Wednesday 3 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 3rd August

உலகம் :
சீனா: மனித உரிமை ஆர்வலருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை
சீனாவில் அரசுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டார் என்ற குற்றம்சாட்டுக்கு ஆளான முக்கிய மனித உரிமை செயல்பாட்டாளர் ஹு ஷினெனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சீனாவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசுக்கு எதிராக செயல்படும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், வழகறிஞர்கள் மீது சீன அரசாங்கம், அரசுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றது.
இந்நிலையில் இன்று (செவ்வாய் கிழமை) சீனாவின் முக்கிய மனித உரிமை செயல்பாட்டளரான ஹு ஷிகெனை தியான்ஜின் நீதிமன்றம், அரசுக்கு எதிராக சதி வேளைகளில் ஈடுபட்டார் என்று அறிவித்து ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தியா :
ஜிஎஸ்டி வரி 18%- தாண்டக் கூடாது: மாநிலங்களவையில் .சிதம்பரம் திட்டவட்டம்
ஜிஎஸ்டி மசோதாவை நடைமுறைப்படுத்த இரு அவைகளும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரி 18%க்கு மிகக் கூடாது என்ற உத்தரவாதம் தேவை என்று கூறினார் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் உறுப்பினருமான .சிதம்பரம்.
நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மாநிலங்களவையில் மீண்டும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நான்கு முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள இம்மசோதாவின் நகல் நேற்று மாநிலங்களவை உறுப்பினர்களிடம் சுற்றுக்கு விடப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் தற்போது தனித்தனியாக விற்பனை வரியை வசூலிக்கின்றன. இதற்கு பதிலாக நாடு முழுவதும் ஒருமுனை வரியை கொண்டுவர வழிவகை செய்யும் ஜிஎஸ்டி மசோதாவை கடந்த 2006-ம் ஆண்டில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா 2011-ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
மேற்கு வங்காளத்தின் பெயர் மாறுகிறது: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
மேற்கு வங்காளத்தின் பெயர்வங்காளம்என மாறவுள்ளது.
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான பரிந் துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறும்போது, “எங்கள் மாநிலத்தின் பெயர் வங்க மொழியில் (பெங்காலி) பங்ளா அல்லது பங்கா என்றும் ஆங்கிலத்தில் பெங்கால் (வங் காளம்) என்றும் இருக்க வேண்டும் என பரிந்துரை செய்தோம். மாநிலத் தின் நலன் மற்றும் பாரம்பரியம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது.இதுகுறித்து விவாதிக்க மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெற உள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூட்டமும் நடத்தி இதுகுறித்து விவாதிக்கப்படும்என்றார்.
தமிழகம் :
குற்றங்களை தடுக்க மொபைலில் தகவல் பெற புதுசாப்ட்வேர்’: தமிழகம் முழுவதும் பரவலாக்க திட்டம்
மதுரையைத் தொடர்ந்து வழிப்பறி, விபத்து போன்ற குற்றங்களை முன்கூட்டியே தடுக்க, மொபைல் போனில் புகார் தெரிவிக்கும் புதிய சாப்ட்வேர் திட்டம் தமிழகம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியில் மதுரை குழுவினர் இறங்கியுள்ளனர்.
மதுரை உட்பட பெரு நகரங்களில் நாளுக்கு, நாள் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. ‘‘திருடனா பார்த்து திருந்தாவிடில் திருட்டு ஒழியாது’’ என்பது போல குற்றச் செயல் புரிவோர் அவரவராக திருந்தினால் மட்டும் குற்றம் குறைய வாய்ப்புள்ளது.
இது போன்ற சூழலில் குற்றங் களை முன்கூட்டியே தடுக்க, நவீன தொழில் நுட்பம் மூலம் குற்றம் குறைக்கும் நோக்கில், போலீஸ் நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றம் வகை யில் தொழில் நுட்பக் கல்வி படித்த சில இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மதுரையை சேர்ந்த பொறியா ளர் தினேஷ்பாண்டியன் தலைமை யில் செந்தில், வைஷ்ணவி, ஆண்டாள் ஆகியோர் அடங் கிய குழுவினர்மதுரை சிட்டி ஆப்என்ற சாப்ட்வேரை உருவாகி அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த தொழில் நுட்பம் மூலம் ஆபத்துக்களில் சிக்குவோர், வழியில் குற்றச் சம்பவங்களை மொபைல்கள் மூலம் தகவல்களை போலீஸார் விரைந்து பெற்று, நடவடிக்கை எடுக்கலாம்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்தது.
கடந்த இரு வாரங்களாக காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. கடந்த இரு தினங்களாக நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்தது. இதனால், மேட்டூர் அணைக்கு திங்கள்கிழமை காலை நொடிக்கு 8,035 கன அடியாக வந்துகொண்டிருந்த நீர்வரத்து செவ்வாய்க்கிழமை 5,946 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணையின் நீர் இருப்பு 24.16 டி.எம்.சி.
விளையாட்டு :
இந்தியாவில் முதல்முறையாக டெஸ்ட் விளையாடும் வங்கதேச அணி!
மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்தியாவில் 13 டெஸ்ட், 8 ஒருநாள், 3 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. முதலில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வருகை தந்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இங்கிலாந்து அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. பிறகு, ஆஸ்திரேலியா, அடுத்த வருடம் பிப்ரவரியில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு வங்கதேச அணி இந்தியாவுக்கு வருகை தந்து, முதல்முறையாக இந்தியாவில் டெஸ்ட் விளையாடவுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர். பிப்ரவரி 8 - 12 வரை நடைபெறுகிற டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இத்தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது
வணிகம் :
ஸ்ரீராம் பொதுக் காப்பீடு நிறுவனத்துக்கு ரூ. 15 லட்சம் அபராதம்: இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை
 ஸ்ரீராம் பொதுக் காப்பீடு நிறுவனத்துக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) இந்த அபராதத்தை விதித்துள்ளது. ஸ்ரீராம் பொதுக் காப்பீடு நிறுவனம், அனுமதியில்லாத சேவைகள், அங்கீகரிக்கப்படாத பிரீமியத் தள்ளுபடிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு விதி மீறலில் ஈடுபட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐஆர்டிஏஐ கூறியுள்ளது.
உரிய விதிமுறைகளின் படியே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையான ரூ.15 லட்சத்தை பங்குதாரர்களின் கணக்கிலிருந்து செலுத்த வேண்டும் என்றும், இந்தத் தொகை அறிவிப்பு வெளியிட்ட 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.


No comments: