Friday 2 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 2nd September

உலகம் :
சீனாவில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு
சீனாவின் பழமையான நகரும் இயற்கை எழில் நிறைந்த நகருமான ஹாங்சோவில் ஜி- 20 நாடுகளின் உச்சி மாநாடு செப்டம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.


துவக்கத்தில் ஜி-8  நாடுகளாக அமெரிக்காவில் தொடங்கி செயல்பட்ட இந்த எட்டு நாடுகளின் குழு பின்னர் அடைந்த வளர்ச்சி தான் தற்போதைய ஜி- 20 என்பது. ஜி – 20 நாடுகள் உலக அளவில் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வருகின்றன, இவற்றின் மொத்த தேசிய உற்பத்தி மதிப்பு உலகின் மதிப்பில் 85 விழுக்காடு என்ற அளவில் உள்ளது, இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை மூன்றில் இரண்டு மடங்காக உள்ளது.
பிரேசில் அதிபராக மிஷெல் டெமர் பதவியேற்பு
புதிய அதிபராக மிஷெல் டெமர் (75) புதன்கிழமை பதவியேற்றார்.
அவருக்கு பிரேசில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரிக்கார்டோ லெவன்டோவ்ஸ்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரேசிலில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று டில்மா ரூùஸஃப் அதிபராகப் பதவியேற்றார்.
பிரேசிலின் முதல் பெண் அதிபரான டில்மா ரூùஸஃப் அந்நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்த தவறான தகவல்களை அளித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் அந்நாட்டின் நாடாளுமன்றக் கீழவையிலும் பின்னர் மேலவையான செனட்டிலும் கொண்டு வரப்பட்டது.
இந்தியா :
வியத்நாமுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
தென்கிழக்கு ஆசிய நாடான வியத்நாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை (செப்.2) செல்கிறார். அங்கு ஒரு நாள் தங்கும் அவர், ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கிருந்து சனிக்கிழமை சீனாவுக்கு செல்கிறார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் (மேற்கு) சுஜாதா மேத்தா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வியத்நாமுக்கு பிரதமர் மோடி இன்று வெள்ளிக்கிழமை செல்கிறார். பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அந்நாட்டு உயரதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
விஜயவாடாவில் மெட்ரோ ரயில் திட்டம்
விஜயவாடாவில் இன்னும் 4 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திரப் பிரிவினைக்குப் பின், அம்மாநில அரசு முக்கிய நகரங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, விஜயவாடாவில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து, கடந்த ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த ஜைகோ (ஜப்பான் இண்டர்நேஷனல் கார்பொரேஷன்) நிறுவனத்திடம் ஆந்திர அரசு கடனுதவி கோரியது.
தமிழ்நாடு :
ஜிஎஸ்டி மசோதா: புதுச்சேரி சட்டப் பேரவையில் ஒப்புதல் தெரிவித்து தீர்மானம்
சரக்கு மறறும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி)-க்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஒப்புதல் கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை பேரவையில் தாக்கல் செய்தார்.
"ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேலும் 40 நகரங்கள்: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு
"ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மேலும் 40 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
சென்னை ஐஐடி, இந்திய தேசிய பொறியியல் அகாதெமி (ஐஎன்ஏஇ) ஆகியன இணைந்து நடத்தும் மூன்று நாள் "பொறியாளர்கள் மாநாடு 2016' சென்னை ஐஐடி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், வெங்கய்ய நாயுடு பேசியது:-
ஆக்கிரமிப்புகள், அனுமதி இல்லாத கட்டடங்கள் பெருகுவதால் நகரங்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், பெரிய அகலமான சாலைகள், தடையற்ற மின்சாரம், திட்டமிட்டு கட்டப்பட்ட வீடுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய 100 "ஸ்மார்ட்' நகரங்கள் உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆதிநாதன் நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆதிநாதனை நியமித்து, இதற்கான உத்தரவை மத்திய அரசின் சட்டம்- நீதி அமைச்சகத்தின் இணைச் செயலர் ராஜீந்தர் காஷ்யப் பிறப்பித்துள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மை செஷனஸ் நீதிமன்ற நீதிபதியாகப் பணிபுரிந்த ஆதிநாதன், ஜனவரி 19-இல் ஓய்வு பெற்றார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
கீழமை நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிமன்ற நடுவராகப் பணியைத் தொடங்கி, 2000-இல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.
விளையாட்டு :
அமெரிக்க ஓபன்: ரயோனிச், முகுருஸா அதிர்ச்சித் தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான முகுருஸா, 5-ஆம் நிலை வீரரான மிலோஸ் ரயோனிச் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 3-ஆவது நாளான புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் முகுருஸா 5-7, 4-6 என்ற நேர் செட்களில் உலகின் 48-ஆம் நிலை வீராங்கனையான லத்வியாவின் அனாஸ்டாஸியாவிடம் வீழ்ந்தார்.
வங்கதேச பந்துவீச்சு பயிற்சியாளராக வால்ஷ் நியமனம்
வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் கேப்டன் கோர்ட்னி வால்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் 2019 உலகக் கோப்பை போட்டி வரை பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2001-இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வால்ஷ், சர்வதேச போட்டியில் விளையாடும் சீனியர் அணிக்கு முதல்முறையாக பயிற்சியளிக்கவுள்ளார்.

வர்த்தகம் :
ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு எதிரொலி: டெலிகாம் நிறுவனங்களுக்கு ரூ.16,997 கோடி இழப்பு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன கட்டண அறிவிப்பையடுத்து, தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.16,997 கோடி குறைந்ததுரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு, ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சலுகை  திட்டங்களை அறிவித்தார்.
இதன் எதிரொலியாக, தொலைத் தொடர்புத் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.16,997 கோடி வரை இழப்பைக் கண்டது.


No comments: