1) தெலங்கானா மாநிலத்தில் மேதாக் பகுதியில் அமைய உள்ள என்டிபிசியின் அனல் மின்நிலைய திட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
2) இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது அமெரிக்க பிரைம் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக விமான பார்சல் சேவையைத் தொடங்கியுள்ளது.
3) மகளிருக்கான 400 மீட்டர் நீச்சல் போட்டியில் ஹங்கேரியின் கதின்கா ஹோஸ்ஜூ புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.
4) இந்திய ஜினாஸ்டிக்ஸ் வீராங்கனை திபா கர்மாகர் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.
5) ஈரானின் அணு சக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் அளித்த விஞ்ஞானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
No comments:
Post a Comment