Thursday 18 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 18th August

உலகம் :
பயங்கரவாதத்தை ஒடுக்க முழு மூச்சுடன் பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்: அமெரிக்கா
தங்கள் நாட்டில் மட்டுமல்லாது இந்தியத் துணைக்கண்ட பிராந்தியம் முழுவதிலும் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறவிடாமல் தடுக்க பாகிஸ்தான் முழு மூச்சுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.



இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தங்களது நாட்டில் மட்டுமல்லாது அண்டை நாடுகள் உள்பட பிராந்தியம் முழுவதிலும் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற விடாமல் தடுப்பதற்கு பாகிஸ்தான் முழு மூச்சுடன் ஒத்துழைக்க வேண்டும்.
இந்தியா :
ஜனவரிக்குள் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளத் திட்டம்
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் இதுதொடர்பான முகாம்கள் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்கான அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மாநில வாரியாக மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், வரும் ஜனவரி 1-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவர்களை விட அதிக அளவில் இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும், கடந்த ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும் நடத்தியது. இந்த 2 கட்ட தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ நேற்று முன்தினம் வெளியிட்டது.
தமிழகம் :
வங்க கடலில் புயல் சின்னம்: பாம்பனில் 1ம் நம்பர் கூண்டு
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால், ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில், 1ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மேற்குவங்கம் - ஒடிசா இடையே, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து, ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எச்சரிக்கும் விதமாக, பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில், நேற்று மதியம், 1ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், படகுகளை கடற்கரையில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்குமாறு மீனவர்களுக்கு, மீன் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ராமேஸ்வரம் தீவு, மண்டபம் பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக நேற்று, வெப்ப சலனத்துடன் மேகமூட்டம் காணப்பட்டது.
கேல் ரத்னா விருது: ஜிது ராய் பெயர் பரிந்துரை
விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜிது ராயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தேசிய ரைபிள் சங்கச் செயலர் ராஜீவ் பாட்டியா கூறுகையில், "ஜிது ராய்க்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைத்துள்ளோம். இதுதவிர மற்ற வீரர்களான குருபிரீத் சிங், பிரகாஷ் நஞ்சப்பா மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அபூர்வி சண்டீலா ஆகியோரின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளோம்' என்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ள ஜிது ராய், தற்போது நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச்சுற்று வரை முன்னேறி 8-ஆவது இடத்தை பிடித்தார். ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் தரவரிசையில் ஜிது ராய் 3-ஆவது இடத்தில் உள்ளார்.
விளையாட்டு :
வெண்கலம் வென்றார் சாக்ஷி மாலிக்
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் உடன் நடந்த இப்போட்டியில் 12-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற சாக்ஷி மாலிக் , வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது.
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் தீபிகா-கோஷல் ஜோடி
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல்-செüரவ் கோஷல் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் தீபிகா-கோஷல் ஜோடி 10-11, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் சகநாட்டு ஜோடியான ஜோஷ்னா சின்னப்பா-ஹரிந்தர் பால் ஜோடியை வீழ்த்தியது.
வியாழக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் இந்திய ஜோடி, நியூஸிலாந்தின் ஜோலே கிங்-பால் கோல் ஜோடியை சந்திக்கிறது.
மகளிர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல்-ஜோஷ்னா சின்னப்பா ஜோடி 5-11, 10-11 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ரச்சேல் கிரின்ஹாம்-டோனா ஜோடியிடம் தோல்வி கண்டது. இதனால் இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.
வணிகம் :
ஆதார் மூலம் சிம்கார்டு: உடனடி இணைப்பு
புதிய சிம்கார்டு வாங்குவதற்கான நடைமுறைகளில் புதிய முறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி ஆதார் அடை யாள அட்டை அடிப்படையில் இணையதளம் மூலமாகவே புது சிம்கார்டுக்கான ஆக்டிவேஷன் முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புது சிம்கார்டுக்கான விண்ணப்பம் செய்வதும் சரிபார்ப்பு வேலைகளும் எளிதாகிறது. காகிதங்களும் செலவிடத் தேவையில்லா நிலை உருவாகிறது.
ப்ரீ-பெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் இணைப்புகள் வாங்க ஆதார் அட்டை மற்றும் கைவிரல் ரேகை இரண்டையும் சம்பந்தப்பட்ட சிம்கார்டு விற்பனையாளரிடம் கொடுத்தால் போதும்.
மத்திய அரசு இது தொடர்பாக -கேஒய்சி வழிகாட்டுதல்களை நேற்று அறிவித்துள்ளது. இதன் மூலம் இணையதளம் மூலமான விண்ணப்பம், அதன் நம்பகத்தன்மையை சோதிப்பது உள்ளிட்ட வேலைகள் எளிமையாகவும் வேகமாகவும் தகவல் தொடர்பு நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும்.
2020-ஆம் ஆண்டுக்குள் 73 கோடி மக்களிடம் இணையதளம் வசதியிருக்கும்
இணையதளம் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயரும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக இந்தி யாவில் 2020 ஆம் ஆண்டுக்குள் 73 கோடி பேர் இணையதளம் பயன் படுத்துவார்கள் என்று கூறியுள்ளது.
இணையதளம் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை கிராமப் புறங்களிலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இணையதளம் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயரும் என்று நாஸ்காம் மற்றும் அக்கமய் டெக்னாலஜீஸ் மேற்கொண்டஇந்தியாவின் இணையதள எதிர்காலம்என்கிற ஆய்வில் தெரியவந்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் 35 கோடி பயனாளிகளாக இருந்த எண்ணிக்கை 2020-ம் ஆண்டுக்குள் 73 கோடியாக அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

No comments: