Saturday 20 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 20th August

உலகம் :

விதிமுறை மீறல்:3.6 லட்சம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்
கடந்த 2015- ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறிசெயல்பட்ட 3.6 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும்தெரிவித்துள்ளதாவது:சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்குஆதரவை திரட்டும் வகையில் விதி முறைகளை மீறிசெயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த ஆண்டு முதல் 3.60லட்சம் டுவிட்டர் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவந்தன.
இந்தியா :
பொருளாதாரத் துறையில் ஒத்துழைப்புஇந்தியாசீனாபேச்சுவார்த்தை
வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்பைஅதிகரிப்பது குறித்துஇந்தியாவும்சீனாவும் வெள்ளிக்கிழமைபேச்சுவார்த்தை நடத்தின.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்தியா-சீனா நிதி மற்றும்பொருளாதார விவகார ஆலோசனைக் குழுவின் 8-ஆவது ஆண்டுகூட்டம் நடைபெற்றதுஇதில்இந்தியத் தரப்பில் பொருளாதாரவிவகாரத் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தலைமையில்நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் உயரதிகாரிகள் குழுகலந்து கொண்டதுசீனத் தரப்பில்நிதித் துறை இணையமைச்சர்ஷி யோபின் தலைமையில் அந்நாட்டு குழு கலந்து கொண்டது.
"பிரிக்ஸ்மகளிர் 2 நாள் மாநாடுராஜஸ்தானில் இன்றுதொடக்கம்
"பிரிக்ஸ்அமைப்பு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற பெண்உறுப்பினர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம்,ஜெய்ப்பூரில் வரும் சனிக்கிழமை (ஆக.20) தொடங்க உள்ளது.
இந்த மாநாட்டில் பிரேஸில்ரஷியாஇந்தியாசீனாதென்ஆப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளைச்சேர்ந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் 42 பேர்பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தொடக்கிவைக்கிறார்.
இந்த மாநாட்டில் பிரேஸில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் 5பேர்ரஷியாவிலிருந்து 3 பேர்இந்தியாவிலிருந்து 28 பேர்,சீனாவிலிருந்து 2 பேர்தென் ஆப்பிரிக்காவிலிருந்து 4 பேர்பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பங்கேற்றுதொடக்க உரை நிகழ்த்துவார்இரண்டாவது நாளின் நிகழ்ச்சிமுடிவில் சுமித்ரா மகாஜன் நிறைவுரை நிகழ்த்த உள்ளார்.
தமிழ்நாடு :

வரும் 29-ம் தேதி புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்புதுச்சேரிமுதல்வர் நாராயணசாமி
புதுவை மாநிலத்துக்கான நிதிநிலை அறிக்கை ஆக. 29-ஆம் தேதிதாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமிதெரிவித்தார்.
முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவைபதவியேற்ற பின்னர் புதுவை மாநிலத்துக்கான நிதிநிலை அறிக்கைவெளியிடுவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள்நடைபெற்று வந்தனஇந்நிலையில் நிதிநிலை அறிக்கைதொடர்பான முடிவு எடுக்கப்பட்டுஆகஸ்ட் 24-ஆம் தேதி பட்ஜெட்கூட்டத்தொடர் தொடங்கும் என்று புதுவை அரசு கடந்த சிலநாள்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.
உலகத் தமிழர் பொருளாதார மாநாடுசென்னையில் அக்டோபர்2-இல் தொடக்கம்கயானா பிரதமர் பங்கேற்பு
சென்னையில் 3-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும்அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை 3 நாட்கள்நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக புரவலரும்தொழிலதிபருமான ஜெம் வீரமணி,மாநாட்டின் அமைப்பாளரும்சென்னை வளர்ச்சிக் கழகத்தின்தலைவருமான வி.ஆர்.எஸ்.சம்பத் ஆகியோர்சென்னையில்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர்.தமிழர்களில் சிறந்த தொழில் முனைவோர்தொழில் அதிபர்கள் எனபலரும் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் மற்ற இனக்குழுக்களைப் போல் தமிழர்கள் வளர்ச்சி பெறவில்லைஇதற்குதொடர்பின்மைதான் காரணம்.
விளையாட்டு :
4*100 மீதொடர் ஓட்டத்திலும் ஹாட்ரிக் தங்கம்உசேன் போல்ட்சாதனை!
ரியோ ஒலிம்பிக் ஆடவர் 400*100 மீதொடர் ஓட்டத்தில் நடப்புசாம்பியனான ஜமைக்காவின் உசேன் போல்ட் தங்கப் பதக்கம்வென்று சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் 120 ஆண்டுகால நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீ.மற்றும் 200 மீ., 4*100 மீதொடர் ஓட்டங்களில் தொடர்ந்து மூன்றுமுறை தங்கம் வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையைப்படைத்துள்ளார் போல்ட்.
இன்று நடைபெற்ற 4*100 மீதொடர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றில்உசேன் போல்ட்டைக் கொண்ட  ஜமைக்கா அணி 37.27 விநாடிகளில்இலக்கை எட்டி தங்கம் வென்றதுஅடுத்தபடியாக ஜப்பான்வெள்ளியும் கனடா வெண்கலமும் வென்றன.
வரலாறு படைத்தார் சிந்து!
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் வெள்ளிக்கிழமைநடைபெற்ற இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கரோலினா மரின் 19-21, 21-12, 21-15 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி தங்கம்வென்றார்.
முதல் செட்டின் ஆரம்பத்தில் சற்று தடுமாறிய சிந்துபின்னர்அபாரமாக ஆடகரோலினாவுக்கு நெருக்கடி ஏற்பட்டதுஒருகட்டத்தில் 16-19 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த சிந்துஅடுத்த 5கேம்களை
தொடர்ச்சியாக வென்று முதல் செட்டை 21-19 என்ற கணக்கில்கைப்பற்றினார்.
வர்த்தகம் :
எஸ்.பி..யின் 3 துணை வங்கிகளை இணைக்க நிர்வாகக் குழுஒப்புதல்
மூன்று துணை வங்கிகளை இணைக்க பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்.பி..) நிர்வாகக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இதுகுறித்து மும்பை பங்கு சந்தைக்கு எஸ்.பி..தெரிவித்துள்ளதாவது:
ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் & ஜெய்ப்பூர் (எஸ்.பி.பி.ஜே.), ஸ்டேட்பேங்க் ஆப் மைசூர் (எஸ்.பி.எம்.), ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர்ஆகிய மூன்று துணை வங்கிகளை இணைத்துக் கொள்ள பாரதஸ்டேட் வங்கியின் இயக்குநர் குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்பாரதிய மஹிளா வங்கியையும் பாரத ஸ்டேட் வங்கியுடன்இணைக்கும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்தஅறிக்கையில் எஸ்.பி.தெரிவித்துள்ளது.

No comments: