உலகம் :
தென் சீனக் கடலில் சீனா, ரஷ்யா போர் ஒத்திகை
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் சீன, ரஷ்ய கடற்படைகள்
நேற்று போர் ஒத்திகையைத் தொடங்கின.
தென்சீனக் கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு
பிலிப்பைன்ஸ், மலேசியா, ஜப்பான், வியட்நாம், புரூனே உள் ளிட்ட நாடுகள் கடும்
எதிர்ப்பு தெரி வித்து வருகின்றன. அந்த கடல் பகுதியில் செயற்கை தீவுகளை அமைத்துள்ள
சீன ராணுவம், விமானப்படைத் தளங்களையும் அமைத்துள்ளது.
இந்நிலையில் தென்சீனக் கடலில் குறிப்பிட்ட சில தீவுகள்
பிலிப்பைன்ஸுக்குச் சொந்த மானவை என்று ஜெனீவாவில் உள்ள கடல்சார் தீர்ப்பாயம் அண்
மையில் தீர்ப்பளித்தது. ஆனால் இந்தத் தீர்ப்பை சீனா ஏற்கவில்லை.
சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்த அந்தப் பகுதியில் அமெரிக்க
கடற்படை போர் விமானங்கள் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்குப்
போட்டியாக சீன, ரஷ்ய கடற்படைகள் இணைந்து அங்கு நேற்று போர் ஒத்திகையை தொடங்கின.
இந்தியா :
அஞ்சல் துறை புகார்களுக்கு ‘1924’- கட்டணமில்லா தொலைபேசி எண்
அறிமுகம்
அஞ்சல் துறை தொடர்பான
புகார் களை பொதுமக்கள் பதிவு செய்ய, அழைப்புக் கட்டணமில்லாத ‘1924’ என்ற தொலைபேசி
எண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா இச்சேவையை
நேற்று டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது,
“பொதுமக்களிடம் குறை கள் கேட்கும் பிரிவை அனைத்து துறைகளும் ஏற்படுத்தவும் வலுப்
படுத்தவும் வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வகையில் அஞ்சல் துறை தொடர்பாக புகார்களை ட்விட்டரில் பெறும்
வகையில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி, ‘ட்விட்டர் சேவா’ தொடங்கினோம். தற்போது ‘1924’
என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகம் செய் துள்ளோம்.
உத்தராகண்ட்டில் நாளை முதல் இந்திய- அமெரிக்க வீரர்கள் கூட்டு
ராணுவ பயிற்சி
இந்தியா அமெரிக்கா இடையி லான பாதுகாப்பு ஒத்துழைப்பு
நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இருநாட்டு வீரர்களும் இணைந்து, கூட்டு ராணுவப்
பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.
‘யுத் அப்யாஸ்’ என்ற பெயரில், நாளை (14-ம் தேதி) முதல் 27-ம் தேதி
வரை, உத்தராகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள சவுபாட்டியாவில் இந்தியா
அமெரிக்கா இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
தீவிரவாதத்துக்கும், ஊடுருவல் பிரச்சினைகளுக்கும் எதிராக ஐநா
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருநாடுகளும் இணைந்து செயல் பட்டு வரும் நிலையில்,
பரஸ்பர ஒத்துழைப்பை உறுதிப்படுத் தும் விதமாக இப்பயிற்சி நட வடிக்கைகள்
மேற்கொள்ளப் படுவதாக, பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு :
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரே நாளில் 6 லட்சம் பேர்
விண்ணப்பம்
தமிழகத்தில், 31 மாவட்டங்களில், நேற்று முன்தினம் நடந்த வாக்காளர்
சிறப்பு முகாமில், புதிதாக பெயர் சேர்க்க, ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்., 1ம்
தேதி துவங்கியது. தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெயர் சேர்க்க
விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ராமநாதபுரம் தவிர, 31 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஓட்டுச்
சாவடிகளிலும், நேற்று முன்தினம், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது;
இம்முகாம்களில், 2017 ஜன., 1ம் தேதி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்,
வாக்காளர்களாக விண்ணப்பக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
'குரூப் - 4' தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி
அரசுத் துறையில், 5,451 காலியிடங்களுக்கான, 'குரூப் - 4' தேர்வுக்கு
விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். தமிழக அரசுத் துறையில், இளநிலை உதவியாளர்,
டைப்பிஸ்ட் போன்ற, ஏழு வகையான, 'குரூப் - 4' பதவிகளுக்கு, 5,451 காலியிடங்கள்
நிரப்பப்பட உள்ளன.
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, செப்., 8 கடைசி நாளாக,
அறிவிக்கப்பட்டு இருந்தது. கடைசி இரண்டு நாட்களில், இணையதளத்தில் பிரச்னை
ஏற்பட்டதால், விண்ணப்ப பதிவுக்கான காலக்கெடு, செப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு, நாளை முடிகிறது. விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் வரை
காத்திருக்காமல், விரைந்து விண்ணப்பிக்குமாறு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள்
அறிவுறுத்தி உள்ளனர்.
விளையாட்டு :
பாராலிம்பிக் போட்டி குண்டு எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளிப்
பதக்கம்
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில்
மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளிப் பதக்கம்
வென்றார். அவர் 4.61 மீட்டர் தூரம் எறிந்தார். இதன் மூலம் பாராலிம்பிக்கில்
பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் தீபா மாலிக் படைத்தார். 49
வயதான தீபா மாலிக்குக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தீபாவின் கணவர் ராணுவ அதிகாரி
ஆவார்.
17 வருடங்களுக்கு முன்பு முதுகுத்தண்டில் ஏற்பட்ட கட்டி காரணமாக
தீபாவால் நடக்க முடியாமல் போனது. அன்று முதல் வீல்சேரில் அமர்ந்த அவர்
தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. குண்டு எறிதல் தவிர ஈட்டி எறிதல், நீச்சல்,
பேச்சாளர் ஆகிய பன்முக திறனையும் கொண்டவர் தீபா. சர்வதேச நீச்சல் போட்டிகளில் பல்வேறு
பதக்கங்களையும் பெற்றுள்ளார் தீபா மாலிக்.
அமெரிக்க ஓபன் டென்னிஸில் முதன்முறையாக பட்டம் வென்றார்
வாவ்ரிங்கா: முதல் நிலை வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தினார்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரான
ஜோகோவிச்சை வீழ்த்தி, சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம்
போட்டியான இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான
செர்பியாவின் ஜோகோவிச், 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை
எதிர்த்து விளையாடினார்.
வர்த்தகம் :
ஐடி ஏற்றுமதி வளர்ச்சி 7-9%: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் கணிப்பு
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி வருமான வளர்ச்சி
எதிர்பார்ப்பு நடப்பு நிதியாண்டில் 7 முதல் 9 சதவீதமாக, ஒற்றை இலக்கத்தில்
இருக்கும் என்று தகவல் தொழில் நுட்பத்துறை மூத்த தலைவரும், இன்போசிஸ் நிறுவனத்தின்
நிறு வனர்களில் ஒருவருமான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு
கூறியுள்ளார்.
தொழில்துறை அமைப்பான நாஸ்காம் 10-12 சதவீத வளர்ச்சி அடையும் என
இதற்கு முன்பு அறிவித்திருந்தது. இது குறித்து அவர் கூறும்போது ஐடி துறையின்
ஏற்றுமதி வளர்ச்சி வீதம் 7 முதல் 9 சதவீதத்துக்குள்தான் இருக்கும் என
எதிர்பார்ப்பதாகவும், இது மதிப்பீடு கிடையாது கணிப்புதான் என்று கூறினார்.
No comments:
Post a Comment