Tuesday 2 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 2nd August

உலகம் :
ஆப்கனில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டினர் தங்கியுள்ள ஓட்டல் மீது, வெடிகுண்டு நிரம்பிய லாரியை மோதச் செய்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், போலீசார் ஒருவர் கொல்லப்பட்டார்.


தெற்காசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டாலும், அவர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் காபூலில் சமீபத்தில், பேரணியாக சென்ற மக்கள் கூட்டத்தில், நிகழ்த்திய குண்டுவெடிப்பில், 80 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தலைநகர் காபூலில் வெளிநாட்டினர் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலை குறிவைத்து, பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்தினர். காபூல் விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள அந்த ஓட்டலை சுற்றிலும், அமெரிக்க கூட்டணிப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
ராஜ்நாத் சிங் வருகைக்கு எதிர்ப்பு : பயங்கரவாதிகள் மிரட்டல்
இஸ்லாமாபாத்: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக, அங்குள்ள பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன்களில் ஒருவனான, பர்ஹான் வானி, சமீபத்தில் கொல்லப்பட்டான்.
இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் பெரும் கலவரம் மூண்டது; இதில், 49 பேர் உயிரிழந்தனர். அங்கு, இயல்புநிலை திரும்பிய நிலையில், ஹூரியத் மாநாடு உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகள், பர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன. இதனால், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில், மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 'சார்க்' எனப்படும், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, உள்துறை அமைச்சரும், பா.., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், நாளை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்கிறார். அவரது வருகைக்கு, அங்குள்ள பயங்கரவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தியா :
முக்கியமான 4 திருத்தங்களுடன் மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா நாளை தாக்கல்: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வாய்ப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா 4 முக்கிய திருத்தங்களுடன் மாநிலங்களவை யில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இப்போது மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விற்பனை வரி வசூலிக்கின்றன. இதற்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை ஜிஎஸ்டி என்ற பெயரில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக, அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான (ஜிஎஸ்டி) மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு மே மாதம் நிறைவேற்றப்பட்டது.
எனினும், மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு போதுமான பெரும்பான்மை பலம் இல்லாத தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரண மாகவும் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
தமிழகம் :
தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்: சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை, தமிழ்நாடு உயர்நீதிமன்றமாகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:-
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. இருந்தாலும், பல்வேறு மொழிகளுக்கு இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு.
இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும், மெட்ராஸ் மாநிலம் என்றே தமிழ்நாடு வழங்கப்பட்டது. இதை மாற்றி தமிழ்நாடு என பெயரிடப்பட வேண்டும் என பலரும் போராடி வந்த நிலையில் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் நீத்தார். அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்று அண்ணாவின் எண்ணத்தைச் செயலாக்கும் வகையில், சங்கரலிங்கனாருக்கு விருதுநகர் மாவட்டத்தில் மணிமண்டபமும் அதிமுக அரசால் அமைத்து, 2015 ஜூன் 19-இல் திறந்து வைக்கப்பட்டது.
விளையாட்டு :
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி: 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று தமிழக வீராங்கனை சாதனை
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், திருச்சியைச் சேர்ந்த ஜெனித்தா ஆன்டோ 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
செர்பியா நாட்டில் உள்ள நாவிஷாட் நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 22 முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றன. இந்தப் போட்டியில் இந்தியா, இஸ்ரேல், ரஷ்யா, செர்பியா, போலந்து உட்பட 10 நாடுகளிலிருந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் பெண்கள் பிரிவில் 9 சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் தேர்வு பெற்ற ஜெனித்தா, இறுதிப் போட்டியில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டிரியாவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை 4 முறை உலக அளவிலான போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடையில்லை: தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம்
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் ஒலிம்பிக் பங்கேற்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இவரது பி-சாம்பிளும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து இருந்ததாக சமீபத்தில் தெரியவந்தது. ஆனால் தான் சாப்பிடும் உணவுப்பொருளில் ஊக்கமருந்து பொருளை கலந்து சிலர் சதி செய்ததாக அவர் குற்றம்சாட்டி வந்தார்.
இது குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணைய டி.ஜி. நரேன் அகர்வால் அறிக்கையில் வாசித்ததாவது, “அதாவது கடந்த காலத்தில் ஜூன் 2-ம் தேதி வரை அவரது சிறுநீர் மாதிரிகளில் ஊக்க மருந்து கலப்பில்லை என்பதை மனதில் இறுத்தினோம், எனவே ஒரு முறை பாசிட்டிவ் என்று வந்துள்ளது அவர் அறியாமல் ஏற்பட்டதாகவே ஆணையம் கருதுகிறது.

வணிகம் :

என்பிபிஏ நடவடிக்கையால் உயிர்காக்கும் மருந்துகளின் விலை 35% குறையும்
தேசிய மருந்து விலை கட்டுப் பாட்டு ஆணையம் (என்பிபிஏ) உயிர்காக்கும் மருந்துகள் சிலவற் றுக்கு உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதன் காரணமாக புற்றுநோய் மற்றும் ஹெச்ஐவி தடுப்பு மருந்துகளின் விலை 35 சதவீத அளவுக்குக் குறையும் என்று கூறப்படுகிறது.
என்பிபிஏ வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிக்கையின்படி, உயிர்காக்கும் மருந்துகள் (என்எல்இஎம்) பட்டியலில் 23 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கான உச்சபட்ச விலையை என்பிபிஏ நிர்ணயம் செய்கிறது. இதன்படி முக்கிய நோய் எதிர்ப்பு மருந்தான டாக்சி சைக்ளின் (100 மி.கி) மருந்தும் இந்தப் பட்டியலில் உள்ளது.
இந்தப் பட்டியலில் மெல் பலான் (2 மிகி), மெல்பலான் (5 மிகி) ஆகிய மருந்துகள் ரத்தப் புற்று நோயைக் குணப்படுத்த பரிந்துரைக்கப்படும் மருந்து களாகும். கருப்பை மற்றும் மார்பக புற்று நோய்க்கும் இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.


No comments: