Tuesday 30 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 30th August

உலகம் :
வியாழனை நெருங்கியது நாசாவின் ஜூனோ விண்கலம்
வியாழன் கிரகத்தை ஆராய நாசாவால் அனுப்பப்பட்ட ஜூனோ என்ற விண்கலம் வியாழனுக்கு மிக அருகே நெருங்கி விட்டதாக நாசா அறிவித்துள்ளது.


அமெரிக்க விண்வௌி ஆய்வுமையம் நாசா கடந்த கடந்த 2011ம் வருடம் ஆகஸ்ட் 5ம் தேதி வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஜூனோ என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை அனுப்பியது. அது நேற்று வியாழனை அதிக பட்சமாக நெருங்கி விட்டது. இந்த விண்கலம் வியாழன் குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்புவதற்கு கிட்டதட்ட தயாராகி விட்டது.
வாயுக்களால் ஆன சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கோளான வியாழனுக்கு மேலே சுமார் 4500 கி.மீ., தூரத்தில் அது அந்த கிரகத்தை சுற்றி வர ஆரம்பித்துள்ளது. வியாழன் கிரகத்தை ஜூனோ விண்கலம் நெருங்கிய போது அது மணிக்கு 2,08000 கி.மீ.,வேகத்தில் பயணித்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்தியா :
செப்.1, 2-ல் "பிரிக்ஸ்' சுற்றுலாத் துறை அமைச்சர்கள் மாநாடு
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக "பிரிக்ஸ்' கூட்டமைப்பு நாடுகளின் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, வரும் 1-ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கஜுராஹோவில் தொடங்குகிறது.
இதுகுறித்து சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரேஸில், ரஷியா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (பிரிக்ஸ்) ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத் துறை அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் தலைமையில் காஷ்மீருக்கு செப்.4-இல் அனைத்துக் கட்சிக் குழு பயணம்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, வரும் செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் செல்கிறது.
இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் பர்ஹான் வானி, கடந்த மாதம் 8-ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, காஷ்மீரில் தொடர்ந்து 50 நாள்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியாக, ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு, வரும் செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி அங்கு பயணம் மேற்கொள்கிறது. அந்தக் குழு, பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துப் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு :
செல்லிடப்பேசி செயலியில் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு
நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு பேருந்துகளில் செல்லிடப்பேசி செயலி மூலமும் முன்பதிவினை மேற்கொள்ளும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நீண்டதூரப் பேருந்துகளுக்கு செல்லிடப்பேசி தனிச் செயலி வழியாக முன்பதிவு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
விளையாட்டு :
தெற்கு ரயில்வே சாம்பியன்
அகில இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில், தெற்கு ரயில்வே மண்டலம் சாம்பியன் பட்டம் வென்றது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், 13 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் 188 புள்ளிகளோடு தெற்கு ரயில்வே மண்டலம் சாம்பியன் பட்டம் வென்றது.
மத்திய ரயில்வே மண்டலம், 4 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 16 பதக்கங்கள், 106 புள்ளிகளோடு 2-ஆவது இடத்தைப் பிடித்தது. வடக்கு மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்கள் தலா 98 புள்ளிகளுடன் 3-ஆவது இடம் பிடித்தது. தெற்கு ரயில்வேயின் .செல்வன் சிறந்த தடகள வீரராகவும், வடக்கு ரயில்வேயின் கல்பனா ராணி சிறந்த தடகள வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் செல்வன், 100 மீ. மற்றும் 200 மீ. ஓட்டத்தில் தங்கமும், நீளம் தாண்டுதலில் வெள்ளியும் வென்றார். கல்பனா ராணி, 200 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் என மூன்றிலும் தங்கம் வென்றார்.
வர்த்தகம் :
இந்தியன் ஆயில் லாபம் 25% அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (..சி.) முதல் காலாண்டு லாபம் 25 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ..சி. நிறுவனம் ரூ.1,14,200.24 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.1,14,200.24 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் குறைவாகும்.
பொது விநியோக திட்டத்தின் கீழ் மண்ணெண்ணெய் விற்பனை செய்த வகையில் நிறுவனத்துக்கு ரூ.1,331.69 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
கார்பரண்டம் யூனிவர்ஸல்: ஓசூரில் புதிய ஆராய்ச்சி மையம் தொடக்கம்
முருகப்பா குழுமத்தின் ஓர் அங்கமான கார்பரண்டம் யூனிவர்ஸல் நிறுவனம் ஓசூரில் உள்ள அதன் செராமிக் ஆலையில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் எம்.எம். முருகப்பன் கூறியதாவது:
மூலப் பொருள் அறிவியல் பிரிவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த மையம், மூலப் பொருள் பண்புகள், நுண்வடிமைப்புகளை ஆராயும் வகையிலான அதி நவீன உபகரணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.


No comments: