Friday 26 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 26th August

உலகம் :
.நா. பொது சபை புதிய தலைவர் அடுத்த வாரம் இந்தியா வருகை
.நா. பொது சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பீட்டர் தாம்ஸன், வரும் திங்கள்கிழமை (ஆக. 29) இந்தியா வருகிறார்.


தற்போது .நா.வுக்கான ஃபிஜி நாட்டுத் தூதராகப் பொறுப்பு வகித்து வரும் அவர், அடுத்த மாதம் 16-ஆம் தேதி .நா. பொது சபைத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
அதற்கு முன்னதாக, சீனா மற்றும் இந்தியாவில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
உலக வங்கித் தலைவராக ஜிம் யோங் கிம் மீண்டும் நியமனம்
உலக வங்கி தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக ஜிம் யோங் கிம்மை அமெரிக்கா மீண்டும் நியமனம் செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதி அமைச்சர் ஜேக்கப் ஜே லியூ தெரிவித்துள்ளதாவது:
உலக வங்கித் தலைவர் பதவிக்கு ஜிம் யோங் கிம்மை மீண்டும் நியமனம் செய்வது பெருமை அளிப்பதாக உள்ளது.
இந்தியா :
சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம் - பிரதமர் மோடியுடன் சந்திப்பு
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தர்மன் சண்முகரத்னம் முக்கியமாக இரு நாட்டு உறவுகள் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிகார், கர்நாடகாவுக்கு 3 நாள் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்
பிகார் மற்றும் கர்நாடகாவிற்கு 3 நாள் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
சனிக்கிழமை ராஜ்கீரில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள முதல் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க உள்ளார்.
மேலும், அன்றைய தினம் பெங்களூரில் உள்ள அக்ஷயா பாத்திர பவுன்டேஷனில் நடைபெறும் விழாவில் பங்கேற்கின்றார்.
ஞாயிறன்று நேஷ்னல் சட்டப் பள்ளியில் நடைபெறும் 24-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு :
காவிரிப் பிரச்சினைக்காக பேரவையில் சுமுக நிலையை முதல்வர் ஏற்படுத்த வேண்டும்: அனைத்து விவசாயிகள் சங்கம் கோரிக்கை
காவிரிப் பிரச்சினை பெரிய அளவில் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில் சுமுகமான நிலையை ஏற்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: தமிழகத்தில் காவிரிப் பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, காவிரி நீரைப் பெற போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
விளையாட்டு :
4 வருடங்களாக ஐபிஎல்-லில் பெஞ்ச்; டிஎன்பிஎல்-லில் சாதித்துக் காட்டிய பாபா அபராஜித்!
ஐபிஎல் என்பது பலருக்கும் பல கதவுகளைத் திறந்துவைக்கும் வாய்ப்பாக உள்ள நிலையில் சிலருக்கு மட்டும் அணியில் இடம்பெறமுடியாத நிலைமை ஏற்பட்டு விடுகிறது. ஐபிஎல்-லில் அப்படி ஒரு துரதிர்ஷ்டம் பாபா அபராஜித்துக்கு ஏற்பட்டது.
2013-ம் வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வானார் பாபா அபராஜித். U19 உலகக்கோப்பையில் திறமையை வெளிப்படுத்தி அதிகக் கவனம் பெற்றதால் ஐபிஎல்-லிலும் தன்னை நிரூபிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அவர்மீது இருந்தது. ஆனால் எல்லாமே நேர்மாறாக நடந்தது. இன்றுவரை ஐபிஎல்-லில் பாபா அபராஜித்துக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை! சிஎஸ்கேவுக்குப் பிறகு புணே அணியில் தேர்வானார் பாபா. இந்த ஐபிஎல்-லில், புணே அணி தொடர்ந்து தோற்றபோதும், பலருக்குக் காயம் ஏற்பட்டு விலகியபோதும்கூட தோனி பாபாவைச் சீந்தவில்லை. அதே பெஞ்ச்!
இந்நிலையில் 4 ஐபிஎல்களுக்குப் பிறகு இப்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் போன்ற ஒரு பெரிய போட்டியில் விளையாடி தன் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் பாபா.
பாட்மிண்டன் தரவரிசை: சாய்னா பின்னடைவு
இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், உலக பாட்மிண்டன் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று குருப் சுற்றிலேயே வெளியேறிய சாய்னா, 4 இடங்கள் பின்னடைவைச் சந்தித்து, தற்போது இந்த இடத்துக்கு வந்துள்ளார்.
அதே ரியோ ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, தொடர்ந்து 10-ஆவது இடத்திலேயே நீடிக்கிறார்.
ஒலிம்பிக் பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் சீனாவின் லின் டானிடம் தோல்வியடைந்த ஸ்ரீகாந்த், ஆடவருக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 10-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
வர்த்தகம் :
விரிவாக்கத் திட்டங்களில் ரூ.650 கோடி முதலீடு செய்கிறது இந்தியன் ஆயில்
திரிபுரா மாநிலத்தில் உள்ள ஆலையில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (..சி.) அடுத்த 2-3 ஆண்டுகளில் ரூ.650 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் தீபாங்கர் ராய் கூறியதாவது:
அஸ்ஸாமில் உள்ள பழுதடைந்த என்எச்-44 தேசிய நெடுஞ்சாலை வழியே வடகிழக்கு மாநிலங்களுக்கு எரிபொருள்களை கொண்டு செல்வதை தவிர்த்து, முதன் முறையாக வங்கதேசம் வழியே வாகன போக்குவரத்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக வங்கதேச அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. ஒரு எரிபொருள் சரக்கு வாகனத்துக்கு சுமார் ரூ.1,300, வங்கதேச அரசுக்கு கட்டணமாக செலுத்தப்படும்.
வரும் செப்டம்பர் மாதம் வரையில் இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். இந்த திட்டத்தின் வெற்றியை பொருத்து இந்த ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்படும்.
விமானங்களில் "வை-ஃபை' வசதி: விரைவில் அறிவிப்பு
விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு "வை-ஃபை' வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை செயலர் ஆர்.என். சௌபே கூறியதாவது:
விமானப் பயணிகளுக்கு "வை-ஃபை' வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் உள்ளடங்கியுள்ளதால், உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம், தொலைத் தொடர்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து இது தொடர்பாக முடிவெடுக்க தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.


No comments: