உலகம் :
உலகின் மிக நீளமான கண்ணாடிப் பாலம்! சீனா சாதனை
உலகின் மிக உயரமான மற்றும் நீளமான கண்ணாடிப் பாலம்சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் ஹூணன் மாகாணத்தில் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்ட இந்தப் பாலத்தின் நீளம் 430 மீட்டர் (1,400 அடி) ஆகும்.
பூமியிலிருந்து 300 மீட்டர் உயரத்தில் இந்தப் பாலம்ஷாங்ஜியாஜியே மலைப் பூங்காவின் இரு மலைகளுக்கு இடையேஅமைக்கப்பட்டுள்ளது.
ஆறு மீட்டர் அகலத்தில், 99 கண்ணாடித் தகடுகளால்உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தை, ஒரே நேரத்தில் 800 பேர்கடக்கலாம்.
வட கொரிய அணு ஆயுத மிரட்டலையும் மீறி அமெரிக்கா - தென் கொரியா ராணுவப் பயிற்சி
வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலையும் மீறி அமெரிக்காவும்,தென் கொரியாவும் தனது வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சியைதிங்கள்கிழமை தொடங்கின.
இரண்டு வாரங்கள் நடைபெறவிருக்கும் இந்த ராணுவப்பயிற்சியின்போது, தென் கொரியா மீது அணு ஆயுத பலம் கொண்டவட கொரியா படையெடுத்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வதுஎன்பது குறித்த போர் ஒத்திகை மேற்கொள்ளப்படும்.
பெரும்பாலும் கணினியைப் பயன்படுத்தியே இந்தப் பயிற்சிகள்மேற்கொள்ளப்பட்டாலும், இந்தப் போர் ஒத்திகையில் 50,000 தென்கொரிய வீரர்களும், 25,000 அமெரிக்க வீரர்களும் ஈடுபடுத்தப்படுவர்.
இந்தியா :
பஞ்சாப், அஸ்ஸாமில் புதிய ஆளுநர்கள் பதவியேற்பு
பஞ்சாப், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் புதிய ஆளுநர்களாகமுறையே வி.பி.சிங் பத்னோரும், பன்வாரிலால் புரோஹித்தும்திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அதேபோல், அந்தமான் - நிகோபார் தீவுகளின் துணைநிலைஆளுநராக அறிவிக்கப்பட்ட ஜெகதீஷ் முகியும் திங்கள்கிழமைபொறுப்பேற்றுக் கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தின் புதிய ஆளுநராகவும், சண்டீகர் நகர ஆட்சிநிர்வாகியாகவும் பொறுப்பேற்ற வி.பி.சிங் பத்னோருக்கு, சண்டீகர்உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஜே.வாசிஃப்தார் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.சிந்து, சாக்ஷி, தீபா உள்ளிட்ட நால்வருக்கு கேல் ரத்னா விருது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றபாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, வெண்கலம் வென்றமல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்ளிட்ட 4 பேர்,விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரியோ ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர், துப்பாக்கிச் சுடுதல்வீரர் ஜிது ராய் ஆகியோர் கேல் ரத்னா விருது பெறும் மற்ற இருவர்ஆவர்.
இந்தியா-அமெரிக்கா ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம்:விரைவில் கையெழுத்து
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்த மாத இறுதியில் வாஷிங்டனில்கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுக்கும்இடையே ராணுவச் சொத்துகளையும், ராணுவத் தளங்களையும்பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், வரும் 29-ஆம்தேதி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது, இருநாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம்கையெழுத்தாக உள்ளது.
தமிழ்நாடு :
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்: ஜெயலலிதாவின்அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, விதி எண் 110ன் கீழ் முதல்வர்ஜெயலலிதா அறிவித்ததாவது, தமிழகத்தில் உள்ளமலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும்.
பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும்மாணவர்களுக்கு ரெயின் கோட், பூட்ஸ், சாக்ஸ் ஆகியவைஇலவசமாக வழங்கப்படும்.
மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், மழைக்காலங்களில் எவ்வித சிரமமும் இன்றி பள்ளிக்குச் சென்று வரவசதியாக ரெயின்கோட் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பிஎஸ்என்எல்: அடுத்த 7 மாதங்களுக்குள் 300 இடங்களில் 4ஜிசேவை டவர்கள் அமைக்கப்படும்
அடுத்த 7 மாதங்களில் 300 இடங்களில் 4ஜி சேவை டவர்கள்அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிஎஸ்என்எல் தலைமைப்பொதுமேலாளர் எஸ்.எம்.கலாவதி தெரிவித்தார்.
அதாவது, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 300இடங்களில் 4ஜி டவர்கள் அமைக்கப்படும் என்று அவர்தெரிவித்தார்.
விளையாட்டு :
முதலிடத்தை இழந்தது இந்தியா
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 4-ஆவது டெஸ்ட்கிரிக்கெட் போட்டியின் கடைசி நாள் ஆட்டமும் மழையால்பாதிக்கப்பட்டதால் போட்டி டிராவில் முடிந்தது.
இந்தப் போட்டியின் முதல் நாளில் மட்டும் மேற்கிந்தியத் தீவுகள்அணி 22 ஓவர்கள் பேட் செய்தது. அதன்பிறகு தொடர்ந்து பெய்தமழையால் எஞ்சிய 4 நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது.இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரைஇந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
எனினும் சில தினங்களுக்கு முன்பு தரவரிசையில் முதலிடத்தைப்பிடித்த இந்திய அணி, இப்போது 2-ஆவது இடத்துக்குதள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முதல்முறையாக தரவரிசையில்முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 3-ஆவது இடத்தில்உள்ளது.
ரியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்
போட்டியில் மொத்தம் 207 நாடுகள் பங்கேற்றன. 28விளையாட்டுகளில் 306 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 11,544 வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொண்டனர். 87நாடுகள் பதக்கப் பட்டியலில் இடம்பிடித்தன. 59 நாடுகள் தங்கப்பதக்கம் வென்றன.
தங்கப் பதக்கங்களின் அடிப்படையில் நாடுகள்வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி அமெரிக்கா 46 தங்கம், 37வெள்ளி, 38 வெண்கலம் என மொத்தம் 121 பதக்கங்களுடன்முதலிடத்தைப் பிடித்தது. பிரிட்டன் 27 தங்கம், 23 வெள்ளி, 17வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களுடன் 2-ஆவதுஇடத்தையும், சீனா 26 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம் எனமொத்தம் 70 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்தையும் பிடித்தன.
2008-இல் முதலிடத்தையும், 2012-இல் 2-ஆவது இடத்தையும் பிடித்தசீனா, இந்த முறை மூன்றாவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம்கண்டது. ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷிய தடகள அணிக்கும்,அந்நாட்டைச் சேர்ந்த மேலும் சில விளையாட்டு வீரர்களுக்கும்தடை விதிக்கப்பட்டபோதும், ரஷிய அணி பதக்கப் பட்டியலில் 4-ஆவது இடத்தைப் பிடித்தது.
போட்டியை நடத்திய பிரேசில் 7 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம்என மொத்தம் 19 பதக்கங்களுடன் 13-ஆவது இடத்தைப் பிடித்தது.இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 67-ஆவது இடத்தைப்பிடித்ததது. 120 நாடுகள் பதக்கம் ஏதுமின்றி ஏமாற்றம் அடைந்தன.
வர்த்தகம் :
இறக்குமதி அதிகரிப்பு: உப்பு உற்பத்தி தொழில் பாதிப்பு
உப்பு உற்பத்தியில் சிறந்து விளங்கிய தூத்துக்குடியில் கடந்த சிலஆண்டுகளாகவே உற்பத்தி குறைந்து வருகிறது. உலகின் பல்வேறுநாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்த தூத்துக்குடி, தற்போது உப்புஇறக்குமதியை நம்பும் சூழல் உருவாகியுள்ளதால் உப்புஉற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நிலைகேள்விக்குறியாகி உள்ளது.
நாட்டில் உற்பத்தியாகும் மொத்த உப்பில் குஜராத் மற்றும்ராஜஸ்தான் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகஅளவு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை,மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 80% வரை தூத்துக்குடிமாவட்டத்தில் உற்பத்தியாகிறது.
No comments:
Post a Comment