Wednesday 31 August 2016

Daily Current Affairs For Competitive Exam - 31st August

உலகம் :
சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ள இந்திய-அமெரிக்க ஒப்பந்தம்
இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவத் தளவாட பகிர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.


இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா தனது ராணுவத்தை இந்திய நிலைகளில் குவிக்க வாய்ப்புள்ளதால், ஆசிய பிராந்தியத்தில் வல்லரசு நாடாக உள்ள சீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தியா :
தெலங்கானா, மிஸோரம், சிக்கிம் பேரவைகளில் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஒப்புதல்
தெலங்கானா, மிசோராம், சிக்கிம் ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவைகளில் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவுக்கு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வழிவகை செய்யும் ஜிஎஸ்டி மசோதா, நாடாளுமன்றத்தில் இம்மாதத் தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டது.
15 மாநிலச் சட்டப்பேரவைகளில் இம்மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி மசோதாவுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
தமிழ்நாடு :
பள்ளிக் கல்வி அமைச்சரானார் மாஃபா கே.பாண்டியராஜன்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.
தமிழக அமைச்சரவையில் திங்கள்கிழமை சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, அமைச்சரவையில் இருந்து கே.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கே.பாண்டியராஜன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, பாண்டியராஜன் அமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: பெயர் சேர்க்க ஒரு மாதம் அவகாசம்
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும் வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 1) முதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரி மாறி இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாக இப்போது புழக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வரும் வியாழக்கிழமை (செப்.1) முதல் வைக்கப்படுகிறது.
விளையாட்டு :
அமெரிக்க ஓபன்: ஜோகோவிச், நடால், கெர்பர் முதல்சுற்றில் வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல்சுற்றில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச், நடால் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், வெனிசூலாவின் கார்பின் முகுருஸா ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
லண்டன் ஒலிம்பிக் யோகேஷ்வர் தத்துக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது
லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் வென்ற வெண்கலப் பதக்கம், தற்போது வெள்ளிப் பதக்கமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
யோகேஷ்வர் போட்டியிட்ட 60 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரஷியாவின் பெசிக் குடுகோவ் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து, அவரது பதக்கம் பறிக்கப்பட்டு யோகேஷ்வருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் :
இந்தியன் ஆயில் லாபம் 25% அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (..சி.) முதல் காலாண்டு லாபம் 25 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ..சி. நிறுவனம் ரூ.1,14,200.24 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.1,14,200.24 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் குறைவாகும்.


No comments: