Wednesday 17 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 17th August

உலகம் :
இடைமறிக்க முடியாத தகவல்களை அனுப்பும் நவீன செயற்கைக்கோள்: சீனா சாதனை
இடைமறித்துத் தெரிந்து கொள்ள முடியாத வகையில் தகவல்களை அனுப்பும் நவீன செயற்கைக்கோளை சீனா ஏவியது.


அந்த நாட்டின் ஜியூகுவான் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இந்த செயற்கைக்கோள் திங்கள்கிழமை நள்ளிரவு 1.40 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஏவப்பட்டதாக சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. 5-ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த சீன விஞ்ஞானி "மிசியஸ்'ஸின் நினைவாக, அவரது பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், "குவான்டம்' அறிவியல் முறையில் இயங்கும் உலகின் முதல் செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
லடாக்கில் இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி இந்திய - சீன எல்லை விவகாரம் தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய சுதந்திர தினத்துக்கு அடுத்த நாளன்று இந்திய - சீன ராணுவ வீரர்கள் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் பிறகு, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் சந்திப்புக் கூட்டம் இந்திய - சீன எல்லையான லடாக் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய ராணுவக் குழுவுக்கு மூத்த அதிகாரி பிரிகேடியர் ஆர்.எஸ்.ராமனும், சீன ராணுவக் குழுவுக்கு மூத்த அதிகாரி கர்னல் ஃபன் ஜன்னும் தலைமை வகித்தனர்.
இந்தியா :
மும்பை ஆளுநர் மாளிகையில் பிரிட்டிஷ் ஆட்சி கால பதுங்கு குழி கண்டுபிடிப்பு
மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் 150 மீ பிரிட்டிஷ் கால பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்த்து குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் செவ்வாயன்று இந்தப் பதுங்கிடத்தைப் பார்வையிட்டார்.
சுமார் 3 மாதங்களுக்கு முன்பு ஆளுநர் வித்யாசாகர ராவிடம் ராஜ்பவனில் இத்தகைய பதுங்கு குழி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து சுரங்கப் பதுங்கு குழியைத் திறக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 7 ஆண்டு சிறை
ரியல் எஸ்டேட் துறையில் கருப் புப் பணத்தை மறைக்க பினாமி பெயரில் சொத்துகளை வாங்கி னால் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
பினாமி பரிவர்த்தனை (தடை) சட்டம் 2016-க்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இப்புதிய சட்டத்தில் பினாமி பரிவர்த்தனை புரிவோர்க்கு கடுமையான தண்டனை வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி
சுதந்திர தினத்தையொட்டி வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடைபெற்றது.
இந்திய, பாகிஸ்தான் எல்லை யான வாகாவில் நாள்தோறும் மாலையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கு பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் நேற்றுமுன்தினம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி இந்திய வீரர்களுக்கு அந்த நாட்டு ராணுவ அதிகாரிகள் இனிப்புகளை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து வாகாவில் நேற்று இந்திய சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு களை வழங்கினர்.
அதன்பின்னர் மாலையில் இருநாடுகளின் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை காண ஆயிரக்கணக்கான இந்தியர்கள் எல்லையில் கூடி யிருந்தனர். இந்திய வீரர்கள் வீர நடை பயின்று தேசியக் கொடியை இறக்கினர். அப்போது ‘பாரத் மாதா கீ ஜே’ என்ற கோஷம் விண்ணை முட்டியது.
தமிழகம் :
சேது கால்வாய் திட்டம் நிறைவேறினால் ரூ.600 கோடியில் புது பாலம்
''சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேறினால் பாம்பனில், 600 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது,'' என, தென் னக ரயில்வேயின் பாலம் தொடர்புடைய முதன்மை பொறியாளர், எஸ்.சொக்கலிங்கம் தெரிவித்தார்.
கூடங்குளம் 2வது அணு உலை மின் உற்பத்தி பணிகள் துவக்கம்
''இரண்டாவது அணு உலையில், மின் உற்பத்தி துவங்க, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது; இதற்கான அடுத்தக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன,'' என, கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறினார்.
இது குறித்து, அவர் அளித்த பேட்டி: கூடங்குளம், முதலாவது அணு உலையில் தற்போது மின் உற்பத்தி நடந்து வருகிறது. 2016 பிப்ரவரியில் இருந்து, தொடர்ந்து, 175 நாட்களாக மின் உற்பத்தி தடையின்றி நடக்கிறது. இதுவரை, 10 ஆயிரத்து, 900 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது அணு உலையில், ஜூலை 10ம் தேதி இரவு, 'கிரிட்டிகாலிட்டி' எனப்படும் அணுப்பிளவு துவங்கியது. இது, மின் உற்பத்திக்கான முதல்நிலையாகும். ஒவ்வொரு நிலையிலும், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற்றே, பணிகளை துவக்க வேண்டும். இந்நிலையில், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி மேற்கொள்ள, 14ம் தேதி அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, மின் உற்பத்திக்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் மின்
உற்பத்தி துவக்கப்படும். இதே வளாகத்தில் மூன்று, நான்காவது அணு உலைகளை அமைக்க அஸ்திவாரம் தோண்டும் பணிகள் பிப்ரவரியில் துவங்கின. கட்டுமான பணிகளை துவங்க, அனுமதிக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
விளையாட்டு :
ஒலிம்பிக் பாட்மிண்டன்: நெ.2 வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீனாவின் வாங் யிகானை கடுமையாகப் போராடி வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதன் மூலம் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்நாட்டு மக்களுக்கு, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார் 21 வயது இளம் வீராங்கனை சிந்து.
மிகுந்த பரபரப்புடன் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடம் பிடித்துள்ளவருமான சீனாவின் வாங் யிகானை 2-0 என்ற கணக்கில் அசத்தலாக வீழ்த்திய சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
மல்யுத்தம்: ஹர்தீப் ஏமாற்றம்
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் ஹர்தீப் சிங் தோல்வியடைந்தார். ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டிகள் நடக்கின்றன. இதன் 98 கி.கி., 'கிரிகோ ரோமன்' பிரிவில் இந்திய வீரர் ஹர்தீப் சிங் பங்கேற்றார். முதல் சுற்றில் இவருக்கு 'பை' வழங்கப்பட, நேரடியாக 'ரவுண்டு-16' சுற்றில் களமிறங்கினார்.
இதில் துருக்கியின் சென்க் இல்டெமை எதிர்கொண்டார். இப்போட்டி, தலா 3 நிமிடங்கள் கொண்ட இரண்டு சுற்றுக்களாக நடக்கும். முதல் சுற்றில் 0-2 என, பின்தங்கினார் ஹர்தீப்.
தொடர்ந்து அடுத்த சுற்றிலும் சொதப்பிய ஹர்தீப், 1 புள்ளி மட்டும் பெற்றார். முடிவில், ஹர்தீப் 1-2 என்ற கணக்கில் வீழ்ந்தார்.
வணிகம் :
பணக்காரர்கள் விரும்பும் ஹோட்டல் பட்டியலில் நியூயார்க்கின் ‘தி பிளாசா’ முதலிடம்
சர்வதேச அளவில் பணக்காரர்கள் விரும்பும் ஹோட்டல்கள் பட்டியலில் நியூயார்க்கில் உள்ள சஹாரா குழுமத்திற்குச் சொந்தமான `தி பிளாசா’ முதலிடத்தை பிடித்துள்ளது.
நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வின்படி உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் தங்க விரும்புவதற்குரிய ஹோட்டல் பட்டியலில் `தி பிளாசா’ முதலிடத்தை பிடித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள `செயிண்ட் ரெஹிஸ் ரெசிடன்ஸ்’ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
சஹாரா குழுமத்திற்கு லண்டனில் கிராஸ்வெனார் ஹவுஸ், நியூயார்க்கில் `தி பிளாசா’, `ட்ரீம் நியூயார்க்’ என மூன்று ஹோட்டல்கள் உள்ளன. இந்த மூன்று ஹோட்டல்களிலும் மேலும் முதலீடு செய்ய சஹாரா குழுமம் முயற்சித்து வருகிறது.


No comments: