உலகம் :
நேபாள பிரதமர் இந்தியா வர வாய்ப்பு
அண்மையில் நேபாளத்தில் பிரதமராகப் பதவியேற்ற பிரசண்டா, முதல்வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருவார் என்று கருதப்படுகிறது.
நேபாளத்தின் பிரதமராக இரண்டாவது முறை பிரசண்டா பதவியேற்றார். அரசுமுறைப் பயணமாக அவர் எந்த வெளிநாட்டுக்கு முதலில் செல்வார் என்பதுகுறித்து மிகுந்த பரபரப்புடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக இந்தியாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுள்ள பிரசண்டா, 2008-இல் முதல் முறையாக நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்றபோது, அரசுமுறைப் பயணமாக முதலில் சீனா சென்றார்.
இந்தியா :
சாக்சி மாலிக்கிற்கு ‘ராணி லட்சுமி பாய்’ விருது: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்சி மாலிக்கிற்கு ரூ.2.5 கோடி ரொக்கப்பரிசும், அரசு வேலையும் அளிக்கப்படும் என்று ஹரியாணா அரசுஅறிவித்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் மகளிர் 58 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில்இந்தியாவின் சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத்தந்தவர்என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு :
தியாகிகளுக்கான ஓய்வூதியத்தில் ரூ.5 ஆயிரம் உயர்வு
ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற பல்வேறு வகைபோராட்டங்களில் ஈடுபட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் மாதஓய்வூதியத்தில் ரூ. 5,000 உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டின் 70-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் பிரதமர்நரேந்திர மோடி ஆற்றிய உரையில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்குவழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை 20 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசுமுடிவு செய்திருப்பதாக அறிவித்திருந்தார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக,மேட்டூர் அணைக்கு புதன்கிழமை காலை நொடிக்கு 3,977 கன அடியாக வந்துகொண்டிருந்த நீர்வரத்து, வியாழக்கிழமை காலை நொடிக்கு 4,264 கன அடியாகஅதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கன அடி வீதமும் கிழக்கு,மேற்கு கால்வாயில் நொடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 64.09 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 27.82டி.எம்.சி.
7-ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த செலவாகும் ரூ. 500 கோடியை மத்தியஅரசு வழங்க வேண்டும்
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால் ஏற்படும் செலவு ரூ. 500கோடியை மத்திய அரசே வழங்க வேண்டும் என, முதல்வர் வி.நாராயணசாமிதெரிவித்தார்.
புதுச்சேரி அரசு நிதித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர்நாராயணசாமி தலைமையில் சட்டப் பேரவையில் வியாழக்கிழமைநடைபெற்றது.
தலைமைச் செயலர் மனோஜ் பரிஜா, நிதித் துறைச் செயலர் கந்தவேலு உள்படநிதித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விளையாட்டு :
200 மீ. ஓட்டத்திலும் ஹாட்ரிக் தங்கம்: உசேன் போல்ட் சாதனை!
ரியோ ஒலிம்பிக் ஆடவர் 200 மீ. ஓட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜமைக்காவின்உசேன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் 120 ஆண்டுகால நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீ. மற்றும் 200 மீ.ஓட்டங்களில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற முதல் நபர் என்றவரலாற்று சாதனையைப் படைத்துள்ளார் போல்ட்.
இன்று நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் உசேன் போல்ட் 19.78விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். அவருக்கு அடுத்தபடியாககனடாவின் டி கிரேஸ் (20.02 விநாடிகள்) வெள்ளியும், பிரான்சின் லெமைட்ரி (20.12விநாடிகள்) வெண்கலமும் வென்றனர்.
ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன்: வெள்ளியை உறுதி செய்தார் சிந்து
ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின்பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இதுதவிர ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியமுதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் சிந்து படைத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் சிந்துவுக்குதங்கப் பதக்கம் கிடைக்கும். இல்லையெனில் வெள்ளிப் பதக்கம் கிடைக்கும்.
வர்த்தகம் :
எஸ்.பி.ஐ.யின் 3 துணை வங்கிகளை இணைக்க நிர்வாகக் குழு ஒப்புதல்
மூன்று துணை வங்கிகளை இணைக்க பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.)நிர்வாகக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இதுகுறித்து மும்பை பங்கு சந்தைக்கு எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளதாவது:
ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் & ஜெய்ப்பூர் (எஸ்.பி.பி.ஜே.), ஸ்டேட் பேங்க் ஆப்மைசூர் (எஸ்.பி.எம்.), ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய மூன்று துணைவங்கிகளை இணைத்துக் கொள்ள பாரத ஸ்டேட் வங்கியின் இயக்குநர் குழுஅனுமதி வழங்கியுள்ளது.
மேலும், பாரதிய மஹிளா வங்கியையும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கும்திட்டத்துக்கும் ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த அறிக்கையில் எஸ்.பி.ஐ.தெரிவித்துள்ளது.
30% வருமான வரி செலுத்துவோர் 14 லட்சம் பேர்
நாட்டில் வருமான வரி செலுத்துவோரில் 14 லட்சம் பேர் மட்டுமே 30 சதவீத வரிவரம்புக்குள் வருவதாக வருமான வரித் துறையின் புள்ளிவிவரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2011-12 நிதி ஆண்டு (2012-13 ஆய்வாண்டு) புள்ளிவிவரங்களின்படி, நாட்டில்வருமான வரி செலுத்துவோர் மொத்த எண்ணிக்கை 2.89 கோடியாக இருந்தது.அதில், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டுவதாக 14 லட்சம்பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அதிகபட்ச அளவான 30 சதவீத வருமான வரியை 14 லட்சம் பேர்மட்டுமே செலுத்தினர். ஒட்டு மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் இதுவெறும் 4.6 சதவீதம் மட்டுமே.
No comments:
Post a Comment