உலகம் :
இத்தாலியில் நிலநடுக்கம்
மத்திய இத்தாலியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியடைந்தமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் திரண்டனர்.
இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகபதிவாகியுள்ளது. சில விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோஅல்லது பொருள்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.
தனிநபர் சொத்து: 7-ஆவது இடத்தில் இந்தியா
உலக நாடுகளில், மொத்த தனிநபர் சொத்து மதிப்பு அதிகம் கொண்ட நாடுகளின்பட்டியலில் இந்தியா 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச சந்தை ஆய்வு அமைப்பான "நியூ வேர்ல்டு வெல்த்', இந்த ஆண்டு ஜூன்மாத நிலவரப்படி அதிக மதிப்பிலான மொத்த தனி நபர் சொத்துகளைக்கொண்டுள்ள முதல் 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது.
அதில் இந்தியா 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா :
வங்கதேசத்துக்கான சிறப்பு வானொலி ஒலிபரப்பு: குடியரசுத் தலைவர்தொடங்கி வைத்தார்
அண்டை நாடான வங்கதேசத்துக்கான சிறப்பு வானொலி ஒலிபரப்பை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
வங்கதேசத்துடன் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிவங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டுக்காக வானொலிசேவையை அளிப்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து அந்நாட்டுக்காக சிறப்பு வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த ரகசியங்கள் கசிந்ததால் அதிர்ச்சி:விசாரணைக்கு உத்தரவு
இந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த ரகசிய ஆவணங்கள் ஆஸ்திரேலியஇணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்துமாறுமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவுபிறப்பித்துள்ளார்.
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த ரகசியங்கள், ஆஸ்திரேலியபத்திரிகையின் இணையதளத்தில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது.
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து மிக மிக பாதுகாப்பானமுறையில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 22 ஆயிரம் பக்கங்களைக் கொண்டரகசிய ஆவணங்கள் இணையதளத்தில் வெளியானது.
காஷ்மீருக்குப் புறப்பட்டார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை குறித்து ஆலோசனை நடத்த மத்தியஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
கடந்த மாதம் ஹிஸ்புல் பயங்கரவாதி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஒருமாதத்திற்கும் மேலாக காஷ்மீரில் நிலவி வரும் வன்முறையால் அங்குள்ளமக்களின் இயல்வு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நிலவும் பிரச்னை குறித்து தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியில் இருந்து புறப்பட்டுள்ளார்.அவர் காஷ்மீரில் நேரு விருந்தினர் மாளிகையில் தங்க உள்ளதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு :
புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துணை நிலை ஆளுநர்உரையுடன் தொடங்குகின்றது.
கடந்த மே மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ்-திமுக கூட்டணி வென்று, முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதிய அரசுஅமைந்துள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டப்பட்டு, பட்ஜெட் தாக்கல்செய்யப்பட வேண்டியுள்ளது. இதற்காக, மாநில அரசு ரூ.7,645 கோடிக்கு பட்ஜெட்நிதி கோரி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதற்கிடையே மத்தியநிதி அமைச்சகம் புதுவை மாநில அரசின் கோரிக்கையை பரிசீலித்து வருகிறது.பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறித்த மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் வெளியாகும்எனத் தெரிகிறது.
4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
நான்காண்டு ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், செவ்வாய்க்கிழமை அவர் படித்தளித்தஅறிக்கை:
தேசிய ஆசிரியர் கல்வியியல் மன்றமானது 15 புதிய ஆசிரியர் கல்வியியல்படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்தபி.ஏ., பி.எட்., பி.எஸ்.சி., பி.எட்., பாடப் பிரிவுகளும் அடங்கும். இந்த நான்குஆண்டு ஒருங்கிணந்த பாடப் பிரிவுகள், இந்த கல்வியாண்டு முதல் கல்வியியல்கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும்.
விளையாட்டு :
இரட்டையர் தரவரிசை முதலிடத்தில் சானியா
மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்ஸாமுதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில்செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவாவுடன் இணைந்து சாம்பியன் பட்டம்வென்றதன் மூலம் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
வர்த்தகம் :
ஆர்பிஎல் வங்கி ஐபிஓ: 70 மடங்கு கூடுதல் விண்ணப்பம்
ஆர்பிஎல் வங்கியின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு வங்கி நிர் ணயித்த இலக்கைவிட 70 மடங்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில்தனியார் வங்கி பொதுப் பங்கு வெளியீட்டுக்கு இந்த அளவு கூடுதல்விண்ணப்பங்கள் வந்தது இதுவே முதல் முறையாகும்.
மொத்தம் 2,63,73,00,965 பங்கு கள் கோரி விண்ணப்பங்கள் வந் துள்ளன. மொத்தமே3,79,01,190 பங்குகளுக்குத்தான் வங்கி விண் ணப்பங்களை கோரியிருந்தது.
No comments:
Post a Comment