Thursday 8 September 2016

Daily Current Affairs For Competitive Exam - 8th September

உலகம் :
ஜப்பான் பிரதமருடன் மோடி ஆலோசனை
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேவை சந்தித்துப் பேசினார்.


லாவோஸில் 14-ஆவது "ஆசியான்' இந்தியா உச்சிமாநாடும், 11-ஆவது கிழக்காசிய உச்சி மாநாடும் வியாழக்கிழமை நடைபெறுகின்றன. இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேற்கண்ட உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக லாவோஸ் தலைநகர் வியன்டியானுக்கு வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயை பிரதமர் மோடி புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
இரு தலைவர்களும் இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. முன்னதாக, இரு தலைவர்களும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க இருப்பதாக ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தென் சீனக் கடல் விவகாரம்: பிலிப்பின்ஸுக்கு 2 ராணுவ விமானங்களை வழங்குகிறது அமெரிக்கா
பிலிப்பின்ஸுக்கு இரு ராணுவ விமானங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுடன் மோதி வரும் பிலிப்பின்ஸ், இந்த விமானங்கள் மூலம் அந்தப் பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிலிப்பின்ஸ் கடலோரக் காவல்படை செய்தித் தொடர்பாளர் அர்மாண்ட் பாலிலோ கூறியதாவது:
தான் பயன்படுத்தி வந்த இரு ஷெர்பா ராணுவ விமானங்களை பிலிப்பின்ஸுக்கு அமெரிக்கா அளிக்கவிருக்கிறது.
30 இருக்கைகளைக் கொண்ட அந்த விமானங்கள், கடலோர ரோந்துப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குப் பயன்படக்கூடியவை என்றார் அவர்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகா டுடேர்தே தகாத வார்த்தைகளால் திட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா :
விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்05 ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட இன்சாட்-3டிஆர் செயற்கைக் கோளை சுமந்துகொண்டு ஜிஎஸ்எல்வி - எஃப்05 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

முன்னதாக இன்று மாலை 4.10 மணிக்கு ஏவப்பட இருந்த இந்த செயற்கைக் கோள் எரிபொருள் நிரப்ப தாமதமானதால் 40 நிமிடங்கள் தாமதமாக அதாவது மாலை 4.50 மணிக்கு ஏவப்பட்டது.

காலநிலையை முன்கூட்டியே துல்லியமாக கணிக்கக்கூடிய நவீன வசதிகளைக் கொண்டதாக இன்சாட்-3டிஆர் செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) தயாரித்த இந்தச் செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-05 ராக்கெட் விண்ணில் சுமந்து சென்றது. இது இந்தியாவின் 10-ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.
இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட இன்சாட்-3டிஆர் செயற்கைக் கோள் இன்று மாலை 40 நிமிடங்கள் தாமதமாக விண்ணில் ஏவப்பட உள்ளது.

இன்று மாலை 4.10 மணிக்கு ஏவப்பட இருந்த இந்த செயற்கைக் கோள் 40 நிமிடங்கள் தாமதமாக அதாவது மாலை 4.50 மணிக்கு ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

காலநிலையை முன்கூட்டியே துல்லியமாக கணிக்கக்கூடிய நவீன வசதிகளைக் கொண்ட இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.
தமிழ்நாடு :
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க செப்.14 வரை நீட்டிப்பு
குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று வியாழக்கிழமை (செப்.8) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்  செப்.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு கட்டணம் செலுத்த செப்.16-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் 5 ஆயிரத்து 451 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. கடந்த ஒரு மாதமாக இணைய வழியாக (www.tnpsc.gov.in) தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். எழுத்துத் தேர்வானது நவம்பர் 6 ஆம் தேதியன்று காலை 10 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விளையாட்டு :
அமெரிக்க ஓபன்: அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ், பிளிஸ்கோவா!
மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு செரீனா வில்லியம்ஸ், பிளிஸ்கோவா, கரோலினா வோஸ்னியாக்கி, ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளார்கள். 
அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலேப்பைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னெறினார். 
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா,  6-2, 6-2 என்ற நேர் செட்களில் அனா கோன்ஜூவைத் தோற்கடித்தார். இவர், அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸுடன் மோதவுள்ளார்.
வர்த்தகம் :
சென்செக்ஸ் 445 புள்ளிகள் அதிகரிப்பு
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 445 புள்ளிகள் அதிகரித்தது.
புதிய வர்த்தக ஆணைகள் கிடைத்ததையடுத்து உள்நாட்டு சேவைத் துறை கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டது. இந்த செய்தி, பங்கு முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் வேலை வாய்ப்பு குறித்து கடந்த வாரம் வெளியான புள்ளிவிவரம் சந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இல்லாததால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் வாய்ப்பு குறைவு என்ற நிலைப்பாடும் பங்கு வர்த்தகத்துக்கு வலு சேர்த்தது.


No comments: