Thursday 25 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 25th August

உலகம் :
இத்தாலி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 247 ஆக உயர்வு
மத்திய இத்தாலியின் ரோம் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளது.


ரோம் நகரில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநகடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகி இருந்ததுநிலநடுக்கத்தினால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. இதனால், எண்ணற்றோர் வீடுகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 247 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இலங்கைக்கு இந்தியா ரூ.30 கோடி நிதியுதவி
இலங்கைக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா ரூ.30 கோடி (300 மில்லியன்) நிதியுதவி அளிக்கவுள்ளது.
இதுதொடர்பாக கொழும்பில் இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கயந்தா கருணதிலக செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
இலங்கையின் ஹம்பன்தோட்டா மாவட்டத்தில் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ. 30 கோடி அளிக்க இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிதியின் ஒரு பகுதி, இம்மாவட்டத்தில் மீனவ கிராமங்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா முன்வைத்த திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை இரு நாடுகளுக்கும் இடையே செய்து கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார் கருணதிலக.
நேபாளப் பிரதமர் அடுத்த மாதம் இந்தியா வருகை
நேபாள நாட்டின் புதிய பிரதமர் புஷ்ப கமல் தஹல் (பிரசண்டா), தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை அடுத்த மாதம் இந்தியாவில் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின்போது, இந்தியா-நேபாளம் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.
இந்தியா :
உறியடி திருவிழாவில் 20 அடிக்கும் உயரமாக மனித பிரமிடு அமைக்க கூடாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் உறியடி திருவிழாவில் 20 அடிக்கும் உயரமாக மனித பிரமிடு அமைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
விமானப் படை விமானம் மாயம்: சந்தேகப் பகுதியில் மறு ஆய்வு
இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன்-32 கடற்படை விமானம் மாயமான நிலையில், சந்தேகப் பகுதியில் மறு ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது.
சென்னைக்கு அருகே கடலுக்கு அடியில் சந்தேகப் பொருட்கள் கிடைத்த இடத்தில் சமுத்ரா ரத்னாகர் கப்பல் மறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சந்தேகப் பொருட்கள் காணாமல் போன விமானத்தின்  பாகங்களா என்பதை உறுதி செய்ய ஒரு வாரம் ஆய்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே மாயமான விமானம் விழுந்ததாகக் கருதப்படும் இடத்தில் கடலுக்கு அடியில் சந்தேகத்துக்குரிய வகையில் 14 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை மாயமான விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தமிழ்நாடு :
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு: தமிழக அரசு தகவல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அக்டோபரில் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் திமுக, பாமக ஆகிய இரு கட்சிகளும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரனும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விளையாட்டு :
சர்வதேச டென்னிஸ்: காலிறுதியில் பயஸ் ஜோடி
வின்ஸ்டன்-சலேம் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஜெர்மனியின் ஆன்ட்ரே பெஜிமான் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்காவின் வின்ஸ்டன்-சலேம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பயஸ்-பெஜிமான் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ் குசியோன்-பிரேசிலின் ஆன்ட்ரிஸா ஜோடியை தோற்கடித்தது.
பயஸ்-பெஜிமான் ஜோடி தங்களின் காலிறுதியில் போலந்தின் லூகாஸ் குபோட்-செர்பியாவின் நீனாட் ஜிமோன்ஜிக் ஜோடியை சந்திக்கிறது. பயஸுடன் ஜோடி சேர்ந்து விளையாடும் 108-ஆவது வீரர் பெஜிமான் என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ வந்தது ஒலிம்பிக் கொடி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 2020-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஒலிம்பிக் கொடி புதன்கிழமை டோக்கியோ வந்தது.
இதற்காக டோக்கியோவின் ஹானேடா விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அந்நகர ஆளுநர் யூரிகோ கோய்கே ஒலிம்பிக் கொடியுடன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "ஒலிம்பிக் போட்டியை நடத்தும் மிகப் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதை உணர்கிறேன். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒலிம்பிக் கொடியை மீண்டும் இங்கு கொண்டு வந்ததில் மகிழ்ச்சி' என்றார்.
முன்னதாக, கடந்த 1964-ஆம் ஆண்டு டோக்கியோவில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நிலையில், தற்போது 2020-ஆம் ஆண்டு 2-ஆவது முறையாக நடைபெற உள்ளது.
வர்த்தகம் :
2 சதவீத வட்டி குறைப்பு தேவை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
நிதி நெருக்கடியில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 2 சதவீத வட்டி குறைப்பு அவசியம் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார். அதே சமயத்தில் ஒரே முறை வட்டியை குறைக்க வேண்டுமா அல்லது படிப்படியாக வட்டியை குறைக்க வேண்டுமா என்பது குறித்து எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.


No comments: