உலகம் :
ஈரானின் முதல் வான் பாதுகாப்புத் தளவாடம்
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தனது முதல் வான் பாதுகாப்புத் தளவாடத்தின்படங்களை ஈரான் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
"பாவர் 373' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வான் பாதுகாப்புத் தளவாடத்தின்ஏவுகணைகள், ஈரானை நோக்கி வரும் எதிரிகளின் ஏவுகணைகள், விமானங்கள்முதலானவற்றை இடைமறித்து தாக்கி அழிக்க வல்லவை.
ஈரான் மீது சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதித்த காலக்கட்டத்தில்இந்த வான் பாதுகாப்புத் தளவாடத்தை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசத் தடையால் ரஷியாவின் "எஸ்-300' வான் பாதுகாப்புத் தளவாடத்தைப்பெறும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து, அதே போன்ற "பாவர் 373'தளவாடத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் இறங்கியது.
பின்லேடன் குறித்த புத்தகம் எழுதிய அதிரடிப் படை வீரர் அமெரிக்க அரசுக்குரூ.45 கோடி செலுத்த ஒப்புதல்
அல்-காய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை மறைவிடத்தில் தாக்கிகொன்றதைக் குறித்து புத்தகம் எழுதிய அமெரிக்க அதிரடிப் படை வீரர் அதன்மூலம் பெற்ற சுமார் ரூ. 44 கோடியை அமெரிக்க அரசுக்கு செலுத்த ஒப்புக்கொண்டார்.
மேலும், இது தொடர்பான வழக்குக்கு அமெரிக்க அரசு செலவிட்ட தொகையானசுமார் ரூ. 85 லட்சத்தையும் ஏற்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இது தொடர்பான விவரங்களை அமெரிக்க நீதித் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் நிகோல் நவாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்தியா :
ஜனவரியில் மத்திய பட்ஜெட்: நிதியமைச்சகம் திட்டம்
மத்திய பட்ஜெட்டை ஒரு மாதம் முன்னதாகவே தாக்கல் செய்ய மத்தியநிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
வழக்கமாக பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.இதனை சரியாக ஒரு மாதம் முன்னதாக, அதாவது ஜனவரி மாத இறுதியிலேயேதாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்திட்டங்களை நிதியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக முழுமையாகஅமல்படுத்துவதற்கு வசதியாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யும் மாதம், தேதி குறித்துஅரசமைப்புச் சட்டத்தில் உறுதியான விதிகள் இடம் பெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் ஆளுநராக நஜ்மா ஹெப்துல்லா பதவியேற்பு
முன்னாள் மத்திய அமைச்சரான நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநிலஆளுநராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
மணிப்பூர் தலைநகரான இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில்ஞாயிறுக்கிழமை காலை 11.30 மணியளவில் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு அந்தமாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவர், அந்த மாநிலத்தின் 18-ஆவது ஆளுநர் ஆவார். பதவியேற்பு விழாவில்மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபி, மாநில அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேகாலய ஆளுநரான வி.சண்முகநாதன் மணிப்பூர் மாநிலத்தையும் கூடுதலாககவனித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு மாற்றாக மணிப்பூருக்கு நஜ்மாஹெப்துல்லா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு :
"இலக்கிய விழாவையொட்டி விருதுகள்: எழுத்தாளர்கள்விண்ணப்பிக்கலாம்"
ஈரோட்டில் நடைபெறும் இலக்கிய விழாவையொட்டி சிறப்பு விருதுகள்வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவையின் நிறுவனத் தலைவர் கவிஞர்சேலம் பாலன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்ச் சங்கப் பேரவையின் 27-ஆவது ஆண்டு விழா ஈரோடு செங்குந்தர்மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 23-இல் நடைபெறுகிறது.
இதில் திருவள்ளுவர் விருது, ஒüவையார் விருதும், ஒட்டக்கூத்தர் விருது,வாரியார் விருதும், 10 பேருக்கு சாதனைச் செம்மல் விருது ஆகியவற்றுடன் 2015-16இல் வெளிவந்த சிறந்த நூலுக்குப் பரிசும் வழங்கப்பட உள்ளது.
மேலும், அனைத்து தரப்பினருக்கும் மரபுக் கவிதை, புதுக் கவிதை, கட்டுரைப்போட்டி, வெண்பா போட்டி ஆகியனவும், கல்லூரி மாணவர்களுக்காக கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியனவும் நடத்தப்படுகின்றன.
கூடுதல் விவரம் அறிய சேலம் பாலன், நிறுவனத் தலைவர், ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை, 12, சின்னாக் கவுண்டர் நகர், 2ஆம் வீதி, ஈரோடு-4, (செல்லிடப்பேசி: 91500 52927) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால்,மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 5,083 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 4,102 கனஅடியாக இருந்தது. இது சனிக்கிழமை காலை நொடிக்கு 5,083 கன அடியாகஅதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 64.89 அடியாகவும்,அணையின் நீர் இருப்பு 28.46 டி.எம்.சி.யாகவும் இருந்தது. மேட்டூர் அணைக்குநீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால், சம்பா சாகுபடிக்கு தண்ணீர்திறக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு :
ஆடவர் 1,500 மீ. ஓட்டம்: 108 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்றஅமெரிக்கா
ரியோ ஒலிம்பிக் ஆடவர் 1,500 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் மேத்யூசென்ட்ரோவிட்ஸ் தங்கம் வென்றார். இந்தப் போட்டியில் 108 ஆண்டுகளுக்குப்பிறகு தங்கம் வென்றுள்ளது அமெரிக்கா.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 4-ஆவது இடத்தைப் பிடித்த மேத்யூ, ரியோஒலிம்பிக்கில் 3 நிமிடம், 50 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப்பிடித்தார்.
நடப்பு சாம்பியனான அல்ஜீரியாவின் தெüபிக் மாக்லெüபி 3 நிமிடம், 50.11விநாடிகளில் இலக்கை எட்டியதன் மூலம் வெள்ளி வென்றார். அவருக்குஅடுத்தபடியாக நியூஸிலாந்தின் நிகோலஸ் வில்லிஸ் (3:50.24) வெண்கலம்வென்றார்.
தங்கம் வென்றது குறித்துப் பேசிய மேத்யூ, "எனது வாழ்க்கையில் பெற்றிருக்கும்இந்த வெற்றியை வேறு எந்த விஷயத்தோடும் ஒப்பிட விரும்பவில்லை' என்றார்.
1908-இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் மேல் ஷெப்பர்டு, 1500 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார். அதன்பிறகு இந்தப் பிரிவில் கடந்த 108ஆண்டுகளாக யாரும் தங்கம் வெல்லாமல் இருந்த குறையை இப்போது மேத்யூதீர்த்து வைத்திருக்கிறார்.
வர்த்தகம் :
காபி ஏற்றுமதியில் உலக அளவில் இத்தாலி முதல் இடம்
ஜனவரி-ஆகஸ்ட் 2016 (டன்களில்)
இத்தாலி 64,256.6
ஜெர்மனி 24,057.9
ரஷியா 18,337
பெல்ஜியம் 16,728.5
துருக்கி 9,747.3
ஸ்லோவீனியா 8,438.2
ஜோர்டான் 6,926.5
ஸ்பெயின் 6,045.6
போலந்து 5,871.6
கிரீஸ் 4,938.1
அளவு (டன்களில்)
2,46,702
மதிப்பு (ரூ.கோடியில்)
3,623
ஜன.,-ஆக., 15
2,10,278
ஜன.,-ஆக., 15
3,758
தகவல்: காபி வாரியம் (17/08/2016 வரையில்)
எல்.ஜி., சாம்சங் 4ஜி ஸ்மார்ட்போன்களில் ஆர்-ஜியோ இலவச சேவை
ரிலையன்ஸ் ஜியோ (ஆர்-ஜியோ) நிறுவனம், அதன் இலவச 4ஜி சேவையைசாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்களின் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கும்விரிவுபடுத்தியுள்ளது.
ஆர்-ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு சேவையில் வர்த்தக ரீதியில்களமிறங்குவதற்கு முன்பாக சோதனை அடிப்படையில் இலவச 4ஜி சேவையைதனது சொந்த பிராண்டான எல்.ஒய்.எஃப். மொபைல்களில் மட்டுமே வழங்கியது.
இந்த நிலையில், இந்த இலவச 4ஜி சேவையை எல்.ஜி. மற்றும் சாம்சங்நிறுவனங்களின் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் ஆர்-ஜியோஅறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், அளவில்லா அதிவேக 4ஜி இணையதள சேவையை 90நாள்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ரிலையன்ஸ் டிஜிட்டல் (டிஜிட்டல் எக்ஸ்பிரஸ், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினிஉள்பட) உள்ளிட்ட அங்காடிகளில் சாம்சங், எல்.ஜி. நிறுவனங்களின் 4ஜிஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது அடையாளஆவணங்களை சமர்ப்பித்து ஆர்-ஜியோ சிம் கார்டை பெற்று, இந்த சலுகையினைபயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment