1) சென்னையில் உள்ள ஐசிஎப் ரயில்பெட்டி தொழிற்சாலை, நாட்டிலேயே சிறந்தது என மத்திய ரயில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
2) பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவில் 31-வதுஒலிம்பிக் திருவிழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கண்கவர்கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
3) ஒலிம்பிக் வில்வித்தை ஆண்களுக்கான தனிநபர் ரீகர்வ் போட்டியின் தரநிலைப்போட்டியில் இந்தியாவின் அட்டானு தாஸ் 683 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடம் பிடித்தார்.
3) ஒலிம்பிக் வில்வித்தை ஆண்களுக்கான தனிநபர் ரீகர்வ் போட்டியின் தரநிலைப்போட்டியில் இந்தியாவின் அட்டானு தாஸ் 683 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடம் பிடித்தார்.
4) உலக பள்ளிகள் தடகள வாகையர் போட்டிகளில் வெற்றி பெற்ற 4மாணவர்களுக்கு ரூ.1.20 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் ஜெயலலிதா இன்றுதலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
5) இந்தியாவில் கடந்த 2014-15-ம் நிதியாண்டில் 3,068 தொண்டு நிறுவனங்கள்(என்ஜிஓ) ரூ.22 ஆயிரம் கோடிக்கு மேல் வெளி நாட்டு நன்கொடை பெற்றுள்ளன.
No comments:
Post a Comment