை நேற்று வெற்றி கரமாக சோதிக்கப்பட்டது.
இந்தியா, இஸ்ரேல் கூட்டு முயற்சியில் மேம்படுத்தப்பட்ட ‘பராக் 8’ ஏவுகணை ஒடிசாவின் சாண்டிப்பூரில் உள்ள ஒருங் கிணைந்த சோதனை மையத்தில் இருந்து காலை 10.13 மணி யளவில் சோதித்துப் பார்க்கப் பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அதிகாரிகள் தெரி வித்தனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான மேலும் 27 நகரங்கள்: மத்திய அரசு அறிவிப்பு 
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான 3-வது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இதில் தமிழகத்தின் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் மற்றும் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி உள்ளிட்ட 27 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலை வெளியிட்ட மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கூறும்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 27 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான போட்டியில் 63 நகரங்கள் இடம் பிடித்திருந்தன. எனினும் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 3 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் அடிப்படையில் இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டது” என்றார்.
தமிழ்நாடு : 
விமான நிலையம் - சின்னமலை மெட்ரோ ரயில் சேவை: காணொலி காட்சியில் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.சின்னமலை - விமான நிலையம் இடையிலான 8.6 கி.மீ. வழித்தடப் பணிகள் கடந்த ஜூலை மாதமே முடிவடைந்தது. ரயில் நிலையங் களில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்தன. இந்த வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஆய்வு நடத்தி, ரயிலை இயக்குவதற்கான அனுமதியை அளித்தார். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில்கள் இயக் கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வந்தது.
விளையாட்டு :
உலகக் கோப்பை கபடிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தர்மராஜ் இடம் பிடித்தார்: அனுப் குமார் கேப்டனாக நியமனம்
உலகக் கோப்பை கபடி போட்டி அகமதாபாத்தில் வரும் அக்டோபர் 7-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் இந்திய அணியுடன், அமெரிக்கா, இங்கி லாந்து, ஆஸ்திரேலியா, ஈரான், போலந்து, தாய்லாந்து, வங்க தேசம், தென் கொரியா, ஜப்பான், அர்ஜென்டினா, கென்யா ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.இந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், தென் கொரியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா அணிகளும், பி பிரிவில் ஈரான், தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, போலந்து, கென்யா அணிகளும் இடம் பெற்றுள்ளன.அரை இறுதி ஆட்டங்கள் 21-ம் தேதியும், இறுதிப் போட்டி 22-ம் தேதியும் நடைபெறுகிறது. 7-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத் தில் இந்தியா-தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
வர்த்தகம் :
ரேஷன் கடைகளில் வங்கிச் சேவை: மத்திய அரசு பரிசீலனை
நாடு முழுவதும் 5.5 லட்சம் ரேஷன் கடைகளில் (பொது விநியோகக் கடைகள்) (பிடிஎஸ்) வங்கிச் சேவை அளிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் வங்கிச் சேவைகளை கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். இதன் மூலம் ரேஷன் கடைகளில் வங்கி கணக்கை செயல்படுத்திக் கொள்ள முடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.மேலும் இந்த திட்டத்தில் வங்கி முகவர்களாக ரேஷன் கடைகள் செயல்படும். இந்த திட்டத்தை முதல் கட்டமாக 55 ஆயிரம் கடைகளில் விரைவில் கொண்டு வர இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
‘செபி’-க்கு புதிய தலைவரைத் தேடும் பணி தொடக்கம்
பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (செபி) புதிய தலைவரை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தலைவராக இருக்கும் யூ.கே.சின்ஹாவின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.கடந்த 2011-ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சின்ஹா தலைவராக நியமனம் செய்யப் பட்டார். மீண்டும் இரண்டு ஆண்டு களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் மேலும் ஒரு ஆண்டுக்கு பதவி நீட்டிக்கப்பட்டது.இந்த நிலையில் புதிய தலை வரை தேடும் பணியை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. தனியார் துறையை சேர்ந்த அதிகாரிகள், குடிமைப்பணி அதிகாரிகள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

No comments: