Monday 1 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 1st August

உலகம் :
உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியா சென்றார் ரணில் விக்ரமசிங்கா
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தோனேசியா புறப்பட்டு சென்றார்.


ரணில் விக்ரமசிங்க 12-வது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியா சென்றுள்ளார். அந்த மாநாட்டில் அவர் சொற்பொழிவாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பின்னர், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடூடூ மற்றும் மலேசியா, ஜோர்டான் நாட்டுத் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2015-ல் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்தோனேசியாவுக்கு வருகை தருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
70 % ஐஎஸ் அமைப்பினர் பாக்., நாட்டவர்: அமெரிக்கா
ஆப்கானிஸ்தானின் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் உள்ள 70 சதவீதம் பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அமெரிக்க ராணுவ தலைவர் தெரிவித்துள்ளார். இவர்கள் பாக்., தாலிபன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவ தலைவர் ஜான் டபிள்யூ.நிகோல்சன், ஆப்கானிஸ்தானில் தற்போது ஐஎஸ் அமைப்பின் பலம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 70 சதவீதம் பேர் பாகிஸ்தானின் தெக்ரிக் தாலிபன் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் ராணுவத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக பாக், விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். தங்களின் பலம் அதிகரித்து வருவதால் தங்களின் தாக்குதலையும் ஐஎஸ் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்தியா :
குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் ராஜினாமா
விரைவில் 75 வயதை அடையும் குஜராத் மாநில பாஜக முதல்வர் ஆனந்திபென் படேல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கட்சித்தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடைசியாக வந்த தகவல்களின் படி அவரது ராஜினாமாவை கட்சித் தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. இவர் தனது ராஜினாமா கடிதத்தை தனது முகநூலிலும் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் :
மேட்டூர் அணை திறப்பு தாமதமாக வாய்ப்பு
மேட்டூர்:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், எதிர்பார்த்த மழையில்லாததால், கர்நாடக அணைகளின் நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால், டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்க தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், இரு வாரத்திற்கு முன், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால், கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு வந்த நீரின் ஒரு பகுதி, மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக, நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்ததால், நேற்று கே.ஆர்.எஸ்., அணைக்கு வினாடிக்கு, 7,500 கனஅடி, கபினிக்கு, 3,500 கனஅடி நீர் மட்டுமே வந்து
கொண்டிருந்தது.இரு அணைகளில் இருந்தும், 6,500 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இரு அணைகளின் நீர்வரத்து சரிந்ததால், மேட்டூர் அணைக்கு குறைவான தண்ணீரே திறக்கப்படுகிறது.
எம்.பி.., படிப்பிற்கான ..எம்., தேர்வு அறிவிப்பு
..எம்., போன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில், எம்.பி.., படிப்பில் சேரும், 'கேட்' என்ற பொது நுழைவு தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, ஆக., 8ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது...எம்., நிறுவனங்களில், எம்.பி.., படிக்க, 'கேட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு கேட் தேர்வை, பெங்களூரு ..எம்., நடத்துகிறது. இதற்கு, ஆகஸ்ட், 8 முதல் செப்., 22 வரை, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அக்., 18 முதல் டிச., 4 வரை, 'ஹால் டிக்கெட்' கிடைக்கும். டிசம்பர், 4ல், ஆன்லைனில் நத்தப்படும் இத்தேர்வு, 138 நகரங்களில் நடைபெறும்.
இந்த ஆன்லைன் தேர்வில், நான்கு கட்டங்களாக பதில் எழுத வேண்டும். ஒவ்வொரு கட்ட தேர்வுக்கும், 60 நிமிடங்கள் அளிக்கப்படும். ஒரு கட்டத்தை தாண்டினால் மட்டுமே அடுத்த கட்ட தேர்வு, ஆன்லைனில் செயல்பாட்டுக்கு வரும்.சிந்தித்து எழுதுதல், புதிய எண்ணங்களை கொண்டு வருதல், கணித ஆய்வு, சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் போன்ற வகைகளில் வினாக்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் முடிவுகள், ஜனவரியில் வெளியாகும் என, பெங்களூர் ..எம்., பேராசிரியரும், கேட் தேர்வு பொறுப்பாளருமான, ராஜேந்திர கே.பண்டி அறிவித்துள்ளார்.
தூய்மை பள்ளி விருது விண்ணப்பிக்க அவகாசம்
துாய்மை பள்ளிக்கான விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஆக., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற, துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் துாய்மையை பேணும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் சோப்பு வழங்குதல், கழிப்பறைகள் கட்டி பராமரித்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுத்தமான, 500 பள்ளிகளை தேர்வு செய்து, தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசும், 'ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்' என்ற விருதையும், மத்திய அரசு வழங்குகிறது. இந்த ஆண்டு துாய்மை பள்ளி விருதுக்கு விண்ணப்பிக்க, ஜூலை, 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஆக., 12 வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை, மத்திய அரசின் http://mhrd.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விளையாட்டு :
நரசிங் யாதவுக்கு 'கிரீன் சிக்னல்': ரியோ ஒலிம்பிக்கில் வாய்ப்பு
ஊக்க மருந்து சோதனையில் இருந்து மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் விடுவிக்கப்பட்டார். இவர், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ், 26. டில்லி காமன்வெல்த்தில் (2010) தங்கம், 2014 ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்றவர். 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கி.கி., பிரிவு) வெண்கலம் வென்று, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு (ஆக.,5-21) நேரடியாக தகுதி பெற்றார்.
வணிகம் :
பொருளாதார வளர்ச்சி அடைந்தாலும் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை: இன்ஃபோசிஸ்
நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வரும் நிலையிலும், போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கே.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், மேற்கு வங்க மாநிலம், கரக்பூரில் நடைபெற்ற ஐஐடி கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசியதாவது:
கடந்த 2008-ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, உலக நாடுகளில் வருவாய் ஏற்றத்தாழ்வு உருவானது. எனினும், இந்தியாவில் குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டதால், நமது பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், நம்மால் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.
சில தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. முறையான பாதுகாப்புகள் இல்லாமலும், நாச வேலைகளுக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால் கடுமையான பாதிப்பு ஏற்படும்.
தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு முன்னால், அவற்றின் எதிர்மறை பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகளும், மாணவர்களும் ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாகும் என்றார் கோபாலகிருஷ்ணன்.


No comments: