Monday 29 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 29th August

விளையாட்டு :
சிந்துசாக்ஷிதீபாவுக்கு பரிசுக் கார்களை வழங்கினார் சச்சின்
ரியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்ட பி.வி.சிந்துசாக்ஷி மாலிக்தீபா கர்மாகருக்கு பரிசாக அறிவிக்கப்பட்ட காரை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஞாயிற்றுக்கிழமை வழங்கி கெளரவித்தார்.


ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளி வென்ற சிந்துமல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக்ஷிஇந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய தீபா கர்மாகர்சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளிப்பதாக ஹைதராபாத் மாவட்ட பாட்மிண்டன் சங்கத் தலைவர் சாமுண்டேஷ்வரநாத் அறிவித்திருந்தார்
ரியோ ஒலிம்பிக்கிற்கான இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர் சச்சின்ஹைதராபாதில் நடைபெற்ற அதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நால்வருக்கும் கார்களை பரிசாக வழங்கினார்.
சிந்துசாக்ஷிதீபா உள்ளிட்ட நால்வருக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்ளிட்ட 4 பேர்விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.
ரியோ ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர்துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜிது ராய் ஆகியோர் கேல் ரத்னா விருதுக்குத் தேர்வான மற்ற இருவர் ஆவர்ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியரான தீபா கர்மாகர் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார்துப்பாக்கிச் சுடுதல் வீரரான ஜிது ராய்ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.
தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படும் இன்று (ஆகஸ்ட் 29-ம் தேதி), குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கண்ட வீரர்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
கனெக்டிகட் ஓபன்பட்டம் வென்றது சானியா ஜோடி
அமெரிக்காவில் நடைபெற்ற கனக்டிகட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-ருமேனியாவின் மோனிகா நிகலெஸ்கு ஜோடி பட்டம் வென்றது.
நியூ ஹேவன்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் சானியா-மோனிகா ஜோடிஉக்ரைனின் காட்டெரைனா பொன்டாரென்கோ-தைவானின் சுவாங் சியா ஜங் இணையை எதிர்கொண்டது.
ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதியில், 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்றது சானியா-மோனிகா ஜோடி.
உலகம் :
ஜிஎஸ்டி மூலம் இந்தியாவுடன் வர்த்தகம் உத்வேகம் பெறும்: அமெரிக்கா
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படுவதால் இந்தியாவுடனான வர்த்தக உறவு உத்வேகம் அடையும் என்று அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக திங்கள்கிழமையன்று இந்தியாவுக்கு வரும் அவர், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தகம் ரூ.7,31,000 கோடியாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இரு தரப்பு வர்த்தக உறவு மேலும் உத்வேகம் பெறும். அதிபர் ஒபாமா தலைமையிலான கடந்த ஏழரை ஆண்டுகால ஆட்சியில் அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவு சிறப்பாக மேம்பட்டுள்ளது. முக்கியமாக உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக அமெரிக்காவும், இந்தியாவும் உருவெடுத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இருநாடுகளிடையிலான வர்த்தகம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
உலகின் முதல் பிரமிடு கஜகஸ்தான் நாட்டில்தான் கட்டப்பட்டது: ஆராய்ச்சியாளர்கள் தகவல்
எகிப்தின் கெய்ரோவில் இருந்து 3,900 மைல்கள் வடகிழக் கில் கஜகஸ்தானின் சார்யார்கே பகுதியில் ஒரு பழமையான பிரமிடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘டிஸோசர்பிரமிடு, கி.மு. 2700–ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரமிடு எகிப்தில் அமைந்துள்ளடிஸோசர்பிரமிடை விட ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அத்துடன், குறிப்பிட்ட பிரமிடா னது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா :
தில்லியில் இன்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி தலைமையில்  கலந்தாய்வு கூட்டம்
தில்லியில் இன்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி தலைமையில்  கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. வலைதள சந்தை நிறுவனங்கள், சில மாநிலங்களில் வரி பிரச்னைகளையும் சந்தித்து வருகின்றனஇதையடுத்து, மத்திய அரசு, மின்னணு வர்த்தகத் துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, சமீபத்தில் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவின் முதல் கூட்டம், தில்லியில், 'நிடி ஆயோக்' தலைமை செயல் அதிகாரி தலைமையில் இன்று நடைபெறுகிறதுஇந்த கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள், மின்னணு வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள், மஹாராஷ்டிரா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட ஆறு மாநில அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்இதில்மின்னணு வர்த்தகம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனை நடைபெறும் என, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
52-வது நாளாக நீடித்து வரும் ஊரடங்கு உத்தரவு: காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருவதால் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து 52-வது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 8-ம் தேதி, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதை அடுத்து, பிரிவினைவாதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்புப் படையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி எறிவதால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலம் காயமடைந்துள்ளனர்.
நவீன ராக்கெட் என்ஜின்: இஸ்ரோ சோதனை வெற்றி
காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நவீன ராக்கெட் என்ஜின் பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.
"ஸ்கிரேம்ஜெட்' என அழைக்கப்படும் இந்த ராக்கெட் என்ஜின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் விண்ணில் ஏவி இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பரிசோதித்தனர்.
எடை குறைந்த அதேநேரத்தில் திறன்மிக்க இந்த நவீன ராக்கெட் என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தது, இந்திய விண்வெளி ஆராய்ச்சில் ஒரு மைல் கல் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தாஜ்மஹாலில் மியான்மர் அதிபர்
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மகாலை மியான்மர் அதிபர் யு ஹிடின் கியாவ் ஞாயிற்றுக்கிழமை சுற்றிப் பார்த்தார்.
இதையொட்டி, தாஜ்மகாலில் பிற சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதேபோல், தாஜ்மகாலில் டிக்கெட் விற்பனையும் சுமார் 2 மணி நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மியான்மர் அதிபர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, எல்லைப் பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்களைக் கட்டுப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
தமிழ்நாடு :
சென்னையில் 2 வழித்தடங்களில் மோனோ ரயில் திட்டம்: முதல்வர் அறிவிப்பு
சென்னையில், போரூர்-வடபழனி, வேளச்சேரி-வண்டலூர் இடையே மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.
மோனோ ரயில் திட்டம் ரூ.3,267 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்த மோனோ ரயிலானது போரூர்-வடபழனி, வேளச்சேரி-வண்டலூர் ஆகிய 2 வழித்தடங்களில் 43.48 கி.மீ தூரத்திற்குச் செலுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
ரூ.6,665 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.6,665 கோடிக்கான பட்ஜெட்டை திங்கள்கிழமை தாக்கல் செய்தார் முதல்வர் வி.நாராயணசாமி. இதில் திட்டச்செலவுக்கு ரூ.2565 கோடியும், திட்டமல்லாச் செலவினத்துக்கு ரூ.4100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெறும் என அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து வியாழன், வெள்ளி ஆகிய இருநாள்கள் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, திமுக, சுயேச்சை எம்.எல்.ஏக்கள் 20 பேர் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

வர்த்தகம் :
பங்குச் சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் குறைந்து 67.18 ரூபாயாக இருந்தது.  மாத கடைசியானதால் அந்நிய செலாவணிச் சந்தையில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு அமெரிக்க டாலர் தேவை அதிகரித்து காணப்பட்டது.இதனால் ரூபாயின் மதிப்பு சற்று குறைந்தது. கடந்த வெள்ளியன்று வர்த்தக நேர முடிவின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 67.06 ரூபாயாக இருந்தது.
செப்டம்பர் இறுதியில் அலைக்கற்றை ஏலம்: மனோஜ் சின்ஹா தகவல்
வரும் செப்டம்பர் மாத இறுதியில் அலைக்கற்றை ஏலத்தை மேற்கொள்ள உள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா சனிக்கிழமை தெரிவித்தார்.
பெங்களூரில் ஹுவாவே நிறுவனத்தின் சர்வதேச சேவை மையத்தை (ஜி.எஸ்.சி.) சனிக்கிழமை திறந்து வைத்த அமைச்சர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
வரும் செப்டம்பர் மாதம் 29 அல்லது 30 தேதிகளில் அலைக்கற்றை ஏலத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.


No comments: